Google வெளியிட்ட அதிர்ச்சி தகவல் – இந்த வசதி இனி கிடைக்குமா?     அதிர்ச்சியில் பயனாளிகள்!!

Google வெளியிட்ட அதிர்ச்சி தகவல் – இந்த வசதி இனி கிடைக்குமா?     அதிர்ச்சியில் பயனாளிகள்!!

          பயனர்களின் தேவைக்கேற்ப கூகுள் பல்வேறு வகையான வசதிகளை வழங்குகிறது. இந்நிலையில், கூகுள் ஒரு முக்கிய அம்சத்தை ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

Google

     கடந்த 20 ஆண்டுகளாக இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் கூகுள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் அதன் தயாரிப்புகள் பல்வேறு வகையான தொழில்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள கூகுள், அதன் சில சேவைகளை நிறுத்துகிறது. கூகுள் மொழிபெயர்ப்பு அம்சம் 2017 இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் சமீபத்தில் சீனா மற்றும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் இடையேயான உறவில் சில பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் 2010ல் சீனாவில் இருந்து கூகுள் தனது தேடுபொறியை திரும்பப் பெற்றது. கூகுள் நிறுவனமும் தனது சில சேவைகளை முடக்கத் தொடங்கியுள்ளது. ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட சேவைகளை முடக்க முயற்சித்தது. இந்நிலையில், சீனாவில் கூகுள் டிரான்ஸ்லேட் வசதி குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுவதால் அதனை ரத்து செய்யப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. இந்த தகவல் சீன சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது

Leave a Comment