CLASS 9 TAMIL LESSON PLAN FOR JULY 3RD WEEK (18.07.22 TO 22.07.22)

CLASS 9 TAMIL LESSON PLAN FOR JULY 3RD WEEK (18.07.22 TO 22.07.22)

தலைப்பு :

  • பட்ட மரம்
  • பெரிய புராணம்

விளைவு :

  • அழிந்து வரும் மரங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • பெரிய புராணம் காட்டும் நாட்டு வளம் பற்றி அறிதல்.

படித்தல் :

  • நூல்வெளிப் பகுதியை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணவர்கள் தனித்தனியாக வாசித்தல் மேற்கொள்ளுதல்.

உணர்தல் (கற்றல் விளைவுகள்) :

  • மரங்களின் பயன்பாட்டையும் அவற்றின் அழிவுகளையும் மாணவர்கள் அறிதல்

முன்னறிவு :

  • வறட்சி என்றால் என்ன?
  • மரங்கள் அழிந்து வரக் காரணம் யாது?
  • ஆகிய வினாக்களைக் கேட்டு பாட முன்னறிவினைச் சோதித்தல்.
  • மரக்கன்று வைத்த அனுபவம் உண்டா? 
  • பள்ளியைச் சுற்றி ஏதும் நீர்நிலை உள்ளதா? 

விதைநெல் (வலுவூட்டுதல்) :

  • மரம் பற்றிய கவிஞர் வைரமுத்துவின் கவிதையை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச் செய்தல்.
  • தமிழ் புதுக்கவிதையில் தொடங்கி பெரிய புராணத்தில் நுழைந்து புறநானூற்றுக் காலம் சென்று இயற்கைப் பாதுகாப்புக் குறித்து அறிதல்

விதைத்தல் – பட்ட மரம் :

  • பட்ட மரத்தின் வருத்தங்கள் விளக்கிக் கூறுதல்

விதைத்தல் – பெரியபுராணம் :

  • திரு நாட்டுச் சிறப்பு. மலையிலிருந்து பூக்களை அடித்து வரும் காவிரி – வண்டுகள் ஆரவாரம்- களை பறிக்கும் உழத்தியர் கால்களைச் சங்குகள் இடறின. மென்மையாக நடந்து வரப்படைதல். காடெல்லாம் கழைக்கரும்பு- சோலை அரும்பு – குவளை மலர்கள் – அன்னப் பறவைகள் – நீர் நாடு எனப் பெயர் – எருமைகள் விழ மீன்கள் துள்ள, நெற்குவியில்  மீன், முத்துகளின் குவியில் மலைபோல் உள்ளன. எருமைகள் சுற்றதல்- மேகம் மலையைச் சுற்றுவது போல் உள்ளது. மரங்களும் மலர்களும் செழிப்பாய் உள்ளன.

கருத்துப்புனைவு பட்ட மரம் :

கருத்துப்புனைவு – பெரியபுராணம் :

கருத்துத்தூவானம் பட்ட மரம் :

  • அமர நிழல் கொடுத்தேன்.
  • நறுமண மலர் கொடுத்தேன்.
  • பறவைகள் என் மீது அமர்ந்து பாடல் புனையும்.
  • என் கிளை மீது ஏறி சிறுவர்கள் குதிரை விளையாடுவார்கள். இவையெல்லாம் போய் இன்று அமர நிழல் கொடுத்தேன்.
  • இவையெல்லாம் போய், இன்று ஏடு தருங்கதையாக முடிந்தன! இன்று வெறுங்கனவாய்; போய்விட்டேன் என்று பட்டமரம் கூறியது.
  • தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனை ஆளும் அரசனுக்குச் சிறிதும் உதவாது. அதனால் நான் கூறிதை விரைவாகக் கடைபிடிப்பாயாக!
  • நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும்.
  • நிலத்துடன் நீரைக் கூட்டியவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். இதைச் செய்யாதவர் வீணே மடிவர்.

கருத்துத்தூவானம் பெரியபுராணம் :

  • சோழநாட்டு இயற்கை நீர்நிலை பெருக்குவதன் அவசியம் பற்றித் தொகுத்துரைத்தல்,

விளைச்சல் (மதிப்பீடு) :

  • மாணாக்கர் திறன் அறிய வினாக்கள் சிலவற்றைக் கேட்டு அறிதல்.
  • உயர் சிந்தனை வினா
  • ஏன் நீர்நிலைகளைப் பெருகச் செய்ய வேண்டும்?
  • நடுத்தரச் சிந்தனை வினா
  • முதுமொழி காஞ்சி துறை என்றால் என்ன?
  • எளிய சிந்தனை வினா
  • நிலையான புகழைப் பெற விரும்பினால் செய்ய வேண்டுவன யாவை?
  • வானவில்லுக்கு உவமையாகக் காட்டப்பவது யாது?

விளைச்சல் (மதிப்பீடு) :

  • மாணாக்கர் திறன் அறிய சில வினாக்கள் கேட்டறிதல்

உயர் சிந்தனை வினா :

  • கேள்விச் செல்வம் அனைத்துச் செல்வங்களிலும் முதன்மையானது என்பதை நிறுவுக.

நடுத்தரச்சிந்தனை வினா :

  • தகுதியான் வென்றுவிடல் எப்போது?

எளிய சிந்தனை வினா :

  • தலையாய செல்வம் எது?

சங்கிலிப்பிணைப்பு பட்ட மரம் :

  • மழைநீர் சேமிப்பு பற்றிக் கட்டுரை ஒன்றினை எழுதி வரச்சொல்லுதல் .வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிக்காதது ஆகும். பிறர் தனக்குத் தரக் கூடாத துன்பத்தைத் தந்தாலும் மனம் நொந்து அறனல்ல செய்யாமை நன்று. செருக்கினால் துன்பம் தந்தவரை நம்முடைய பொறுமையால் வெல்ல வேண்டும். தீயவை தீயவற்றைத் தருவதால் தீயவை தீயினும் அஞ்சப்படும். தலையாய செல்வம் செவிச்செல்வம். பிற வழிகளில் வரும் செல்வங்களை விட சிறந்தது. ஒருவரின் பெருமை, சிறுமைக்குக் காரணம் அவரது செயல்பாடுகளே ஆராய்ந்து அறியும் உரைகல் ஆகும். ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்வதும், தேர்வு செய்த பின், அவரைப் பற்றி ஐயப்படுதலும் தீரா இடும்பை (துன்பம்) தரும். தீயசெயலால் பொருள் சேர்க்காத செயலுக்க வெட்கப் படாமை, தக்கவற்றை நாடாமை, பிறரிடம் அன்பு இல்லாமை, எதனையும் பாதுகாக்காமை ஆகியன பேதையின் செயல்கள் ஆகும்.

சங்கிலிப்பிணைப்பு பெரியபுராணம் :

  • பாடப்பகுதி அதிகாரத்தில் இடம்பெறும் பிற குறட்பாக்கள் மற்றும் விளக்கக் கருத்துக்களை எழுதி வரச் சொல்லுதல்.
  • உணவாகும் மழை’ எனும் தலைப்பில் விளக்கக் படத்தொகுப்பை உவாக்குக

Leave a Comment