பத்தாம் வகுப்பு – சமூக அறிவியல் (வரலாறு)1 மதிப்பெண் வினா-விடைத் தொகுப்பு

பத்தாம் வகுப்பு – சமூக அறிவியல் (வரலாறு) 1 மதிப்பெண் வினா-விடைத் தொகுப்பு

அலகு – 1

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

1.சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1.முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போனமூன்று பெரும்பேரரசுகள் யாவை?

அ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்

ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா

இ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி

2. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?

அ) சீனா  ஆ) ஜப்பான்  இ) கொரியா  ஈ) மங்கோலியா

3. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் எனக் கூறியவர்யார்?

அ) லெனின் ஆ) மார்க்ஸ் இ) சன்யாட்சென் ஈ) மாசேதுங்

4. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

அ) ஆகாயப்போர்முறை  ஆ) பதுங்குக்குழிப்போர்முறை

இ) நீர்மூழ்கிக்கப்பல்போர்முனை ஈ) கடற்படைப்போர்முறை

5.பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச் செயலர் எந்தநாட்டைச் சேர்ந்தவர்?

அ) பிரிட்டன் ஆ) பிரான்ஸ் இ) டச்சு ஈ) அமெரிக்கஐக்கியநாடுகள் 6.பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச்சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

அ) ஜெர்மனி ஆ) ரஷ்யா  இ) இத்தாலி ஈ) பிரான்ஸ்

II.கோடிட்ட இடங்களை நிரப்புக

1. 1894 ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.

2.1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட லண்டன் உடன்படிக்கையின்படி அல்பேனியாஎனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது. 3. 1902 ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்துகொண்டது.

4. பால்கனில் மாசிடோனியா நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.

5. டானென்பர்க் போரில் ரஷ்யா பேரிழப்புகளுக்கு உள்ளானது.

6. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப்பங்கேற்றபிரான்ஸின் பிரதமர் கிளம்மென்சோ ஆவார்.

7. 1925 ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

III. சரியான கூற்றைத் தேர்வுசெய்யவும்

  1. i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.

ii) துருக்கி மைய நாடுகள் பக்கம் நின்றுபோரிட்டது.

iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியது.

iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கிமேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

அ) i), ii) ஆகியன சரி  ஆ) i), iii) ஆகியனசரி

இ) iv) சரி.    ஈ) i), iii), iv) ஆகியன சரி

2. கூற்று: ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருள்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின்சந்தையைக் கைப்பற்றின.

காரணம்: இருநாடுகளும்தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்தன.

அ) கூற்று. காரணம் ஆகிய இரண்டும் சரி.

ஆ) கூற்றுசரி, ஆனால் காரணம் கூற்றுக்கானவிளக்கம் அல்ல.

இ) கூற்று. காரணம் ஆகிய இரண்டும் தவறு

ஈ) காரணம் சரி, ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை .

3.கூற்று: ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.

காரணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.

ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.

இ) கூற்று, காரணம் இரண்டுமேதவறு.

ஈ) காரணம் சரி ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை .

IV பொருத்துக

1.பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கை  – அ) வெர்செய்ல்ஸ் (5)

2.ஜிங்கோயிசம்                                         – ஆ) துருக்கி (3)

3.கமால் பாட்சா                                        – இ) ரஷ்யாவும் ஜெர்மனியும் (1)

4.எம்ட ன்                                                  – ஈ) இங்கிலாந்து (2)

5.கண்ணாடி மாளிகை                               – உ) சென்னை (4)

அலகு-2

இரு உலகப் போர்களுக்கு இடையில் உலகம்

1.சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

அ) ஜெர்மனி   ஆ) ரஷ்யா   இ) போப்   ஈ) ஸ்பெயின்

2. யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?

அ) ஹெர்மன் கோர்ட்ஸ் ஆ) பிரான்சிஸ்கோ பிசாரோ இ) தௌசெயின்ட் லாவெர்ட்யூர் ஈ) முதலாம் பெட்ரோ

3. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்?

அ) ஆங்கிலேயர் ஆ) ஸ்பானியர் இ) ரஷ்யர் ஈ) பிரெஞ்சுக்காரர்

4. லத்தீன் அமெரிக்காவுடன் ‘நல்ல அண்டைவீட்டுக்காரன்’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

அ) ரூஸ்வெல்ட்  ஆ) ட்ரூமன்  இ) உட்ரோவில்சன் ஈ) ஐசனோவர்

5. உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை ?

