கலை அறிவியல் கல்லுாரி கவுன்சிலிங் துவக்கம்

தமிழக அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங், நேற்று முன்தினம் துவங்கியது.

     பிளஸ் 2 முடித்த மாணவர்கள், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பில் சேர, கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் வழியாக, ‘ஆன்லைனில்’ விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுதும், 4.11 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

     இந்நிலையில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், ஒவ்வொரு அரசு கலை அறிவியல் கல்லுாரியும், தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

     இதன் அடிப்படையில், அந்தந்த கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று முன்தினம் துவங்கியது. விண்ணப்பித்த மாணவர்கள் நேரடியாக கல்லுாரிக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் விருப்பத்தின்படி, இடம் வழங்கப்படுகிறது.

     இதற்கிடையே, தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், மாணவர் சேர்க்கையை குளறுபடியின்றி நடத்த, கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி வழி காட்டுதல்களை வழங்கி உள்ளார். முதல்கட்ட சேர்க்கையை ஒரு வாரத்தில் முடிக்க, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment