Airtel பயனர்களுக்கு நல்ல செய்தி – 4ஜி விலையில் 5ஜி சேவை !!

Airtel பயனர்களுக்கு நல்ல செய்தி – 4ஜி விலையில் 5ஜி சேவை !!

இந்தியாவில் அக்டோபர் 1-ம் தேதி முதல் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவையின் விலையில் 5ஜி சேவை வழங்குவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டு வாடிக்கையாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

5ஜி சேவை

இந்தியாவின் அதிவேக இணைய சேவையான 5ஜி சேவை தற்போது தொடங்கியுள்ளது. 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26ம் தேதி நடந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், VI, அதானி குழுமத்தின் அதானி டேட்டா போன்ற நிறுவனங்கள் பங்கேற்றன. இத்தகைய சூழ்நிலையில் அந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்க தயாராக உள்ளன.

இந்நிலையில், முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 4ஜி விலையில் 5ஜி சேவையை வழங்கும். ஏர்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தற்போதைய சூழ்நிலையில் 8 முதல் 9 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே 5ஜி ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே 5ஜி சேவைக் கட்டணத்தை அதிகமாக நிர்ணயம் செய்தால் அதிகப் பலன் இருக்காது. எனவே தற்போது 4ஜி சேவை கட்டணத்தில் 5ஜி சேவையை வழங்க உள்ளோம். இன்னும் சில மாதங்களில் அதிக 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு வரும் என்றும் அதன் பிறகு 5ஜி சேவைக்கான கட்டணத்தை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

Leave a Comment