அ) ஐரோப்பா ஆ) லத்தீன் அமெரிக்கா இ) இந்தியா  ஈ) சீனா

II.கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர் பெர்டினன்ட்  லாஸ்ஸல்லி

2. நாசிசகட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் ஜோசப் கோயபெல்ஸ்

3. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி  1927 இல் நிறுவப்பட்டது.

4. நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை கெஸ்டபோ என அழைக்கப்பட்டது.

5. தென்னாப்பிரிக்க ஒன்றியம் 1910 ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.

6. ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.

7. போயர்கள் ஆப்பிரிக்க நேர்கள்  என்றும் அழைக்கப் பட்டனர்.

III. சரியான கூற்றைத் தேர்வுசெய்யவும்

i). முதல் உலகப்போரின் போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபடவைப்பதே இத்தாலியின் முக்கியக்கடமையாக இருந்தது.

ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது.

    iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் நாளில் எற்பட்டது.

         iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966 இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

அ) i), ii) ஆகியவைசரி

ஆ) iii) சரி

இ) iii), iv) ஆகியவைசரி

ஈ) i), ii), iii) ஆகியவைசரி

2. கூற்று: தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.

காரணம்: அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்ய விருப்பமில்லாமல் இருந்ததனால் இந்நிலை உண்டானது.

அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி

ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கானசரியானவிளக்கமல்ல

இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு

ஈ) காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை .

3. கூற்று : 1884-85 இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது.

காரணம்: ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.

அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி

ஆ) கூற்று சரி ஆனால் காரணம் சரியானவிளக்கமல்ல.

இ) கூற்று காரணம் ஆகிய இரண்டு மேதவறு

ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் கூற்றுடன் பொருந்தவில்லை.

IV. பொருத்துக

1. டிரான்ஸ்வால்     – அ. ஜெர்மனி  (3)

2. டோங்கிங்           – ஆ ஹிட்லர் (1)

3. ஹின்டன்பர்க்     –  இ. இத்தாலி (5)

4. மூன்றாம் ரெய்க்  –  ஈ. தங்கம்(4)

5. மாட்டியோட்டி    – உ. கொரில்லா நடவடிக்கைகள் (2)

அலகு-3

இரண்டாம் உலகப்போர்

1.சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. ஜப்பான் சரணடை வதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?

அ. செப்டம்பர் 2, 1945                   ஆ. அக்டோபர் 2, 1945

இ. ஆகஸ்டு 15, 1945                     ஈ. அக்டோபர் 12, 1945

2.பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?

அ. ரூஸ்வெல்ட் ஆ சேம்பெர்லின் இ. உட்ரோ வில்சன் ஈ. பால்டுவின் 3.ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப் பட்டது?

அ. க்வாடல் கெனால் போர்         ஆ. மிட்வே போர்

இ. லெனின்கிரேடு போர்        ஈ. எல் அலாமெய்ன் போர்

4.அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

அ. கவாசாகி  ஆ. இன்னோசிமா   இ. ஹிரோஷிமா  ஈ. நாகசாகி

5. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்?

அ. ரஷ்யர்கள் ஆ. அரேபியர்கள் இ. துருக்கியர்கள் ஈ. யூதர்கள் 6.ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

அ. சேம்பர்லின்                     ஆ. வின்ஸ்ட ன் சர்ச்சில்

இ. லாயிட் ஜார்ஜ்                 ஈ. ஸ்டேன்லி பால்டுவின்

7.எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது? அ. ஜூன் 26, 1942         ஆ. ஜூன் 26, 1945

இ. ஜனவரி 1, 1942         ஈ. ஜனவரி 1, 1945

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.இராணுவ நீக்கம் செய்யப்பட்ட ரைன்லாந்து பகுதியை ஹிட்லர் தாக்கினார்.

2. இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிக்கிடையேயான ஒப்பந்தம் ரோம்-பெர்லின்- டோக்கியோ அச்சு உடன் படிக்கை என அழைக்கப்பட்டது.

3. ரூஸ்வெல்ட் கடன் குத்தகைத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.  

4. 1940 இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் சேம்பர்லின் ஆவார்.

5. ரேடார் என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர்விமானங்களைக்

கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. கூற்று: குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

காரணம்: அவர் 1941 இல் கடன் குத்தகைத்திட்டத்தை தொடங்கினார்.

