பத்தாம் வகுப்பு – வரலாறு 2-மதிப்பெண் – வினா விடைத் தொகுப்பு

பத்தாம் வகுப்பு – வரலாறு 2-மதிப்பெண் – வினா விடைத் தொகுப்பு

அலகு – 1

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

1. சீன-ஜப்பானியப்போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?

  • 1894-1895ல் நடைபெற்ற சீன-ஜப்பானியப் போரில் சீனாவை சிறிய நாடான ஜப்பான் தோற்கடித்தது உலகை வியக்க வைத்தது. ஜப்பானின் வெற்றி ஐரோப்பிய சக்திகளால் விரும்பப்படவில்லை.
  •  தொடர்ந்து ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய வல்லரசுகளின் எச்சரிக்கையை மீறி ஜப்பான் லியோடங் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் இணைத்துக் கொண்டது. இதன் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் தானே வலிமை மிகுந்த அரசு என மெய்பித்தது.

2. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக?

  • இங்கிலாந்து,
  • பிரான்ஸ்,
  • ரஷ்யா

3. ஐரோப்பிய போர்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?

  • இங்கிலாந்து – கண் மூடித்தனமான நாட்டுப்பற்று
  • பிரான்ஸ் – அதிதீவிரப்பற்று (அ) வெறிகொண்ட நாட்டுப்பற்று
  • ஜெர்மனி – ஜெர்மனி கலாச்சாரத்தை மிக உயர்வாக நினைப்பது

4. பதுங்குகுழி போர் குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

  • போர் வீரர்களால் தோண்டப்படும் பதுங்குக் குழிகள் அல்லது அகழிகள் எதிரிகளின் சுடுதலில் இருந்து தங்களைக் காத்துக்கொண்டு பாதுகாக்க உதவியது
  • முதல் உலகப்போரின் போது இப்பதுங்குக் குழியானது ஒன்றுக் கொன்று இணையாகச் செல்லும் இரண்டு முதல் நான்கு குழிகளைக் கொண்டிருக்கும்.
  • அவற்றின் வழியாக உணவு, ஆயுதங்கள், கடிதங்கள், ஆணைகள் வந்து சேரும். எதிரியால் சில அடி தூரத்திற்கு சுட முடியாது.

5. முஸ்தபா கமால் பாட்சா வகித்த பாத்திரமென்ன?

  • துருக்கி விடுதலை பெற்று மீண்டும் ஒரு நாடாக மறுபிறவி எடுத்து நவீனமயமாக்கி அதை எதிர்மறையான அங்கீகாரத் திலிருந்து மாற்றி யமைத்தார்.
  • சோவியத் யூனியன் ஆதரவுடன் சுல்தானியத்திற்கும், கல்பாத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

6. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியடுக

  • இது முதல் உலகப்போரில் வெற்றி பெற்ற நாடுகளின் அமைப்பாகவே இருந்தது.
  • சங்கத்திற்கென்று ராணுவம் இல்லை என்பதால் தன் முடிவுகளை நடைமுறைப்படுத்த முடியவில்லை .
  • ஐரோப்பிய அரசியல் விவேகத்தின் மையமாக மாறியது.
  • கூட்டுப் பாதுகாப்பு எனும் கோட்பாட்டை செயல்படுத்த முடியவில்லை.

அலகு-2

இரு உலகப் போர்களுக்கு இடையில் உலகம்

1. இந்தோ-சீனாவில் நடைபெற்ற வெள்ளை பயங்கரம் குறித்து நீங்கள் அறிந்ததென்ன.

  • இந்தோ -சீனாவில் வியட்நாம் தேசியகட்சியே முக்கிய அரசியல் கட்சி
  • 1929ல் வியட்நாம் வீரர்கள் ராணுவப்புரட்சி செய்தனர். பிரெஞ்சு கவர்னர் ஜெனரலையும் கொலை செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது.
  • இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கம்யூனிஸ்டுகளின் மிகப்பெரிய விவசாயிகளின் புரட்சியும் ஒடுக்கப்பட்டு வெள்ளை பயங்கரம் அரங்கேறியது.

2. ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்

  • இங்கிலாந்து பெருமந்தத்தின் தீயவிளைவுகளைத் தனது காலனிய நாடுகளுக்கு மாற்ற நடத்தப்பட்ட உச்சி மாநாடு.
  • 1932ல் நடைபெற்ற இம்மாநாட்டில் இங்கிலாந்திற்கும், ஆங்கிலப் பேரரசின் உறுப்பு நாடுகளுக்கும் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்பட ஏனைய நாட்டு பொருட்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க ஒத்துக்கொண்டன.

3. முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை?

  • 1922 – அக்டோபரில் ஒரு நீண்ட அமைச்சரவைச் சிக்கலின் போது முசோலினி பாசிஸ்டுகளை கொண்டு ரோமாபுரியை நோக்கி மாபெரும் அணிவகுப்பு ஒன்றை நடத்தினார்.
  • முசோலியின் வலிமையை கண்டு வியந்து போன அரசர் அவரை ஆட்சியமைக்க வரவேற்றார்.
  • மக்களாட்சியின் ஒருங்கிணைக்க முடியாத தன்மையும் உறுதியுடன் செயல்படமுடியாத இயலாமையும் முசோலினியின் வெற்றிக்கு உதவின.

4. 1884-85-ல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டின் சாரத்தைக் குறிப்பிடுக.

  • இம்மாநாட்டில் காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்கள் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
  • ஆனால் ஆங்கிலேயர்களுக்கும், தென்னாப்பிரிக்க போயர்களுக்கும் இடையே நடைபெற்றப் போர் இத்தீர்மானத்திற்கு எதிரான செயலாகும்.

5. பொருளாதார பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது?

  • இது இந்திய வேளாண்மை க்கும், உள்நாட்டு உற்பத்தி தொழில்களுக்கும் மரண அடியைக் கொடுத்தது.
  • வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை பாதியாக குறைந்தது.
  • விவசாயி, நிலத்திற்குக் கொடுக்க வேண்டிய குத்தகைக் தொகையில் மாற்றமில்லை
  • அரசுக்கு விவசாயிகள் செலுத்தவேண்டிய பணம் இரண்டு மடங்காயிற்று
  • இந்திய விவசாயிகளும், பொருள் உற்பத்தியாளர்களும் உயிர் பிழைக்க தங்களின் தங்கம், வெள்ளி ஆகியவற்றை விற்றனர்.

6. டாலர் ஏகாதிபத்தியம் தெளிவுபட விளக்குக.

  • டாலர் என்ற சொல் தொலைதூர நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்வதற்காக அமெரிக்கா பின்பற்றியக் கொள்கை ஆகும்
  • இதன் மூலம் அந்த நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தவும், தக்கவைத்துக் கொள்ளவும், அமெரிக்கா பயன்படுத்தியது

அலகு-3

இரண்டாம் உலகப்போர்

1. முதல் உலகப்போரின் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?

  • ஹிட்லர்- ஜெர்மனி
  • முசோலினி -இத்தாலி.
  • பிராங்கோ-ஸ்பெயின்

2. ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?

  • ஜெர்மனி பெருமளவு அவமானப்படுத்தப்பட்டதாக நிலவிய கருத்தைப் பயன்படுத்தி தனது வல்லமைமிக்க சொற்பொழிவாற்றும் திறமையாலும், உணர்ச்சிமிக்க பேச்சுக்களாலும் ஹிட்லர் மக்களை தன் பக்கம் ஈர்த்தார்.
  • நாசிக் கட்சியை நிறுவி ஜெர்மனியை அதன் ராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.

3. முத்துத் துறைமுக நிகழ்வை விவரி?

  • 1941- டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளமான முத்து துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன்னறிவிப்பின்றி பெரும் தாக்குதலைத் தொடுத்தன.
  • அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படையை முடமாக்கிவிட்டால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது தான் படையெடுக்கும்போது எதிர்ப்பேதும் இருக்காது என நினைத்ததே இதற்குக் காரணமாகும்.
  • இத்தாக்குதலில் பல போர்க்கப்பல்களும், போர் விமானங்கள் அழிக்கப்பட்டது. பல வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அமெரிக்கா ஜப்பான் மீது போர் பிரகடனம் செய்தது.

4. பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது என்ன?

  • 1942-ல் இங்கிலாந்து பெவரிட்ஜ் அறிக்கையை வெளியிட்டது.
  • இவ்வறிக்கை பொது நலனுக்கு பெரும் தடைகளாக உள்ள வறுமை, நோய், ஆகியவற்றை வெற்றிகொள்ள, பொதுமக்களுக்கு அதிக வருமானத்தை அளிப்பது, உடல் நலப் பாதுகாப்பு, கல்வி வீட்டுவசதி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் பல திட்டங்கள் இதில் இடம் பெற்றிருந்தன.

5. பிரெட்டன்-உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக

  • 1944ல் நடைபெற்ற பிரெட்டன்-உட்ஸ் மாநாட்டிற்குப் பின் 1945ல் பிரெட்டன்-உட்ஸ் இரட்டையர்கள் நிறுவப்பட்டன.
  • அவையாவன  உலகவங்கி,  பன்னாட்டு நிதி அமைப்பு

6. பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?

  • உலக அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பு, நிதி நிலையை உறுதியானதாக வைத்திருத்தல்.
  • பன்னாட்டு வணிகத்திற்கு வசதிகள் ஏற்படுத்துதல்.
  • வேலை வாய்ப்பினை பெருக்குவது மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சி.
  • உலகம் முழுவதும் வறுமையை ஒழித்தல்.

அலகு-4

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

1. சீனாவில் 1911 ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்று காரணிகளைக் குறிப்பிடுக

  • சாதாரண விவசாயிகளின் மீது அதிக வரிவிதிப்பும், அதிக குத்தகை வசூலித்ததால் அவர்கள் வறுமையின் பிடியில் சிக்கினர்.
  • மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுக்கு சீனா தன் துறைமுகங்களைத் திறந்து விட்டதால் பொருளாதார சுரண்டல் ஏற்பட்டது.
  • 1911ல் உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி பல மட்டங்களில் பரவியது.
  • மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாக செயல்பட்டனர். நடுத்தர வர்கத்திருந்து தலைவர்கள் உருவாயினர்.

2. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக

  • 1933ல் சீன பொதுவுடைமைக் கட்சியின் முழுக் கட்டுப்பாடும் பெற்ற மாவோ 1934ல் ஒரு நீண்ட பயணத்தை 100000 பொதுவுடைமை இராணுவத்தினருடன் சென்றது ஒரு சகாப்தமாக மாறியது.
  • இந்த பயணத்தில் கோமிங்டாங் படையினராலும், தளபதிகளாலும், காட்டுவாசிகளாலும் கடும் துன்பத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாயினர் இறுதியாக 20000பேர் மட்டும் 6000 மைல் கடந்து 1935ன் இறுதியில் ஷேனிப் பகுதியை அடைந்தனர்.

3. பாக்தாத் உடன்படிக்கைப் பற்றி அறிந்ததை எழுதுக.

  • துருக்கி, ஈராக், பிரிட்டன், ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் 1955ல் ஏற்படுத்திய ஒப்பந்தமே பாக்தாத் ஒப்பந்தம் ஆகும்.
  • அமெரிக்க ஐக்கிய நாடுகள் இவ்வுடன்படிக்கையில் 1958ல் இணைந்ததோடு இவ்வொப்பந்தம் மத்திய உடன்படிக்கை அமைப்பு என அறியப்பட்டது.
  • இவ்வொப்பந்தம் அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பும் அனைத்து அரபு நாடுகளுக்கும் திறந்தே இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
  • இவ்வொப்பந்தம் 1979ல் கலைக்கப்பட்டது.

4. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?

  • மேற்கு ஐரோப்பிய நாடுகளை தன் செல்வாக்கினுள் வைத்துக் கொள்ள அமெரிக்க ஐக்கிய நாடு மார்ஷல் திட்டத்தை உருவாக்கியது.
  • இத்திட்டம் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்தது.
  • ஐரோப்பாவின் தொழில் முன்னேற்றத்திற்கான முதலீடாகவும் அமைந்தது.

5. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக?

  • ஐக்கிய அமெரிக்காவின் முதலாளித்துவ நாடுகளிலும், சோவியத் நாட்டின் பொதுவுடமை நாடுகளிலும் சேராமலிருந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் எனப்பட்டன.
  • அதாவது ஆப்பிரிக்க-ஆசிய லத்தின் அமெரிக்க முன்னாள் காலனி நாடுகளாகும்
  • சோவியத் நாட் டின் வீழ்ச்சிக்கு பின் உலக மயமாதல், பொருளாதாரப் போட்டியின் காரணமாக மூன்றாம் உலக நாடுகள் முக்கியத்துவம் இழந்தன.

6. கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டது?

  • காஸ்ட்ரோவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர 1961 ஏப்ரலில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் கியூபாவின் விமான தளங்களை குண்டு வீசியும், அமெரிக்க போர்க்கப்பல்கள் கியூபாவை சுற்றி வளைத்து தாக்கின.
  • அப்போது சோவியத் நாடு கியூபாவில் அணுசக்தியோடு இணைக்கப்பட்ட ஏவுகணைகளை ரகசியமாக நிறுவப்போவதாய் கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசிற்கு உளவுத்துறை தகவல் கொடுத்தது.
  • அமெரிக்காவுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி சோவியத் நாட்டின் குடியரசுத் தலைவர் குருசேவ் ஏவுகணைகளைத் திரும்பப்பெற உறுதியளித்ததால் ஏவுகணைச் சிக்கல் செயலிழக்கச் செய்யப்பட்டது.

அலகு -5

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

1. மகரிஷி தேவேந்திர நாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக

  • தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார் அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்
  • கடவுள் மட்டுமே உண்மையின் எல்லையற்ற ஞானத்தின் நற்பண்பின் சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர் எங்கும் நிறைந்திருப்பவர்.
  • நம்முடைய வீடு பேறு இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் கடவுளை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
  • கடவுளை நம்புவதாவது அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்டுத்துவதிலும் அடங்கி உள்ளது.

2. சமூக சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடேவின் பங்களிப்பைக் குறிப்பிடுக.

  • சாதி மறுப்பு
  • சாதி மறுப்புத் திருமணம்
  • விதவை மறுமணம்
  • சமபந்தி
  • பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தன்னை அற்பணித்துக் கொண்டார்.
  • இவர் விதவை மறுமண சங்கம், புனே சர்வஜனிக் சபா, தக்காணக் கல்விக் கழகம் ஆகிய அமைப்புகளை நிறுவினார்.

3. ராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக

  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் என்னும் பிணைப்புகள் இருக்க வேண்டும் என்றார்.
  • அவர் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடி கொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களின் மீதும் காட்டுவது ஜீவகாருண்யம் என்றார்.
  • சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம் ஏற்படுத்தி 1866ல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடியப் பஞ்சத்தின்போது அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
  • இவர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு திருவருட்பா ஆகும்.

4. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் யாவை

  • சதி எனும் உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு,
  • குழந்தை திருமணம்,
  • பலதார மணம்
  • விதவை மறுமணம் ஊக்குவிப்பு
  • உருவ பொருளற்ற சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்த்தது.

5. ஏழைகள் மற்றும் அடிதட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக

  • பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார்.
  • விதவை மறுமணத்தை (குறிப்பாக உயர்ஜாதி இந்துக்களின்) ஆதரித்தார்
  • பெற்றோரில்லா குழந்தைகளுக்கு விடுதிகளையும், விதவைகளுக்கு காப்பகங்களும் உருவாக்கினார்.
  • தன் மனைவியுடன் சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கத் துணைநின்றார்.

அலகு-6

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள்

1. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?

  • வரி வசூல், நிலப்பகுதியை நிர்வகித்தல், வழக்குகள், விசாரித்தல், சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல் பணிகள்.
  • காவல் காக்கும் கடமை (படிக்காவல், அரசுக்காவல்)
  • நாயக்கர்களின் அதிகாரத்தை தக்க வைக்க உதவினர்,

2. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.

  • கிழக்கு பாளையங்கள்: சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி,
  • மேற்கு பாளையங்கள் : ஊத்துமலை, தலைவன் கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி சேத்தூர்

3. களக்காடு போரின் முக்கியத்துவம் என்ன?

