பத்தாம் வகுப்பு – குடிமையியல் 2-மதிப்பெண் – வினா விடைத் தொகுப்பு

பத்தாம் வகுப்பு – குடிமையியல் 2-மதிப்பெண் – வினா விடைத் தொகுப்பு

அலகு – 1

இந்திய அரசியலமைப்பு

1. அரசியலமைப்பு என்றால் என்ன?

 • ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச்சட்டமே அரசியலமைப்பு ஆகும்.
 • ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அரசியலமைப்பே அச்சாணி ஆகும்
 • மத்திய, மாநில அரசுகளிடையே அதிகார பங்கீட்டை கட்டமைப்பு செய்வது

2. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?

 • சிட்டிசன் எனும் ஆங்கில சொல் சிவிஸ் எனும் இலத்தின் சொல்லிலிருந்து பெறப்பட்டது.  
 • இதன் பொருள் நகர அரசில் வசிப்பவர் என்பதாகும்
 • நம் அரசியலமைப்பு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.

3. எத்தனை வகையான அடிப்படை உரிமைகள், இந்திய அரசியலமைப்பால் பட்டியலிடப் படுகின்றன?

 • இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகள் வழங்கியது. ஆனால் தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.  அவையாவன.
 • சமத்துவ உரிமை
 • சுதந்திர உரிமை
 • சுரண்டலுக்கெதிரான உரிமை
 • சமய சார்பு உரிமை
 • கல்வி, கலாச்சார உரிமை
 • அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வுகாணும் உரிமை
 • இது இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படுகிறது.

4. நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?

 • நீதிமன்ற முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
 • இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஒரு ஆணையாகும்.
 • உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இரண்டுமே ஐந்து வகையான நீதிப் பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றன.

5. இந்தியாவின் செம்மொழிகள் யாவை?

 • தமிழ் (2004)
 • சமஸ்கிருதம் (2005)
 • தெலுங்கு (2008)
 • கன்ன டம் (2008)
 • மலையாளம் (2013)
 • ஒடியா (2014)

6. தேசிய அவசர நிலை என்றால் என்ன?

 • போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு (வெளிப்புற அவசர நிலை) அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி (அ) உடனடி ஆபத்து (அ) அச்சுறுத்தல் (உள்நாட்டு அவசர நிலை) காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத் தலைவர், அரசியலமைப்புச் சட்டம் 352-ன் கீழ் அசவர நிலையை பிறப்பிப்பது தேசிய அவசர நிலை ஆகும்.
 • அவசர நிலைகள் 1962, 1971, 1975 ம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன

7. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியடுக.

 • சட்டமன்ற உறவுகள்
 • நிர்வாக உறவுகள்,
 • நிதி உறவுகள்

அலகு-2

நடுவண் அரசு

1. இந்திய குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

 • குடியரசுத் தலைவர், ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின்படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
 • வாக்காளர் குழுமம் என்பது மாநிலங்களவை மற்றும் மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.
 • இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்

2. நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?

 • கேபினெட் அமைச்சர்கள் (அ) ஆட்சிக் குழு அமைச்சர்கள்
 • இராஜாங்க – அமைச்சர்கள் அமைச்சரவை குழுவின் இரண்டாவது வகையினர்.
 • துணை அமைச்சர்கள் – அமைச்சரவை குழுவின் மூன்றாவது வகையினர்

3. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?

 • இந்திய குடிமகனான இருத்தல் வேண்டும்
 • ஐந்து ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 10 ஆண்டுகள் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் செயலாற்றியிருத்தல் வேண்டும்
 • குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.

4. நிதி மசோதா என்றால் என்ன?

 • வருமானம் மற்றும் செலவு சம்மந்தமான மசோதா நிதி மசோதா ஆகும்.
 • அரசின் பொதுநிதி சம்மந்தமான மசோதா நிதி மசோதா எனப்படும்
 • இதை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மக்களவைக்கு அதிகாரம் இல்லை
 • மக்களவையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு மாநிலங்களவை ஒப்புதலுடன் சட்டமாகிறது.

5. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக

 • இவர் குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார்.
 • இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை இவருக்கு உண்டு.
 • நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுதவற்கும் பங்கு கொள்வதற்கும் உரிமை உண்டு ஆனால் வாக்களிக்க இவருக்கு உரிமை இல்லை.

அலகு – 3.

மாநில அரசு

1.மாநில ஆளுநரின் முக்கியத்துவம் என்ன?

 • மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆளுநர் ஆவார்.
 • மாநில ஆளுநரின் பெயரிலேயே மாநில நிர்வாகம் செயல்படுகிறது
 • மாநில நிர்வாகத்தின் அனைத்து அதிகாரங்களையும் பெற்றவர்
 • இந்த அதிகாரம் அவரால் நேரடியாகவோ அல்லது அவரின் கீழுள்ள அலுவலர்களாலோ செயல்படுத்தப்படுகிறது.

2. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?

 • அவர் இந்திய குடிமகனான இருத்தல் வேண்டும்
 • அவர் 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
 • அவர் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. இருப்பின் ஆளுநர் பதவியேற்கும் போது அப்பதவி தாமாகவே காலியாகி விடும்.
 • அவர் இலாபம்தரும் எந்த தொழிலும் ஈடுபடக்கூடாது.

3. உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை?

 • சென்னை, பம்பாய், கல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.
 • முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை பெற்றுள்ளன.
 • ரூ.2000க்கு மேற்பட்ட குற்றவியல் வழக்குகளை மாகாண நீதிபதிகள் விசாரிப்பர்,

4. உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீ புரிந்து கொண்டதென்ன?