அ) கூற்றும் காரணமும் சரி.

ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

இ காரணம் கூற்று ஆகிய இரண்டுமே தவறானவை.

ஈ)காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை .

IV பொருத்துக  

1. பிளிட்ஸ்கிரிக்           –   அ. ரூஸ்வெல்ட் (3)

2. ராயல் கப்பற்படை   –   ஆ. ஸ்டாலின் கிரேடு (4)

3. கடன் குத்தகை         –   இ. சாலமோன் தீவு (5)

4. வோல்கா                  –  ஈ. பிரிட்டன் (2)

5. க்வாடல்கெனால்      –  உ மின்னல் வேகத்தாக்குதல் (1)

அலகு 4 – இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

1.சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1.எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?

அ உட்ரோ வில்சன்              ஆ. ட்ருமென்

இ.தியோடர் ரூஸ்வேல்ட்      ஈ. பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

2.சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?

அ.செப்டம்பர் 1959                 ஆ. செப்டம்பர் 1948

இ. செப்டம்பர் 1954               ஈ. செப்டம்பர் 1949

3. அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ——— ஆகும்.

அ .சீட்டோ    ஆ. நேட்டோ     இ. சென்டோ    ஈ. வார்சா ஒப்பந்தம்

4.பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969 இல் தலைவராகப்  பதவியேற்றவர் யார்?

அ. ஹபீஸ் அல் ஆஸாத்  ஆ. யாசர் அராபத்  இ. நாசர்    ஈ.சதாம் உசேன்

5. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?

அ. 1975     ஆ. 1976       இ. 1973     ஈ. 1974

6. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

அ 1979    ஆ 1989   இ 1990   ஈ. 1991

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் டாக்டர் சன்யாட்சென் ஆவார்.

2. 1918 இல் பீகிங் பல்கலை கழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைப்பு நிறுவப்பட்டது.

3.டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர் ஷியாங்கே-ஷேக் ஆவார்.

4. அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் சென்டோ ஆகும்.

5. துருக்கிய அரபுப்பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம்  வெர்செய்ல்ஸ் ஆகும்.

6.ஜெர்மனி நேட்டோவில்  1955 ஆண்டு இணைந்தது.

7. ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் அமைந்துள்ளது.

8. ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம்  மாஸ்டிரிக்ட் ஆகும்.

III. சரியான கூற்றைத் தேர்வுசெய்யவும்

  1. கற்றறிந்த சிறுபான்மையினரின் தாக்கத்தில் சீனாவின் (1878) இள                                                                                                                                                                                         ம் பேரரசர் துவக்கிய சீர்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறிப்படுகிறது.
  2.  கோமிங்டாங் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.
  3.  மஞ்சூரியாமீதும் ஷாண்டுங்மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டை விதிக்க யுவான் ஷி-கே உடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார்.
  4. சோவியத்நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள்     

குடியரசை அங்கீகரிக்கமறுத்தது.

அ) i) மற்றும் ii) சரி

ஆ) ii) மற்றும் ii) சரி

இ) i) மற்றும் iii) சரி

ஈ) i) மற்றும் iv) சரி

2. i) கிழக்கு ஐரோப்பாவில் 1948 இல் சோவியத்நாடு நிறுவிய இடதுசாரி அரசுகளைசோவியத் இராணுவம் விடுதலை செய்தது.

ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது.

iii) சீட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள்.

iv) ஜப்பானுக் கெதிராக பிரிட்டன் அணுகுண்டைப் பயன்படுத்தியதின் மூலம் அது ரஷ்யாவுக்கு தன்னுடைய அழிக்கும் திறனை எடுத்துக் காட்டவிரும்பியது.

அ) ii), iii) மற்றும் iv) சரி              ஆ) i) மற்றும் ii) சரி

இ) iii) மற்றும் iv) சரி     ஈ) i), ii) மற்றும் iii) சரி

3. கூற்று (கூ): அமெரிக்காவின் மார்ஷல் திட்டம் போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மறு நிர்மாணத்திற்காக முன்வைக்கப்பட்டது. காரணம் (கா): அமெரிக்க நாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கின் கீழ் கொண்டுவர நினைத்தது.

அ) கூற்றும் காரணமும் இரண்டுமே சரி. ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

ஆ) கூற்றும் காரணமும் தவறானவை

இ) கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றைத் துல்லியமாக விளக்குகிறது ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

IV பொருத்துக

1) டாக்டர் சன் யாட் சென்            – அ. தெற்கு வியட்நாம் (5)

2) சிங்மென்ரீ                                – ஆ. கோ மிங்டாங் (1)

3) அன்வர் சாதத்                           – இ. கொரியா (2)

4) ஹோ சி மின்                            – ஈ. எகிப்து (3)

5) நிகோடின் டியம்                       – உ. வடக்கு வியட்நாம் (4)

அலகு-5

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

1.சரியான விடையைத் தேர்வுசெய்யவும்

1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

அ. 1827   ஆ. 1829   இ. 1826   ஈ. 1927

2.தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது”

அ. ஆரிய சமாஜம்                     ஆ. பிரம்ம சமாஜம்

இ பிரார்த்தனை சமாஜம் .         ஈ.ஆதி பிரம்ம சமாஜம்

3. யாருடைய பணியும் இயக்கமும், 1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச்சட்டம் இயற்றப்படுவதர் வழிகோலியது?

அ. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்    ஆ. ராஜா ராம்மோகன் ராய்

இ. அன்னிபெசன்ட்                     ஈ. ஜோதி பா பூலே

4. ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம்?

அ. பார்சி இயக்கம்      ஆ. அலி கார் இயக்கம்  

இ. ராமகிருஷ்ணர்   ஈ.திராவிட மகாஜன சபை

 5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

அ. பாபா தயாள் தாஸ் ஆ. பாபா ராம்சிங் இ. குருநானக் – ஈ.ஜோதிபா பூலே 6. விதவை மறுமணச்சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

அ. MG ரானடே               ஆ. தேவேந்திரநாத் தாகூர்

 இ ஜோதிபா பூலே.      ஈ. அய்யன்காளி

7.சத்யார்பிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் யார்?

அ. தயானந்த சரஸ்வதி            ஆ வைகுண்டசாமி   

இ. அன்னி பெசன்ட்                 ஈ.சுவாமி சாரதாநந்தா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இராமலிங்க அடிகள் சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

2. புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் மகா தேவ் கோவிந்த் ரானடே

3. குலாம்கிரி நூலை எழுதியவர். ஜோதி பாபூலே

4. ராமகிருஷ்ணா மிஷன் சுவாமி விவேகானந்தர் ஆல் நிறுவப்பட்டது.

5. சிங்சபா அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.

6. ‘ஒரு பைசா தமிழன் பத்திரிகையைத் துவக்கியவர் அயோத்தி தாசர் ஆவார்.

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. i) ராஜா ராம் மோகன்ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.

ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.

iii) சமூகத்தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.

iv) ராஜா ராம்மோகன்ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.

அ) i) சரி                                             ஆ) i) , ii) ஆகியனசரி

இ) i), ii), iii) ஆகியனசரி                      ஈ) i), iv)ஆகியனசரி

2. i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.

ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சம பந்திகளையும் சாதிக்கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தது.

iii) ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.

iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.

அ) i ) சரி     ஆ) ii) சரி      இ) i), ii) ஆகியனசரி     ஈ) iii), iv) ஆகியனசரி

3. i) ராமகிருஷ்ணா மிஷன்கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப்பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.

ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின்மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை ராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.

iii) ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணாமிஷனை ஏற்படுத்தினார்.

iv) ராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.

அ) i) சரி   ஆ) i) மற்றும் ii) சரி    இ) iii) சரி   ஈ) iv) சரி

4. கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.

காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை . ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.

இ) இரண்டு மே தவறு.

ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.

IV.பொருத்துக.

1) ஒரு பைசா தமிழன் – அ. விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் (4)

2) திருவருட்பா           – ஆ. நிரங்கரி இயக்கம் (3)

3) பாபா தயாள்தாஸ்  – இ. ஆதி பிரம்மசமாஜம் (5)

4) ஈஸ்வர்சந்திர வித்யாசாகர் – ஈ. பத்திரிக்கை (1)

5) தேவேந்திரநாத்              – உ. ஜீவகாருண்யப்பாடல்கள் (2)

அலகு-6

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள்

1.சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?

அ) மருது சகோதரர்கள்         ஆ) பூலித்தேவர்

இ) வேலுநாச்சியார்               ஈ) வீரபாண்டிய கட்ட பொம்மன்

2. சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர்யார்?

அ) வேலுநாச்சியார்  ஆ) கட்டபொம்மன்  இ) பூலித்தேவர்  ஈ) ஊமைத்துரை

3. சிவ சுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?

அ) கயத்தாறு ஆ) நாகலாபுரம் இ) விருப்பாட்சி ஈ) பாஞ்சாலங்குறிச்சி

4. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?

அ) மருது சகோதரர்கள்                      ஆ) பூலித்தேவர்

இ) வீரபாண்டிய கட்ட பொம்மன்       ஈ) கோபால நாயக்கர்

5. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?

அ) 1805 மே24                                ஆ) 1805 ஜூலை10

இ) 1806 ஜூலை10                         ஈ) 1806 செப்டம்பர்10

6. வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதி முறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?

அ) கர்னல் பேன் கோர்ட்                  ஆ) மேஜர்ஆர்ம்ஸ்ட்ராங்

இ) சர்ஜான் கிரடாக்                          ஈ) கர்னல் அக்னியூ

7. வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?

அ) கல்கத்தா          ஆ) மும்பை           இ) டெல்லி         ஈ) மைசூர்

II) கோடிட்ட இடங்களை நிரப்புக;

1. பாளையக்காரர் முறை தமிழகத்தில் விஸ்வநாத நாயக்கர் என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டது.

2. வேலு நாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக கோபால நாயக்கர் பாதுகாப்பில் இருந்தனர்.

3. கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் இராமலிங்கனார் என்பவரை அனுப்பிவைத்தார்.

4. கட்டபொம்மன் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.

5. மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் இரண்டாம் பாளையக்காரர் போர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

6. ஃபதே ஹைதர் என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.

III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

(i) பாளையக்காரர் முறை காகத்தீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது

(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும்செவலை 1764 இல் மீண்டும் கைப்பற்றினார்.

(iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764 இல் தூக்கிலிடப்பட்டார். (iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத் தினார்.

அ) (i), (ii) மற்றும் (iv) ஆகியவைசரி  ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவைசரி

இ) (iii) மற்றும் (iv) மட்டும் சரி  ஈ) (i) மற்றும் (iv) மட்டும் சரி

2. (i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.

(ii) காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.

(iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார்.

(iv) காரன்லிஸ் மே1799 இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.

அ) (i) மற்றும் (ii) ஆகியவைசரி   ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவைசரி

இ) (ii), (iii) மற்றும் (iv) ஆகியவைசரி ஈ) (i) மற்றும் (iv) ஆகியவைசரி

3. கூற்று: பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெறமுயன்றார்.

காரணம்: மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர்அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவைசரி எனினும் காரணம், கூற்றைச் சரியாகவிளக்கவில்லை .

ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டு மேதவறானவை.

இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவைசரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.

ஈ) கூற்று தவறானது காரணம் சரியானது

IV) பொருத்துக

1. தீர்த்த கிரி                    –   அ. வேலூர் புரட்சி (4)

2. கோபால நாயக்கர்        –  ஆ. இராமலிங்கனார் (3)

3. பானெர்மென்               –   இ. திண்டுக்கல் (2)

4. சுபேதார் ஷேக் ஆதம்   –   ஈ. வேலூர்கோட்டை  (5)

5. கர்னல் பேன்கோர்ட்    –    உ. ஓடாநிலை (1)

அலகு-7

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

1.சரியான விடையைத் தேர்வுசெய்யவும்

1.1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்ட வற்றில் எதனைத் தொடங்கினார்?

அ) வஹாபிகிளர்ச்சி                      ஆ) ஃபராசி இயக்கம்

இ) பழங்குடியினர் எழுச்சி             ஈ) கோல்கிளர்ச்சி

2.’நிலம் கடவுளுக்குச் சொந்தம் என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச்சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர்யார்?

அ) டிடுமீர் ஆ) சித்து இ)  இடுடுமியான் ஈ) ஷரியத்துல்லா

3 நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?

அ) சாந்தலர்கள்   ஆ) டிடுமீர்   இ) முண்டா    ஈ) கோல்

4.கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதியார்?

அ) தாதாபாய் நௌரோஜி  ஆ) நீதிபதி கோவிந்தரானடே

இ). பிபின் சந்திரபால் ஈ ) ரொமேஷ்சந்திரா

5. வங்கப்பிரிவினை எந்தநாளில் நடைமுறைக்கு வந்தது?