  • நவாப்பின் கூடுதல் படைகள், கம்பெனியின் சிப்பாய்கள் கர்நாடக பகுதியின் ஆதரவு ஆகியன மாபூஸ்கானுக்கு கிடைத்தது.
  • ஆனால் மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தன் படைகளை நிலைநிறுத்தும் முன் திருவிதாங்கூர் படைகள் பூலித்தேவர் படைகளோடு சேர்ந்ததால் களக்காடு போரில் மாபூஸ்கான் தோற்கடிக்கப்பட்டார்.

4. கம்பெனியாருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சர்ச்சை ஏற்படக் காரணமாக விளங்கியது எது?

  • பாளையங்களில் வரிவசூல் செய்யும் உரிமை பெற்ற கம்பெனி ஆட்சியாளர்கள் பாளையக்காரர்களை அவமானப்படுத்தியும், படைகளை வைத்தும் வரிவசூல் செய்தனர்.
  • இதுவே பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரரான கட்ட பொம்மனுக்கும், கம்பெனிக்கும் இடையே சர்ச்சை ஏற்பட காரணமானது.

5. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கியக் கூறுகளைத் தருக.

  • மருது சகோதரர்களால் வெளியிடப்பட்டது.
  • பிரிட்டிஷாருக்கு எதிராக அனைத்து வேறுபாடுகளையும் (சாதி, சமய, இன) கடந்து எதிர்க்க விடுக்கப்பட்ட முதல் அறை கூவல்.
  • இதனால் தமிழகப் பாளையக்காரர்கள் பலர் ஒன்று திரண்டனர்

அலகு-7

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்.

1. ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

  • மறுசீரமைத்தல் கிளர்ச்சிகள்
  • சமய இயக்கங்கள்
  • சமூககொள்கை
  • மக்களின் கிளர்ச்சி

2. வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.

  • சதாரா
  • ஜான்சி
  • நாக்பூர்
  • சாம்பல்பூர்
  • பஞ்சாபின் சில பகுதிகள்.

3. வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன?

  • ஆங்கில ஆட்சிக் காலத்தில் இந்தியா பிரிட்டனின் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களை அனுப்பியும் உற்பத்திப் பொருட்களை விற்கும் சந்தையாகவும் உருவானது.
  • எந்தவித ஆதாயமுமின்றி வளங்கள் தொடர்ந்து பரிமாற்றம் செய்வது வளங்களின் சுரண்டலாகும்.

4. தன்னாட்சி (ஹோம்ரூல்) இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்களை விவரிக்கவும்

  • அரசியலமைப்பு மூலம் பிரிட்டீஷ் பேரரசிற்குள் தன்னாட்சி அடைவது.
  • தன்னாட்சி பகுதி (டொமினியன்) தகுதியை அடைவது
  • தங்கள் இலக்குகளை வன்முறையில்லா அரசியல் சாசனம் மூலம் அடைவது. 5. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும் 1916ல் ஏற்பட்டது
  • காங்கிரஸ் கட்சியும், முஸ்லீம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென ஏற்றுக்கொண்டன.
  • இதற்கு பதிலாக முஸ்லீம்களுக்கு, தனித்தொகுதிகள் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது.

அலகு- 8

தேசியம்: காந்திய காலகட்டம்

1. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.

  • 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் (சீக்கியர்கள்) பொது கூட்டத்திற்கு கூடினர்.
  • இதையறிந்த ஜெனரல் டயர் முன்னறிவிப்பின்றி அவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட உத்தரவிட்டார்.
  • துப்பாக்கி சூட்டில் பலர் இறந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • இதை எதிர்த்து தாகூர் தன் நைட்வுட் பட்டத்தையும், காந்தியடிகள் கெய்சர்-இ-ஹிந்த் பதக்கத்தையும் துறந்தனர்.

2. கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக

  • முதல் உலகப் போருக்குப் பின் இசுலாம் மதத்தலைவரான துருக்கியின் கலிப் கடுமையாக நடத்தப்பட்டார்.
  • அவருக்கு ஆதரவாக அலிசகோதரர்கள் (முகமது அலி, சௌகத் அலி) கிலாபத் இயக்கத்தை தொடங்கினார்கள்.
  • இந்து-முஸ்லிம் இணைப்புக்கு வாய்ப்பாக அமையுமென காந்தியடிகள் இதை ஆதரித்தார்.

3. ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப் பெற்றார்?

  • 1922-ல் உத்திரபிரதேசம் சௌரிசௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்திய பேரணி காவல்துறையினரால் வன்முறையாக மாறியது.
  • குறைந்த எண்ணிக்கை கொண்ட காவல் துறையினரின் காவல்நிலையத்தை பேரணிக்கு வந்த கோபமுற்ற கூட்டத்தினர் தீயிட்டு கொளுத்தியதில் 22 காவலர்கள் உயிரிழந்தனர்.
  • இதனால் வேதனையடைந்த காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றார்.

4. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?

  • சைமன் குழுவில் இருந்த 7 உறுப்பினர்களும் ஆங்கிலேயர்களே, இந்தியர்கள் எவரும் இல்லை .
  • இதனால் இந்தியர்கள் ஆத்திரமும், அவமானமும் அடைந்தனர்.
  • தங்கள் அரசியல் சாசனத்தை நிர்ணயிக்கும் உரிமை தங்களுக்கு இல்லை என கருதி காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் சைமன் குழுவை புறக்கணித்தன.

5. முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?

  • முழுமையான சுயராஜ்ஜியம் என்பது முழுமையான சுதந்திரம் பெறுவது ஆகும்.
  • காங்கிரசார் சிலர் டொமினியன் அந்தஸ்து என்பதில் திருப்தி அடையாமல் முழு சுயராஜ்யம் பெற விரும்பினர்.

6. பகத்சிங் பற்றி குறிப்பு வரைக

  • ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் கைவிட்டதால் ஆங்கில ஆட்சியை எதிர்க்க பகத்சிங் தன் தோழர்களுடன் இந்துஸ்தான் குடியரசு ராணுவத்தை மீண்டும் அமைத்தார்.
  • லாலாலஜ்பதி ராயின் உயிரிழப்புக்கு காரணமான ஆங்கில அதிகாரி படுகொலை செய்யப்பட்டார்.
  • 1929-ல் மத்திய சட்டப் பேரவையில் புகைகுண்டு ஒன்றை பகத்சிங்கும், B.K.தத்தும் வீசினர்.
  • பகத்சிங் கைது செய்யப்பட்டு மரண தண்டனை பெற்றார்.

7. பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?

  • தனித் தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டு, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் யோசனை ஏற்கப்பட்டது.
  • ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 லிருந்து 148 ஆக அதிகரித்து, மத்திய சட்டப் பேரவையில் 18% இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அலகு-9

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

1. மிதவாத தேசிய வாதிகளின் பங்களிப்பை பட்டியடுக

  • ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்தியர்களைச் சுரண்டினர் என்பதை கூறினர். ஆங்கிலேயர்கள் காலனிகளில் பிரதிநிதித்துவமற்ற அரசை திணிப்பதை பற்றி கூறினர்.
  • அறை கூட்டங்கள் நடத்துதல், பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடுதல் போன்ற செயல்கள் செய்தனர்.

2. திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக

  • கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் மற்றும் பிபின் சந்திரபால் விடுதலை கொண்டாட்ட பொதுக்கூட்டத்தினை வ.உ.சியும் சிவாவும் திருநெல்வேலியில் நடத்தினர்
  • இதனால் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட செய்தி திருநெல்வேலியில் பரவியதால் கலவரம் வெடித்தது.
  • காவல் நிலையம், நீதிமன்ற, நகராட்சி கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டன. துப்பாக்கி சூட்டில் 4 பேர் இறந்தனர்.

3. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்டின் பங்களிப்பு யாது?

  • 1916-ல் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கி அகில இந்திய அளவில் தன்னாட்சி கோரிக்கையை வைத்தார்.
  • புத்தகங்கள் செய்தித்தாள்கள் மூலம் (நியு இந்தியா, காமன்வீல்) தன் திட்டத்தை மக்களிடம் கொண்டு சென்றார்.
  • மாணவர்கள், பொது மக்கள், தொழிலாளர்களும் இவ்வியக்கத்தில் இணைந்தனர்.