 • இவை தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும், கீழ் நீதிமன்றங்களிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் விசாரிக்கும்.
 • நாட்டின் இராணுவ தீர்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை.

அலகு-4

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

1. வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?

 • ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களில் தனது தேசிய நலனை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்டதே வெளியுறவுக் கொள்கை ஆகும்
 • இது நாட்டு மக்களின் நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்க உதவுகிறது.

2. இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி.

 • அமைதி விரும்பும் நாடான இந்தியா எப்போதும் படைவலிமை குறைப்பை வலியுறுத்தி வருகிறது.
 • முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை
 • ஐ.நாவின் படை வலிமை குறைப்புத் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு,
 • அணு ஆயுதத்தைப் போர்த் தாக்குதலுக்கு பயன்படுவதில்லை.

3. வேறுபடுத்துக : உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டுக்கொள்கை.  உள்நாட்டுக் கொள்கை             

 • உள்நாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளான விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கையாகும்.
 • இது உள்விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது.

வெளிநாட்டுக் கொள்கை

 • வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு பிறநாடுகளுடன் கொண்டுள்ள விவகாரங்கள் தொடர்பானதாகும்.
 • வணிகம், அரச தந்திரம், தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் உலகளாவிய சூழல் ஆகிய வகைகளைக் கொண்டது வெளியுறவுக் கொள்கை.

4. பஞ்சசீலக் கொள்கைகளில் நான்கினைப் பட்டியடுக

 • ஒவ்வொரு நாட்டின் எல்லை, இறையாண்மை மீது பரஸ்பர மதிப்பு
 • பரஸ்பர ஆக்கிரமின்மை
 • பரஸ்பர உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாமை
 • பரஸ்பர நலனுக்கான சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்
 • அமைதியாக சேர்திருத்தல்

5. இந்தியா அணிசேராக் கொள்கையை தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்ன?

 • நேரு வல்லரசு நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா) ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகள் மீது செலுத்தும் ஆதிகத்தை எதிர்த்தார்.
 • எனவே பனிப்போரில் ஈடுபட்டுள்ள இரு வல்லரசுகளுடன் சேராமல் அணிசேராக் கொள்கையை தேர்ந்தெடுத்தார்,

6. சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக

 • இந்தியா
 • இலங்கை
 • நேபாளம்
 • பூட்டான்
 • பாகிஸ்தான்
 • ஆப்கானிஸ்தான்
 • வாங்காளதேசம்
 • மாலத்தீவுகள்

7. அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?

 • நேரு – இந்தியா
 • நாசர் – எகிப்த்
 • டிட்டோ – யுகோஸ்லேவியா
 • சுகர்னோ – இந்தோனேசியா
 • நுக்ருமா – கானா

8. வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களை குறிப்பிடுக

 • உடன்படிக்கைகள்
 • நிர்வாக ஒப்பந்தங்கள்
 • தூதுவர்கள் நியமனம்
 • வெளிநாட்டு உதவி
 • சர்வதேச வணிகம்
 • ஆயுதப் படைகள்,

அலகு – 5

இந்தியாவின் சர்வதேச உறவுகள்

1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக

 • பாகிஸ்தான்
 • ஆப்கானிஸ்தான்
 • சீனா
 • நேபாளம்
 • பூடான்
 • வங்காளதேசம்
 • மியன்மார்
 • இலங்கை
 • மாலத்தீவு

2. போர்த்திறன் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA) பற்றி சிறு குறிப்பு வரைக

 • இந்தியா, ஆப்கானிஸ்தான் உறவு இந்த ஒப்பந்தம் மூலம் வலிமை பெற்றுள்ளது.
 • இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பு, மறுசீரமைப்பு, நிறுவனங்கள், வேளாண்மை, நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வரியில்லாமல் இந்திய சந்தையை எளிதில் அடைதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கு வழிவகை செய்கிறது.

3. பிரிக்ஸ் (BRICS)) உறுப்பு நாடுகளின் பெயரைக் குறிப்பிடுக

 • பிரேசில் (B)
 • ரஷ்யா (R)
 • இந்தியா (I)
 • சீனா (C)
 • தென்னாப்பிரிக்கா (S)

4. கல்டன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன?

 • இத்திட்டத்தினை இந்தியா உருவாக்கி வருகிறது
 • இது கொல்கத்தாவை மியன்மாரில் உள்ள சிட்வேயுடன் இணைப்பதற்கான சாலை-நதி துறைமுகம்-சரக்கு போக்குவரத்து திட்டமாகும்.

5. சபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.

 • இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட முக்கூட்டு ஒப்பந்தம்
 • இதன்படி சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி மூன்று நாடுகளிலும் போக்குவரத்து வழிதடங்கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

6. இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் ஐந்து உலகலாவிய குழுக்களை பட்டியடுக

 • பிரிக்ஸ்
 • ஐ.நா.சபை
 • சார்க்
 • G-20
 • அணிசேரா இயக்கம்
 • IBSA

7. ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?

 • உற்பத்தி துறையில், உற்பத்தி மற்றும் திறன் இந்தியா திட்டங்களில் பங்களிக்கவும் ஜப்பானிய உற்பத்தி திறன்களில் பங்களிக்கவும், ஜப்பானிய உற்பத்தித் திறன்களை வழங்கி இந்தியாவின் தொழில்துறை தளத்தை மேம்படுத்துவது
 • 30,000 இந்திய மக்களுக்கு பயிற்சி
 • 2017-ல் 4 மாநிலங்களில் (குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு)-இந்த நிறுவனம் உருவானது.

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment