பட்டதாரி ஆசிரியர்களுக்குத் தேர்வு தொடர்பான ஒருநாள் ஒருங்கிணைந்த பயிற்சி (14.11.22 முதல் 18.11.22 வரை)

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

. .எண்.         /       /2022        நாள் –           . 11. 2022

                    பொருள்   பள்ளிக் கல்வி  – விழுப்புரம் மாவட்டம் – பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி-

  பாடப்பொருள், கற்பித்தலில் ICT TOOLS பயன்பாடு மற்றும் தேர்வு தொடர்பான ஒருங்கிணைந்த ஒருநாள் பயிற்சி – பட்டதாரி ஆசிரியர்களை விடுவித்து பயிற்சிக்கு  அனுப்ப  தெரிவித்தல் – தொடர்பாக.

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு / நிதியுதவி / நகராட்சி / ஆதி திராவிடர் நல உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை போதிக்கும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு (தற்காலிக ஆசிரியர்கள் உட்பட) பாடப்பொருள், கற்பித்தலில் ICT TOOLS பயன்பாடு மற்றும் தேர்வு தொடர்பான ஒருங்கிணைந்த ஒருநாள் பயிற்சி, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெறவுள்ளதால் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை (பாடவாரியாக) கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்குமாறு அனைத்து  பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வ.எண்.நாள்.பாடம்இடம் / நேரம்
1.14.11.2022தமிழ்அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம். நேரம்- 9.30 – 5.00
2.15.11.2022சமூக அறிவியல்
3.16.11.2022 அறிவியல்
4.17.11.2022கணிதம்
5.18.11.2022ஆங்கிலம்

குறிப்பு-

1. பயிற்சிக்கு சரியான நேரத்திற்கு  வருகைபுரிய வேண்டும்.

2. மதிய உணவு கொண்டு வர வேண்டும்.

3. எக்காரணம் கொண்டும் பயிற்சியில் கலந்துகொள்வதிலிருந்து விலக்களிக்கப்பட மாட்டாது.

4. பத்தாம் வகுப்பு பாட புத்தகம் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

5. பள்ளித் துணை ஆய்வாளர்கள் தங்கள் கல்வி  மாவட்டத்திற்கான வருகைப் பதிவேட்டினை பராமரித்து  மற்றும் ஒருங்கிணைந்து  செயல்பட தெரிவிக்கப்படுகிறது.

கிருஷ்ணப்பியா,

முதன்மைக் கல்வி அலுவலர்,

விழுப்புரம்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / நிதியுதவி / நகராட்சி / ஆதி திராவிடர் நல உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

விழுப்புரம் மாவட்டம்.

நகல்- மாவட்டக்கல்வி அலுவலர்கள்,

விழுப்புரம் / திண்டிவனம்.

Leave a Comment