தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு ஆக.22 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாதந்தோறும் ரூ.1,500 வீதம் ஊக்கத் தொகை இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளது. பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும் இத்தேர்வில் பங்கேற்க ஆக.22 முதல் செப். 9 வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

       தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்படவுள்ளது.

 இந்தத் தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம் இரு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

         தேர்வில் 50 சதவீதம் அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.

தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ்ப்பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2022-2023-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள      அங்கீகாரம் பெற்ற அனைத்து வகைப்பள்ளிக ளில் பயிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள் பட) பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு அக். 1-ஆம் தேதி (சனிக்கிழமை) தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி மூலம் மட்டுமே விண்ணப் பிக்க இயலும்.

  எனவே, மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆக. 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 9 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணத்தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்டபள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். என்று அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.

Leave a Comment