அ) 1905 ஜூன் 19                ஆ) 1906 ஜூலை 18

இ) 1907 ஆகஸ்ட் 19             ஈ) 1905 அக்டோபர் 16

6. சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறை வேற்றப்பட்டது?

அ) கோல் கிளர்ச்சி                ஆ) இண்டிகோ கிளர்ச்சி,

இ) முண்டாகிளர்ச்சி               ஈ) தக்காண கலவரங்கள்

7.1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?

அ) அன்னிபெசன்ட் அம்மையார்                 ஆ) பிபின்சந்திரபால்

இ) லாலாலஜபதிராய்                                   ஈ) திலகர்

8. நீல் தர்ப்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?

அ) தீனபந்துமித்ரா                  ஆ) ரொமேஷ்சந்திரதத்

இ) தாதாபாய் நௌரோஜி        ஈ) பிர்சாமுண்டா

II) . கோடிட்ட இடங்களை நிரப்புக :

1.மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான வாஹாபி இயக்கம் 1827ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது.

2. சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி கோல் கிளர்ச்சி

3. சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடைவிதித்தது.

4. சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1908

5.W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 1885

II) .சரியான கூற்றைத் தேர்வு செய்யவும் ;

1.(i), மீர்ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்தியகம்பெனி அதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடுசெய்தது.

(ii), 1831 – 1832ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன் கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர், (iii) 1855 ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டுசாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.

(iv) 1879 ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்கு முறைப்படுத்த ஒருசட்டம் இயற்றப்பட்டது.

(அ) (i) (ii) மற்றும் (ii) சரியானவை (ஆ) (ii) மற்றும் (iii) சரியானவை

(இ) (iii) மற்றும் (iv) சரியானவை ஈ) (i) மற்றும் (iv) சரியானவை .

2. (i) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசிய வாதிகளின் மிகமுக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.

(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமயரீதியிலான சுரண்டலே மிகமுதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்,

(iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மித தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.

(iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப்பிரிவினை நடந்தது.

(அ) (i) மற்றும்(iii) சரியானவை (ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை

(இ) (ii) மற்றும்(iii) சரியானவை  (ஈ) (iii) மற்றும்(iv) சரியானவை

3.கூற்று: இந்தியவரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசுவனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது

காரணம்: இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்,

அ) கூற்றுமற்றும்காரணம் இரண்டுமே சரி ஆனால் காரணம் கூற்றுக்கானசரியான விளக்கம் இல்லை

ஆ) கூற்றுமற்றும்காரணம் இரண்டுமே தவறு.

(இ) கூற்றுமற்றும்காரணம் இரண்டுமே சரி அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

(ஈ) கூற்றுதவறு காரணம் சரி,

4. கூற்று ; பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.

காரணம்: மையப் படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்விகண்டது.

அ) கூற்று மற்றும்காரணம் இரண்டுமே தவறு 

ஆ) கூற்று தவறு காரணம் சரி.

(இ) கூற்று மற்றும் காரணம் இரண்டு மேசரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டு மேசரி ஆனால் காரணம் கூற்றுக்கான

சரியான விளக்கம் இல்லை .

IV.பொருத்துக

1. வஹாபி கிளர்ச்சி            – அ. லக்னோ  (3)

2.முண்டாகிளர்ச்சி              – ஆ. பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் (5)

3. பேகம் ஹஸ்ரத் மகால்    – இ. டிடுமீர் (1)

4 கன்வர்சிங்                       – ஈ. ராஞ்சி (2)

5.நானாசாகிப்                    – உ பீகார் (4)

அலகு – 8

தேசியம்: காந்திய காலகட்டம்

I.சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. அமிர்தசரஸில் ரௌலட்சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது

செய்யப்பட்டவர்யார்?

அ) மோதிலால் நேரு                            ஆ) சைஃபுதீன் கிச்லு

இ) முகம்மது அலி                                 ஈ) ராஜ் குமார் சுக்லா

2. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?

அ) பம்பாய்    ஆ) மதராஸ்    இ) லக்னோ    ஈ) நாக்பூர்

3. விடுதலை நாளாக கீழ்க்கண்ட வற்றில் எந்தநாள் அறிவிக்கப்பட்டது?

அ) 1930 ஜனவரி 26            ஆ) 1929 டிசம்பர்26

இ) 1946 ஜூன் 16                ஈ) 1947 ஜனவரி 15

4. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

அ) 1858 ஆ) 1911 இ) 1865 ஈ) 1936

5. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப் பட்டது?

அ) கோவில் நுழைவு நாள்           ஆ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)

இ) நேரடி நடவடிக்கைநாள் ஈ) சுதந்திரப் பெருநாள்

6. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

அ) 1858ஆம் ஆண்டு சட்டம்        ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909

இ) இந்திய அரசுச் சட்டம், 1919  ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

விடைகள்; 1. ஆ) சைஃபுதீன் கிச்லு 2. ஈ) நாக்பூர் 3. அ) 1930 ஜனவரி 26 4. இ) 1865 5. அ) கோவில் நுழைவு நாள் 6. ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. காந்தியடிகளின் அரசியல் குரு கோபாலகிருஷ்ணகோகலே ஆவார்.

2. கிலாபத் இயக்கத்துக்கு முகமது அலி மற்றும் சௌகத் அலி தலைமை எற்றார்.

3. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச்சட்டம் மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகம் செய்தது.

4. வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற் றுநடத்தியவர் கான் அப்துல் கஃபார்கான்

5.சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் வகுப்புவாரி ஒதுக்கீட்டை  ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.

6. உஷாமேத்தா என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார்.

II) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.

(ii) M. சிங்கார வேலர் கான்பூர் சதித் திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

(iii) ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்மகட்சி உருவானது.

(iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்க வில்லை.

அ) (i) மற்றும் (ii) சரியானது             ஆ) (ii) மற்றும் (iii) சரியானது

இ) (iv) சரியானது                            ஈ) (i) (ii) மற்றும் (iii) சரியானது

2. கூற்று: காங்கிரஸ் முதலாவது வட்டமேசைமாநாட்டில் கலந்து கொண்டது. காரணம்: காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசைமாநாட்டில் கலந்து கொள்ள காந்தி- இர்வின் ஒப்பந்தம் வழிசெய்தது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .

ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது

இ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

3. கூற்று: காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939 ஆம் ஆண்டு பதவி விலகின காரணம்: காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .

ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது

இ) கூற்று மற்றும் காரணம் இரண்டு மேதவறானது.

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

IV) பொருத்துக;

1.ரௌலட் சட்டம்                    – அ. பட்டங்களைத் திரும்ப ஒப்படைத்தல் (2)

2. ஒத்துழையாமை இயக்கம்    – ஆ. இரட்டைஆட்சி (3)

3.1919ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம்   – இ. M.N. ராய் (4)

4. இந்திய பொதுவுடைமை கட்சி                  – ஈ. நேரடி நடவடிக்கை நாள் (5)

5. 16 ஆகஸ்ட் 1946                                       – உ. கருப்புச் சட்டம் (1)

அலகு-9

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

1.சரியான விடையைத் தேர்வு செய்யவும் 1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

அ) T.M. நாயர் ஆ) P. ரங்கையா இ) G. சுப்பிரமணியம் ஈ) G.A. நடேசன்

2. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு /அமர்வு எங்கே நடைபெற்றது?

அ) மெரினா ஆ) மைலாப்பூர் இ) புனித ஜார்ஜ் கோட்டை ஈ) ஆயிரம் விளக்கு 3. “அதி நவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக்கூறியவர்யார்?

அ) அன்னிபெசன்ட்              ஆ) M. வீரராகவாச்சாரி

இ) B.P. வாடியா            ஈ) G.S. அருண்டேல்

4. கீழ்க் காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?

அ) S. சத்தியமூர்த்தி             ஆ) கஸ்தூரிரங்கர்

இ) P. சுப்பராயன்                ஈ) பெரியார்ஈ. வெ.ரா

5. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர்யார்?

அ) K. காமராஜ்      ஆ) C. ராஜாஜி     இ) K. சந்தானம்   ஈ) T. பிரகாசம்

6. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப் பெற்றது?

அ) ஈரோடு  ஆ) சென்னை  இ) சேலம்  ஈ) மதுரை

II) கோடிட்ட இடங்களை நிரப்புக;

1. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி T. முத்து சாமி ஆவார்

2. பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.

3. சென்னையில் தொழிற்சங்கங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத்  திகழ்ந்தவர் B.P. வாடியா ஆவார்.

4. சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் ராஜாஜி

5. யாகுப் ஹசன் முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.

6. 1932 ஜனவரி 26இல் பாஷ்யம் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.

II) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. (i) சென்னை வாசிகள் சங்கம் 1852 இல் நிறுவப்பட்டது.

(ii) தமிழில் வெளிவந்த தேசியப்பருவ இதழான சுதேசமித்திரன், 1891இல் தொடங்கப்பட்டது.

(iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்படவேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.

(iv) V.S. சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்,

அ) (i) மற்றும் (ii) ஆகியவைசரி             ஆ) (iii) மட்டும் சரி

இ) (iv) மட்டும் சரி                                 ஈ) அனைத்தும் சரி

2. (i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை.

(ii) முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் ராஜாஜி நெருக்கமாகப் பணியாற்றினார்.

(iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை. (iv) தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

அ) (i) மற்றும் (ii) ஆகியவைசரி     ஆ) (i) மற்றும்  (iii) ஆகியவைசரி

இ) (ii) மட்டும் சரி                          ஈ) (i), (iii) மற்றும் (iv) ஆகியவைசரி

IV) பொருத்துக

1.சென்னை வாசிகள் சங்கம்   அ. இந்தி எதிர்ப்புப் போராட்டம் (5)

2.ஈ.வெ.ரா                              ஆ. நீல் சிலையை அகற்றுதல் (3)

3.S.N.சோமையாஜுலு           இ. உப்பு சத்தியாகிரகம் (4)

4.வேதாரண்யம்                      ஈ. சித்திரவதை ஆணையம் (1)

5.தாளமுத்து                            உ. வைக்கம் வீரர் (2)

அலகு – 10

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

I) சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1.1709 இல் தரங்கம் பாடியில் ———- ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்

அ) கால்டுவெல் ஆ) F.W. எல்லிஸ் இ) சீகன்பால்கு ஈ) மீனாட்சி சுந்தரனார் 2. 1893இல் ஆதி திராவிட மகாஜனசபையை ——– நிறுவினார்.

அ) இரட்டைமலைசீனிவாசன்           ஆ) B.R. அம்பேத்கார்

இ) ராஜாஜி                                         ஈ) எம்.சி. ராஜா

3. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப் பட்ட தொழிற்சங்கம் ——— இல் உருவாக்கப் பட்டது.

அ) 1918 ஆ) 1917 இ) 1916   ஈ) 1914

4. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ——— நீதிக்கட்சியால் நிறுவப் பெற்றது.

அ) பணியாளர்தேர்வு வாரியம்    ஆ) பொதுப் பணி ஆணையம்

இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம் ஈ) பணியாளர் தேர்வாணையம்

5. சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்,

அ) எம்.சி. ராஜா                      ஆ) இரட்டைமலைசீனிவாசன்

இ) டி. எம். நாயர்                     ஈ) பி. வரதராஜுலு

II) கோடிட்ட இடங்களை நிரப்புக;

1. முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி தமிழ் ஆகும்.

2. புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் F.W. எல்லிஸ் ஆவார்.

3. மறைமலை அடிகள் தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.

4. தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது நீதிக்கட்சி ஆகும்

5. சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் பரிதிமாற் கலைஞர் எனமாற்றம் பெற்றது.

6. ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

7. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி அம்மையார் ஆவார்.

II) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

(i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812 இல் வெளியிடப்பட்டது.

(ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.

(iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.

(iv) திரு. வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.

அ) (i), (ii) ஆகியனசரி        ஆ) (i), (iii) ஆகியனசரி

இ) (iv) சரி                         ஈ) (ii), (iii) ஆகியனசரி

2. கூற்று: சென்னைமாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.

காரணம்: இக்கால கட்டத் தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.

அ) காரணம் , கூற்று ஆகியவை சரி

ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல

இ) காரணம், கூற்று இரண்டுமே தவறு

ஈ) காரணம் சரி, ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை .

IV) பொருத்துக:

1. திராவிடர் இல்லம்         – அ.மறைமலையடிகள்  (3)

2. தொழிலாளன்               – ஆ. இரட்டை மலை சீனிவாசன் (4)

3. தனித் தமிழ் இயக்கம்    – இ.சிங்கார வேலர்  (2)

4. ஜீவிய சரித சுருக்கம்     – ஈ. நடேசனார் (1)

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment