பத்தாம் வகுப்பு – சமூக அறிவியல் (குடிமையியல்) 5 மதிப்பெண் வினா-விடைத் தொகுப்பு

 

பத்தாம் வகுப்பு – சமூக அறிவியல் (குடிமையியல்) 5 மதிப்பெண்வினா-விடைத் தொகுப்பு

 அலகு 1

இந்திய அரசியலமைப்பு

1. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக

  • உலகிலுள்ள எழுதப்பட்ட எல்லா அரசியலமைப்புகளிலும் மிகவும் நீளமானது.
  • இதன் பெரும்பாலான கருத்துக்கள் பல்வேறு நாடுகளிடமிருந்து பெறப்பட்டன.
  • இது நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மை கொண்டதாக உள்ளது.
  • சிறு கூட்டாச்சி அரசாங்கத்தை ஏற்படுத்துகிறது.
  • மாநிலங்களிலும் பாராளுமன்ற முறையை தோற்றுவிக்கிறது.
  • இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக்குகிறது
  • சுதந்திரமான நீதித்துறையை ஏற்படுத்துகிறது.
  • ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது
  • 18-வயது நிரம்பிய அனைவரும் பாகுபாடின்றி வாக்குரிமை
  • சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் சலுகைகள்.

2. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக

  • இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 3(111)ல் சட்டப்பிரிவு 12-35 வரை அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகிறது.
  • முதலில் 7 உரிமைகள் தற்போது 6 உரிமைகள்
  • இது இந்தியாவின் மகாசாசனம்.

சமத்துவ உரிமை (பிரிவு 14-18)

  • சட்டத்தின் முன் அனைவரும் சமம், சாதி, மத, இன, பால் பாகுபாடு இல்லை ,பொது வேலையில் சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, சில பட்டங்களை நீக்கல்.

சுதந்திர உரிமை (பிரிவு 19-22)

  • பேச்சுரிமை, கருத்துரிமை, சங்கம் அமைக்க உரிமை, குற்றவாளிகள் பாதுகாப்பு பெறும் உரிமை, வாழ்க்கை மற்றும் தனிபட்ட சுதந்திர பாதுகாப்பு, தொடக்க கல்வி பெறும் உரிமை, கைது செய்து காவலில் வைப்பது பற்றி பாதுகாப்பு உரிமை.

சுரண்டலுக்கெதிரான உரிமை (பிரிவு 23,24)

  • கட்டாய வேலை, கொத்தடிமை முறை, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு

சமயச்சார்பு உரிமை (பிரிவு 25-28)

  • எந்த ஒரு சமயத்தையும் ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும், நிர்வகிக்கவும் உரிமை

கல்வி, கலாச்சார உரிமை (பிரிவு 29-30)

  • சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, கலாச்சார பாதுகாப்பு, கல்வி நிறுவனங்கள் நிறுவி நிர்வகிக்கும் உரிமை.

அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை (பிரிவு 32)

  • அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறுதல்

3. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றி எழுதுக

  • இது சட்டப்பிரிவு 32 ஆகும்
  • நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை (அ) ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
  • இந்த ஆணைகள் மூலம் மக்களை காப்பதினால் உச்சநீதிமன்றம் ‘அரசியலமைப்பின் பாதுகாவலன் எனப்படுகிறது.
  • சட்டப்பிரிவு 32 – இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ ஆகும்
  • உச்ச, உயர்நீதிமன்றங்கள் 5 வகையான நீதிப்பேராணைகளை வெளியிடுகின்றன.

ஆட்கொணர் நீதிப்பேராணை

  • சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்வதை பாதுகாத்தல்

கட்டளை நீதிப்பேராணை

  • ஒருவர் சட்ட உதவியுடன் தனது பணியை நிறைவு செய்தல்

தடையுறுத்தும் நீதிப்பேராணை

  • கீழ்நீதி மன்றம் சட்ட எல்லையை மீறாமல் தடுக்கிறது

ஆவணக் கேட்பு நீதிப்பேராணை

  • உயர்நீதிமன்றம் கேட்கும் ஆவணங்களை கீழ்நீதிமன்றங்கள் அனுப்ப இடும் ஆணைகள்.

உரிமை வினவு நீதிப்பேராணை (அ) தகுதி முறை வினவு

  • சட்டத்திற்கு புறம்பாக அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்தல்
  • சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடை செய்ய நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணைகள்.

அலகு – 2

நடுவண் அரசு

1. இந்திய குடியரசுத் தலைவரின்சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை விவரி.

சட்டமன்ற அதிகாரங்கள்

  • பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டுத் தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார்.
  • ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது. குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்,
  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் இவரது ஒப்புதல் பெற்று சட்டமாகிறது.
  • இவருக்கு மக்களவையைக் கலைக்க அதிகாரம் உண்டு,
  • இவர் மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களை நியமிக்கிறார்.

நீதி அதிகாரங்கள்;

  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 72வது பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்தி வைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும் மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
  • இவர் தன்னுடைய இவ்வதிகாரத்தைச் செயல்படுத்துவதில் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

2 இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிவரையறைகள் மூன்றினை விளக்குக. உச்ச நீதிமன்றம் ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன்’ ஆகும் 1. தனக்கே உரிய நீதி வரையறை

  • இந்திய அரசிற்கும், ஒரு மாநிலம் அல்லது மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள் தீர்த்தல்
  • அடிப்படை உரிமைகள் மீது ஏற்படும் சிக்கல்களை தீர்க்க நீதிப்பேராணைகள் வழங்குதல்

2. மேல்முறையீடு நீதிவரையறை

  • உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்
  • மாநில உயர்நீதி மன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிரானமேல்முறையீடு வழக்குகளை விசாரிக்கிறது.)

ஆலோசனை நீதி வரையறை

  • பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டம் தொடர்பான ஆலோசனையை குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது.

இதர நீதி வரையறை

  • உச்ச நீதிமன்ற சட்டம் நாட்டில் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்
  • தனது அமைப்பின் மீது முழுகட்டுப்பாடு, வழிமுறைகளை ஒழுங்குபடுத்துதல்

நீதிப்புனராய்வு

  • ஒரு சட்டத்தை அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்தல்
  • மத்திய, மாநில அரசுகளின் பிரச்சனைகள் தீர்த்தல்
  • அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல்

3. இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?

  • அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 78 பிரதமரின் பணிகள் மற்றும் கடமைகள் பற்றி கூறுகிறது.

பணிகள் :

  • அமைச்சர்களின் நிலையை அறிந்து அரசின் துறைகளை ஒதுக்குதல்
  • தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நிகழ்ச்சி நிரல் குறித்த முடிவு
  • இவர் அமைச்சரவையின் தலைவராகவும், பிற அமைச்சர்கள் இவருடன் பணியாற்றுவார்கள்.
  • பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுதல், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை.

கடமைகள் :

  • அமைச்சரவையின் முடிவுகள் (மத்திய அரசு விவகாரம், சட்ட முன்மொழிவு) குறித்து குடியரசுத் தலைவருடன் விவாதித்தல்.
  • குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் பாலமாக செயல்படுதல்
  • நாட்டின் தலைவராகவும், செய்தி தொடர்பாளராகவும் செயல்படுதல்.
  • சர்வதேச மாநாடுகளில் (காமன்வெல்த், சார்க், அணிசேரா) நாட்டின்சார்பாக
  • பங்குபெறுதல்.

4. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் திறனாய்வு செய்க அதிகாரங்கள்;

  • குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம்
  • உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், இந்திய தலைமை கணக்கு- தணிக்கையாளர் ஆகியோரை சட்ட விதிகளின்படி பதவி நீக்கம் செய்யும் அதிகாரம்.
  • மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திடும் அதிகாரம்
  • நிர்வாகத்தினை கேள்வி, துணை கேள்வி கேட்டல்
  • தீர்மானங்களை அவையில் கொண்டுவருதல் விவாதித்தல், ஒத்தி வைத்தல், நிறைவேற்றல் போன்ற அதிகாரங்கள்.

பணிகள்;

  • சட்டமியற்றுதல், நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல், வரவு – செலவு திட்டம் நிறைவேற்றல் பணிகள்
  • பொது மக்கள் குறையை போக்குதல், வளர்ச்சித் திட்ட பணிகள்
  • சர்வதேச உறவுகள், உள்நாட்டுக் கொள்கைகள் விவாதித்தல்

அலகு – 3.

மாநில அரசு

  1. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?

அமைச்சரவை தொடர்பானவை;

  • இவரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களைநியமித்தல்
  • அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்குதல், தனது அமைச்சரவை மாற்றியமைத்தல்
  • அமைச்சரவை கூட்டம், அமைச்சர்களை தலைமை ஏற்று வழி நடத்துதல்

ஆளுநர் தொடர்பானவை;

  • ஆளுநர், அமைச்சரவை இடையே முதன்மை செய்தி தொடர்பாளர்
  • முக்கிய அரசு அலுவலர்களின் நியமனங்களில் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குதல்

சட்டமன்றம் தொடர்பானவை

  • சட்டமன்றம் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குதல்
  • சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகள், மசோதாக்கள் அறிமுகம்
  • எந்த நேரத்திலும் சட்டமன்றத்தை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரை

இதர அதிகாரங்கள் மற்றும் பணிகள்

  • தனது கட்சியை கட்டுபடுத்தி, ஒழுக்கத்தை மேம்படுத்துதல்
  • மக்களின் தேவையை உற்று நோக்கி பணிகளையும், துறை செயலர்களையும் மேற்பார்வையிட்டு ஒருங்கிணைத்தல்
  • மத்திய அரசுடன் சுமுகமான உறவு

2.ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி?

  • ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார்
  • ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும் சட்டமன்றத்தை கலைக்கவும் உரிமை பெற்றுள்ளார்.
  • பொதுத்தேர்தல் முடிந்து முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் நியமனத்திற்குப் பிறகு நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தின் முதல் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்.
  • நிலுவையிலுள்ள மசோதா குறித்து, சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.
  • ஆங்கிலோ – இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்.
  • மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட, எந்த ஒரு மசோதாவையும், மாநில உயர்நீதி மன்றத்திற்கு தீங்கு விளைவிக்கும் நிலையில் இருக்குமாயின் அதனை, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.

 3. அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க

  • மாநில அரசின் கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துதல்
  • சட்டமன்ற நிகழ்ச்சிகளை திட்டமிடல் முக்கிய மசோதாக்களை கொண்டு வருதல்
  • நிதிக் கொள்கை கட்டுப்பாடு, மாநில வரிக்கொள்கை முடிவு
  • முக்கிய துறைத் தலைவர்கள் நியமனம்
  • மாநில பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
  • ஆண்டு வரவு செலவு திட்டம் இறுதி செய்தல்
  • சாதாரண மசோதா, பண மசோதா சட்டமன்றத்தில் அறிமுகம்
  • கீழ் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஆளுநருக்கு ஆலோசனை.
  • மாநில அரசின் செலவுகளை சமாளிக்க கருத்து உருவாக்கம்

அலகு-4

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

1. அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக

அணிசேரா இயக்கம்:

  • இச்சொல்லை 1953 ஐ.நா. உரையில் வி.கிருஷ்ணமேனன் உருவாக்கினார்
  • அணிசேராமை இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சம்
  • அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரு வல்லரசுகளின் ஆதிக்கத்தை எதிர்த்து அணிசேரா இயக்கம் என்ற வழியை நேரு தேர்ந்தெடுத்தார்.

நோக்கம் :

  • ராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரம் பராமரித்தல், பிரச்சனைகளை நாடுகள் சுதந்திரமாக தீர்மானித்தல் 120 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது
  • இது ஒரு அரசியல் இயக்கத்திருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் அடைந்துள்ளது

நிறுவனத் தலைவர்கள்

நிறுவனத் தலைவர்கள்    நாடு

நேரு                               – இந்தியா

நாசர்                              – எகிப்து

நுக்ருமா                         – கானா

சுகர்னோ                       – இந்தோனேசியா

டிட்டோ                         – யூகேஸ்லோவியா

2. வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகளைப் பற்றி விவாதிக்கவும்

  • இயற்கை வளம்
  • ராணுவ வலிமை
  • சர்வதேச சூழல்
  • பொருளாதார வளர்ச்சியின் அவசியம்
  • அரசியல் நிலைத்தன்மை, அரசாங்க அமைப்பு
  • நாட்டின் புவியில் அமைப்பு மற்றும் பரப்பளவு
  • நாட்டின் வரலாறு, பாரம்பரியம், தத்துவத்தின் அடிப்படை
  • அமைதிக்கான அவசியம், ஆயுதகுறைப்பு, பெருக்கத்தடை

3. அண்டை நாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையின் ஏதேனும் இரண்டு அம்சங்களை அடையாளம் காண்க?

  • தேசிய நலனைப் பேணுதல்
  • உலக அமைதியை எய்தல்
  • ஆயுதக் குறைப்பு
  • பிறநாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்
  • அமைதி வழியில் பிரச்சனை தீர்வு
  • அணிசேரா கொள்கையின் படி சுதந்திர சிந்தனை, செயல்பாடு
  • சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்
  • காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனபாகுபாடுக்கு எதிரான நிலை

அலகு – 5

இந்தியாவின் சர்வதேச உறவுகள்

1. இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் குறித்தும் இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் மூன்று உலகளாவிய குழுக்கள் பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்தும் எழுதுக.

  • இந்தியா ஒரு வலிமை வாய்ந்த வல்லரசாக, உலகளாவிய செல்வாக்கு பெற்றுள்ளது.
  • புதிதாக தொழில்மயமாக்கப்பட்ட நாடாக இருப்பதால் பல நாடுகளுடன் சிறந்த ஒத்துழைப்பு
  • பல்வேறு சர்வதேச  அமைப்புகளில் முக்கிய உறுப்பினராகவும் சிலவற்றில் நிறுவன உறுப்பினராகவும் உள்ளது

ஐ.நா.சபை

  • ஐ.நா.வின் தீவிர ஆதரவாளராக தொடர்ந்து செயல்படுகிறது
  • உலக நாடுகளிடையே போர் ஏற்படாமல், உலக அமைதி, பாதுகாப்பை நிலை நாட்டுவதில் ஐ.நா.சபைக்கு இந்தியா உதவுகிறது.

அணிசேரா இயக்கம்

  • இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகம் இரு வல்லரசு அணியாக (அமெரிக்கா, ரஷ்யா) பிரிந்து பனிப்போரில் ஈடுபட்டன.
  • இந்தியா இரு அணியிலும் சேராமல் நடுநிலையாக உலக அமைதிக்கு பாடுபடுகிறது

சார்க்

  • உலக அமைதியை நிலைநாட்ட சார்க் என்ற பிராந்தியக் கூட்டமைப்பை இந்தியா ஏற்படுத்தியது
  • இதில் உறுப்பு நாடுகள் தங்களுக்குள் பரஸ்பர அடிப்படையில் போக்குவரத்து, கடித சேவை, சுற்றுலா, வானியல், சுகாதாரம், வேளாண்மை, தகவல் தொடர்பு போன்றவற்றில் உதவி செய்து வருகின்றன.

2. பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.

பிரிக்ஸ் உருவாக காரணம்:

  • உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு மாற்றகவும், அமெரிக்கா
  • மேலாதிகத்திற்கு போட்டியாக பிரிக்ஸ் உருவானது
  • உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சி திட்டங்களைநிறைவேற்றவும், சொந்த மற்றும் சுயமாக நிருபிக்கும் விதமாக உருவானது

பிரிக்ஸின் நோக்கங்கள்

  • பிராந்திய வளர்ச்சி
  • வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிடையே பாலம்
  • மனித மேம்பாட்டிற்கு பரந்த அளவில் பங்களிப்பு
  • அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்
  • வாணிகத்திற்கு உள்நாட்டு நாணய பயன்பாடு ஊக்கம்
  • தொழில் நுட்ப பரிமாற்றம்
  • உலக நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்

3. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) திட்டம் குறித்தும் அவ்வமைப்பு எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்கின்றன என்பது குறித்தும் குறிப்பிடுக.

OPEC திட்டம்;

  • உறுப்பு நாடுகளுக்குள் எண்ணெய் கொள்கை
  • எண்ணெய் சந்தையை நிலைநிறுத்தல்
  • எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான நிலையான வருவாய்
  • எண்ணெய் நுகர்வு நாடுகளுக்கு திறமையான, சிக்கனமான, வழக்கமான வினியோகம்

0PEC பிற நாடுகளுக்கு உதவி;

  • OPEC மூலம் குறைந்த வட்டி வீதத்தில் கடன்
  • சமூக, மனிதாபிமான திட்டங்களுக்கு மானியம்
  • புத்தகங்கள், அறிக்கைகள், வரைபடங்கள், பெட்ரோலிய எரிசக்தி மற்றும் எண்ணெய் சந்தை தொடர்பான ஒரு தகவல் மையம் உள்ளது
  • இத்தகவல் மையத்தை பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment