1,875 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க முடிவு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 1,875 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க கல்லூரிக் கல்வி இயக்குனரகத்துக்கு உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

     தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், உதவிப் பேராசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதுள்ள காலி பணியிடங்கள் கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

     இந்நிலையில், கூடுதல் உதவிப் பேராசிரியர்கள் தேவையின் பேரில், 1,875 கூடுதல் கெளரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான கருத்துருவைத் தயாரிக்க, கல்லூரிக் கல்வி இயக்குனரகத்துக்கு உயர்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

     மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிகளின்படி, புதிய நியமனங்களுக்கு உரிய கல்வித் தகுதி உள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

     இது தவிர, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்படும்.

     கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றால், நேர்முகத் தேர்வில் முன்னுரிமை மதிப்பெண்கள் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Leave a Comment