4. தமிழ்நாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுக

  • 1942 ஆகஸ்ட் 8-ல் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற செய் அல்லது செத்துமடி என காந்தியடிகள் முழங்கினார்.
  • தமிழ்நாட்டில் காமராஜர் தலைமறைவாக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு ஆதரவு திரட்டினார்.
  • ராஜாஜி சத்தியமூர்த்தி கைது, பல இடங்களில் வன்முறை
  • அஞ்சலகங்கள் தீக்கிரை, தந்தி கம்பிகள் வெட்டப்பட்டன.

அலகு – 10

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

1. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.

  • இந்திய மக்கள் மீது ஆங்கிலேயர்கள் தங்கள் பண்பாட்டை திணிக்க முயன்றனர்.
  • தமிழ்நாடும் அத்தகைய மாற்றத்தை அனுபவித்தது. தமிழ்மொழி மற்றும் கலாச்சாரம் பாதிக்கப்பட்டது
  • அச்சு இயந்திரம் அறிமுகம், திராவிட மொழிகள் மீதான ஆய்வுகள் மற்றும் பல தமிழ் மறுமலர்ச்சி தோன்ற காரணமானது.
  • இதன் விளைவு சமய, சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. இதுவே தமிழ் மறுமலர்ச்சி எனப்படும்.

2. தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பினை நன்கு புலப்படுத்துக

  • கால்டுவெல் தன் இலக்கண நூல் தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழி குடும்பத்தைச் சார்ந்தவை. அவை இந்தோ- ஆரிய குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை என்ற கோட்பாட்டை கூறினார்.
  • திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமான ஒப்புமை இருப்பதையும், அவை சமஸ்கிருதத்துடன் இல்லை என்றும் கூறினார்.

3. தங்களுடைய எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டியலிடவும்.

  • உ.வே.சா
  • திரு.வி.க.
  • மறைமலையடிகள்
  • பாரதியார்
  • தாமோதரனார்
  • வையாபுரி
  • பரிதிமாற்கலைஞர்

4. நீதிக்கட்சியால் நிறைவேற்றப்பட்ட இந்து சமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்

  • 1926-ல் நிறைவேறிய இச்சட்டம் எந்த ஒரு தனிநபரும், சாதிவேறுபாடின்றி கோயில் நிர்வாக குழுவில் உறுப்பினராகவும், கோயில் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்தது.
  • இதனால் உயர்சாதியினரால் சுரண்டப்பட்ட கோயில் சொத்துக்கள் (பொது சொத்துக்கள்)

5. தென்னிந்திய நல உரிமைச்சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • தமிழ் – திராவிடன்.
  • ஆங்கிலம் – ஜஸ்டிஸ்
  • தெலுங்கு – ஆந்திர பிரகாசிகா

6. பெரியாரை ஒரு பெண்ணியக்க வாதியாக மதிப்பிடுக

  • குழந்தை திருமணம், தேவதாசி முறையை எதிர்த்தார்.
  • பெண்களுக்கு விவாகரத்து பெறுதல், சொத்துரிமை கொடுப்பதில் பங்கு உண்டு என வலியுறுத்தினார்
  • பெண்களின் மோசமான நிலைக்கு குரல் கொடுத்தார்
  • குடும்ப கட்டுப்பாடு, கருத்தடை ஆதரித்தார்
  • பெண்ணுக்கு தாய்மை பெருஞ்சுமை என கூறினார்.

7. 1920-ல் நடத்தப்பட்ட அகில இந்திய தொழில் சங்க காங்கிரசின் நடவடிக்கைகளை விளக்குக.

  • தொழிலாளர் பிரச்சனையில் காவல் துறை தலையீடு இன்றி பாதுகாப்பு
  • வேலை இல்லாதவர்களுக்கான ஒரு பதிவேடு பராமரித்தல்
  • உணவு பண்டங்களின் மீது ஏற்றுமதி கட்டுப்பாடு
  • காயமடைந்தோருக்கு ஈட்டுத்தொகை, காப்பீடு
  • தொழிலாளர்களுக்கு, அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம்.

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment