அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டு பட்டியலில் மாணவர் பெயரை கண்டறிவது எப்படி

அரசுப் பள்ளிகள் சட்டம் 2021ன்படி அண்மையில் தமிழ்நாட்டில் முற்றிலும் 6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் மட்டுமே பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் 7.5% இடஒதுக்கீட்டை அறிவித்தது.

இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டினால் பலனடையப் போகும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய சான்றுகள் இணையம் மூலம் சரிபார்க்கப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை முழுவதுமாக அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இந்த இடஒதுக்கீடு பெறுவார்கள்.

இந்த 7.5% இடஒதுக்கீட்டை பயன்படுத்திக்கொள்ள பொருத்தமான 12 வகுப்பு பயிலும் 2.7 லட்சம் மாணவர்களின் பெயர் கொண்ட பட்டியலை நம் இணையதளத்தில் இப்போது வெளியிடுகிறோம். – https://studentrepo.tnschools.gov.in. மாணவர்கள் இந்தத் தளத்திற்குச் சென்று தங்கள் மாவட்டத்தையும் பள்ளியின் பெயரையும் தேர்ந்தெடுத்து பட்டியலைப் பார்வையிட்டு தங்கள் பெயர் இப்பட்டியலில் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

உயர்கல்வித் துறையோடு ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை ஒன்றிணைந்து, இரு துறைகளுக்குமிடையே ஒரு தொழில்நுட்பப் பாலமொன்றை உருவாக்கி இருக்கிறது. அதன் மூலம் நம் மாணவர்கள் பள்ளிக் கல்வியிலிருந்து உயர் கல்விக்கு எந்தச் சிரமமுமின்றி இந்தத் திட்டத்தை பயன்படுத்தி சென்றுவிட முடியும்.

மேலும், ஒருவேளை ஒரு மாணவர் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றிருந்து, அவருடைய பெயர், அந்தப் பட்டியலில் விடுபட்டிருந்தால், இணையம் மூலம் தன் எமிஸ் ஐடியை பயன்படுத்தி உடனடியாக தன் குறித்த விவரங்களை மீண்டும் அளித்தால் விரைந்து தீர்வு காணப்படும். பட்டியலில் பெயர் விடுபட்ட மாணவர்கள் அதே இணையதளத்தில் பட்டியலை அடுத்து காணப்படும் eங்கள் விடுபட்டுள்ளதா இங்கு கிளிக் செவுதி என்கிற பொத்தானை அமுக்கி விவரங்களைத் தெரிவித்தால், விரைவில் பள்ளிக் கல்வித் துறை அதை பரிசீலித்து மாணவர்கள் 6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றது உறுதியானால், அந்த மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும்.

Leave a Comment