8 STD Tamil lesson plan for August 4 th  Week (22.08.22 TO 24.08.22)

தலைப்பு  :

  • எச்சம்                   (22.08.22 TO 24.08.22)         
  • I st Mit term test   (25.08.22 TO 26.08.22)

பாடத்தின் தன்மை :

  • எச்ச வகைகள் பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மரக்கிளை வகையைச் சார்ந்தது.

கற்கும் முறை:

  • எச்சங்களின் வகைகளைக் குழுவாகப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.

துணைக் கருவிகள் :

  • வரைபடம்
  • மின்னட்டைகள்
  • பொருத்தட்டை
  • நன்னூல்

பாட அறிமுகம் :

  • முற்றுப் பெறாத சில சொற்களைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல் :

  • ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள் :

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • சான்றுகள் அறிதல்

மனவரைபடம் :

தொகுத்தல் :

எச்சம், வகைகள் :

  • பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். அவை இரண்டு வகைப்படும். பெயர் எச்சம், வினை எச்சம். பெயர் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம், வினை கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம்

பெயரெச்ச வகைகள் :

  • செயல், காலம் வெளிப்படையாகக் காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம். செயல், காலம் தெளிவாகக் காட்டாமல் பண்பினைக் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம்.

வினையெச்ச வகைகள் :

  • செயல், காலம் வெளிப்படையாகக் காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம். காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பில் உணர்த்தும் வினையெச்சம் குறிப்புப் பெயரெச்சம்.

வழங்குதல் :

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல் :

  • மடிகணினி மூலம் சான்றுகளைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.

குறைதீர் கற்பித்தல் :

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்குத் சார்பு எழுத்துகளின் வகைகளை மீண்டும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.

கற்றல் விளைவுகள் :

  • எச்சங்களின் வகைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

மதிப்பீடு :

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.

வினாக்கள்:

  • எச்சம் என்றால் என்ன?
  • வினையெச்சம் என்றால் என்ன?
  • வினையெச்சம் எத்தனை வகைப்படும்?

உயர் சிந்தனை வினா (HOT)

  • எழுதிய கடிதம் – இது எவ்வகைப் பெயரெச்சம்?
  • படித்து முடித்தான் – இது எவ்வகைப் வினைச்சம்?
  • முற்றெச்சத்திற்குச் சான்று கூறுக.

எளிய சிந்தனை வினா (LOT)

  • பெயரெச்சம் என்றால் என்ன?
  • வினையெச்சம் என்றால் என்ன?
  • முற்றெச்சம் என்றால் என்ன?

எழுதுதல் :

  • சொல்வதை எழுதுதல்,
  • பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.

தொடர்பணி :

  • எச்சங்களின் வகைகளுக்குரிய சான்றுகளைப் பட்டியலாக எழுதி வரச் சொல்லுதல்.

Leave a Comment