பத்தாம் வகுப்பு – சமூக அறிவியல் (புவியியல்) -5 மதிப்பெண் வினா-விடைத்  தொகுப்பு

பத்தாம் வகுப்பு – சமூக அறிவியல் (புவியியல்)- 5 மதிப்பெண் வினா-விடைத்  தொகுப்பு

 அலகு – 1

இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம்மற்றும்வடிகாலமைப்பு

1. இமய மலையின் உட்பிரிவுகளையும், அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.

மூன்று உட்பிரிவுகள்:

I. டிரான்ஸ் (அ) மேற்கு இமயமலைகள்

ஜம்மு-காஷ்மீர், திபெத் பீடபூமியில் உள்ளது லடாக், காரக்கோரம், கைலாஸ் மலைத்தொடர்கள்

II. இமயமலைகள் (மத்திய)

மூன்று பிரிவுகள்

பெரிய (அ) இமாத்ரி

 • வடக்கு பகுதி, குறைந்த மழை, உயர்ந்த சிகரங்கள்

சிறிய (அ) இமாச்சல்

 • மத்திய மலைத்தொடர், புகழ்பெற்ற கோடை வாழிடங்கள்

வெளி (அ) சிவாலிக்

 • ஒரு பகுதி ஆறுகளால் உருவான படிவு, கிழக்கு பகுதி டுயர்ஸ், மேற்குப் பகுதி டூன்கள்

III. கிழக்கு (அ) பூர்வாஞ்சல் இமயமலைகள்

 • இமயமலையின் கிழக்கு கிளை, வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது

இமயமலையின் முக்கியத்துவம்;

 • இந்தியாவிற்கு இயற்கை அரண்
 • வற்றாத நதிகளின் பிறப்பிடம்
 • சுற்றுலாத் தளம்
 • பல்லுயிர் மண்டலம்
 • கோடை வாழிடம், புனித தளங்கள்
 • தென்மேற்கு பருவக்காற்றை தடுத்து வடஇந்தியாவிற்கு கனமழை
 • காடுசார்ந்த தொழில்களுக்கு மூலப்பொருள் தருதல்

2. தீப கற்ப ஆறுகளைப் பற்றி விவரி.

 • தென் இந்தியாவில் பாயும் ஆறுகள்
 • பெரும்பாலான ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி
 • இவை பருவகால (அ) வற்றும் ஆறுகள் ஆகும்
 • இரு வகைப்படும்

கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்; (வங்காள விரிகுடாவில் கலக்கும்)

மகாநதி;

 • 85 கி.மீ நீளம், சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் – சிகாவில் உற்பத்தி

கோதாவரி (நீளமான ஆறு);

 • 1465 கி.மீ. நீளம், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் – மேற்கு தொடர்ச்சிமலையில் உற்பத்தி

கிருஷ்ணா ;

 • 1400 கி.மீ நீளம், மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி

காவேரி (தென்கங்கா)

 • 800 கி.மீ. நீளம், கர்நாடகா-குடகுமலை, தலைக்காவேரியில் உற்பத்தி.

2. மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்; (அரபிக்கடலில் கலக்கும்)

நர்மதை ;

 • 1312 கி.மீ நீளம், மத்திய பிரதேசம்-அமர்கண்டாக் பீடபூமி உற்பத்தி

தபதி;

724 கி.மீ நீளம், மத்திய பிரதேசம் முல்டாயில் உற்பத்தி

3. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக

 • உற்பத்தி-உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டம், கங்கோத்ரி
 • நீளம்-2525 A.மீ)
 • துணை ஆறுகள் கோமதி, காக்ரா, கோசி, யமுனை, சோன், சாம்பல்
 • கலக்கும் இடம்- வங்காள விரிகுடாகடல்
 • இதன் தொகுப்பு இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பு
 • இதன் ஆற்றங்கரையில் மக்களடர்த்தி மிக்க பலநகரங்கள்
 • கங்கை, பிரம்மபுத்திரா சேர்ந்து இந்தியாவில் மிகப்பெரிய டெல்டாவை உருவாக்குகின்றன.
 • வங்கதேசத்தில் கங்கை பத்மா என அழைக்கப்படுகிறது.

அலகு-2

காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

1. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக

 • இந்திய காலநிலையின் முக்கிய அம்சம்
 • ஜீன் முதல் வாரம் தென் இந்தியாவிலும், இரண்டாவது வாரம் கொங்கணக் கடற்கரையிலும், ஜீலை 15-ல் இந்திய பகுதிகளுக்கு முன்னேற்றம்
 • எல்நினோ நிகழ்வானது இக்காலத்தில் மிகப்பெரிய தாக்கம்
 • இதன் இடி, மின்னலுடன் கூடிய துவக்கம் பருவமழை வெடிப்பு
 • தென்முனையை அடையும் போது இருகிளையாக பிரிகிறது.

அரபிக்கடல் கிளை

 • மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கில் அதிக மழை. இமயமலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கனமழை இராஜஸ்தான், வடமேற்கில் மழை இல்லை

வங்காள விரிகுடா கிளை

 • மேகலயாவில் உள்ள மௌசின்ராமில் கனமழை நாட்டின் மொத்த மழைப்பொழிவில் 75% தருகிறது தமிழ்நாடு மழை மறைவால் குறைந்த மழை

2. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்

 • இந்தியக் காடுகள் எட்டு வகைப்படும்

1. அயனமண்டல பசுமை மாறாக்காடுகள்

 • 200 செ.மீ மழை , 70% ஈரப்பதம்.
 • ரப்பர், ரோஸ் தென்னைமரங்கள்,
 • கேரளா, கர்நாடக பகுதிகள்

2. அயனமண்டல இலையுதிர்க் காடுகள்

 • 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை மழை 60% – 70% ஈரப்பதம்,
 • தேக்கு, சந்தனம், மூங்கில் மரங்கள்,
 • வடசமவெளி, பஞ்சாப், ஹரியானா பகுதிகள்

3. அயன மண்டல வறண்டக் காடுகள்

 • 50-100 செ.மீ மழை, குறைந்த ஈரப்பதம்,
 • பலா, ஆலமரம், ஈச்சமரம்,
 • கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப்

4. மலைக்காடுகள்

 • கிழக்கு இமயமலைக்காடுகள்-கிழக்கு இமயமலை சரிவுகளில் உள்ளவை
 • மேற்கு இமயமலைக்காடுகள்-ஜம்மு-காஷ்மீர், இமாச்சல், உத்ரகாண்ட்

5. அல்பைன்காடுகள்

 • 2400 மீ மேல் கிழக்கு இமயமலை பகுதிகள்
 • ஊசியிலை, ஓக், பைன் மரங்கள்

6. ஓத அலைக்காடுகள்

 • கங்கை-பிரம்மபுத்திரா, கோதாவரி, மகாநதி, டெல்டாப் பகுதிகள்

7. கடற்கரையோரக் காடுகள்

 • சவுக்கு, பனை, தென்னை
 • கேரளா, கோவா

8. ஆற்றங்கரை காடுகள்

 • கங்கை , யமுனை, (குறிப்பாக காதர் பகுதிகள்)
 • புளியமரம், பசுமையான புதர் காடுகள்

அலகு-3

வேளாண்மைக் கூறுகள்

1. இந்திய மண் வகைகளைக் ஏதேனும் ஐந்தினை குறிபிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி

 வண்டல்மண்

 • வெளிர்நிறமுடைய மணற்பாங்கானது
 • பரவல்-கங்கை, பிரம்மபுத்திரா, பஞ்சாப், ஹரியானா

கரிசல் மண்

 • ஈரத்தை தக்க வைக்கும் சேறாகும்
 • பரவல் – மகாராஷ்டிரா, தெலுங்கானா

செம்மண்

 • உப்புகரைசல், வெண்களிப்பாறை, வெடிப்புடன் கூடிய செம்மண் படிவு
 • பரவல் – கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா

சரளைமண்,

 • உயரமான மலைகளில் அதிக அமிலத்தன்மையும் தாழ்வான பகுதியில் குறைந்தும் இருக்கும்
 • பரவல் – அசாம் குன்று, கேரளா, கர்நாடகா மலையடிவாரம்

மலைமண்,

 • மென்மையான மண் மற்றும் பாறைத்துகள்
 • பரவல் – இமாச்சல், உத்ரகாண்ட், சிக்கிம்

பாலைமண்

 • குறைந்த வெளிர்நிறம், ஈரப்பதம் (இலைமக்கு)

காரமண்

 • சிதைக்கப்படாத பாறை, சிதைவுற்ற கனிமங்கள்

களிமண்

 • ஈரத்தன்மை -இலைமக்கு கருமை நிறம்

2. பல்நோக்கு திட்டம் என்றால் என்ன?  ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக.

பல்நோக்கு திட்டம்;

 • இது ஒரு அறிவியல் முறையிலான நீர்வள மேலாண்மை திட்டம்
 • ஆற்றின் குறுக்கே பல்வேறு நோக்கங்களுக்காக அணைகளைக் கட்டுவதால் இவைபல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் என்று அழைக்கப்படுகிறது.
 • நீர்மின் சக்தி மற்றும் நீர்பாசனம் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

1. பக்ரா நங்கல் திட்டம்

 • சட்லஜ் நதியின் குறுக்கே உள்ள உலகின் மிகப்பெரிய புவிஈர்ப்பு அணை
 • பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் பயனடைகிறது
 • 52,609 ச.கி.மீ. நீர்பாசன பரப்பு
 • 1500 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி

2. ஹிராகுட் திட்டம்

 • மகாநதி குறுக்கே கட்டப்பட்ட உலகின் மிக நீளமான அணை ஒடிசா பயன்பெறுகிறது.
 • 1,41,600 ச.கி.மீ. நீர்பாசன பரப்பு
 • 347.5 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி

3. தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக்கொணர்க

தீவிர வேளாண்மை;

 • இயந்திரங்கள், நவீன யுக்திகள் மூலம் அதிக உற்பத்தி
 • சிறிய நிலத்தில் பூச்சி, கலைக்கொல்லி, ரசாயனஉரம்
 • சிறிய அளவு கால்நடை வளர்ப்பு எண்ணிக்கையை பெரிய அளவு பண்ணைகள் மூலம் வளர்க்க வழிவகை
 • பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசத்தில் இம்முறை உள்ளது.

தோட்ட வேளாண்மை;

 • தோட்டப்பயிர்கள் ஏற்றுமதிக்காக பயிரிடப்படுகிறது.
 • மலைச்சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளாகும்.
 • ஏற்றுமதிக்காக கடற்கரைக்கு அருகில் பயிரிடப்படுகிறது.
 • தேயிலை, காப்பி, இரப்பர், வாசனை பொருட்கள் தோட்ட பயிர்களாகும்.

4. நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள் பற்றி விவரி.

நெல்;

 • இந்தியாவின் பூர்வீகப் பயிர் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம்
 • அயனமண்டல பயிர்
 • 24°C சராசரி வெப்பமும், 150 செ.மீ ஆண்டு மழையும் தேவை
 • வளமான களிமண் (அ) வண்டல் மண் சாகுபடிக்கு ஏற்றது.
 • பயிரிட அதிக தொழிலாளர்கள் தேவை மூன்று முறைகளில் பயிரிடப்படுகிறது.

கோதுமை;

 • இரண்டாவது (நெல்லுக்கு அடுத்து) முக்கிய உணவுப் பயிர்
 • நாட்டின் சாகுபடியில் 24%, மொத்த உணவு உற்பத்தியில் 54%
 • விதைக்கும் போது 10-15°C வெப்பமும், முதிரும் போது 20-25°C வெப்பமும் தேவை
 • 85% கோதுமை உற்பத்தி உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகும்
 • கரிசல் மண் உள்ள மகாராஷ்டிரா, குஜராத்திலும் பயிரிடப்படுகிறது.

அலகு -4

வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

 • இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக 34000 நெசவாலைகளுடன் இந்தியா இத்துறையில் உலகில் இரண்டாமிடம் தற்போது இந்தியாவில் 1719 பருத்தி நெவாலைகள் உள்ளன.
 • 188-பொதுத்துறையும், 147 கூட்டுறவு நிறுவனமும், 1284 தனியார் துறை நெசவாலைகள் உள்ளன.
 • மும்பையும் அதன் புறநகர் பகுதியில் பருத்தி அதிக அளவு காணப்படுவதால் மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் ஆகும்
 • மகாராஷ்டிராவில் உள்ள கரிசல்மண், ஈரப்பத காலநிலை, துறைமுகம், நீர்மின்சக்தி, சந்தைவசதி, போக்குவரத்து வசதி ஆகியன மும்பையில் அதிக நெசவாலைகள் இருக்க காரணமாகும்.
 • தமிழ்நாட்டில் அதிக நெசவாலைகள் (200) கோயம்புத்தூர் பகுதியில் உள்ளன.
 • எனவே தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது.

2. இந்தியாவில் இரும்பு எஃகு தொழிலகங்கள் பற்றி ஒரு தொகுப்பு எழுதுக.

 • இது ஒரு முக்கிய கனிமம் சார் தொழிற்சாலை
 • இதன் உற்பத்தி பொருட்கள் மற்ற தொழிலகங்களுக்கு மூலப்பொருளாக உள்ளது.
 • ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி இரும்பு எஃகு உற்பத்தியின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது
 • ஜார்கண்ட் மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் இரும்பு எஃகு தொழிலகங்கள் உள்ளன.

இந்தியாவின் முக்கிய இரும்பு எஃகு நிறுவனங்கள்

 • டாட்டா – 1911- ஜாம்ஷெட்பூர்
 • இந்தியா – 1972 – பர்ன்பூர், ஹிராப்பூர்
 • இந்துஸ்தான் – 1957 பிலாய்
 • சேலம் – 1982- சேலம் (தமிழ்நாடு)
 • விசாகபட்டினம் -1981- விசாகபட்டினம்
 • விஜயநகர் -1994 – டோர்நகல்

அலகு : 5

இந்தியா- மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

1. நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?

நகரமயமாக்கல்;

 • கிராமபுற சமுதாயம் நகர்புறச் சமுதாயமாக மாற்றமடைவதே நகரமயமாக்கல் என்கிறோம்.

நகரமயமாக்கலின் தாக்கங்கள்;

 • நகர விரிவாக்கம்,
 • மக்கள் நெருக்கடி
 • குடியிருப்புகள் பற்றாக்குறை,
 • குடிசைப் பகுதிகள் தோற்றம்
 • போக்குவரத்து நெரிசல் அதிகம்,
 • குடிநீர் பற்றாக்குறை
 • வடிகால் பிரச்சனை,
 • குற்றங்கள் அதிகரிப்பு
 • திடக்கழிவு மேலாண்மை சிக்கல்

2. இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை விளக்குக

 • தொடர்ச்சியாக பெரிய பரப்பிலான பதிமம் மற்றும் தகவல்கள் அளிப்பதால் இந்தியாவில் செயற்கைகோள் ஒரு முக்கிய தகவல் தொடர்பு சாதனம் ஆகும். இந்த பதிமங்கள் மூலம் வானிலை ஆய்வு, வானிலை முன்அறிவிப்பு, இயற்கை பேரழிவு, எல்லைப்பகுதி கண்காணிப்பு போன்ற பணிகளை செய்யலாம்.
 • இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்ப்பு இரண்டு பிரிவுகளை கொண்டது.
 • இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT) இது தொலை தொடர்பு, வானியல் ஆய்வு, பல்வேறு திட்டங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு அமைப்பு கைப்பேசி, தொலைபேசி, வானொலிமற்றும் தொலைக்காட்சிக்கு சமக்கை அனுப்புதல் வானிலை, இராணுவ பயன்பாட்டிற்கு உதவுகிறது.
 • இந்திய தொலையுணர்வு செயற்கைகோள் அமைப்பு (IRS)

3. இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக?

இந்திய சாலைகளின் வகைகள்:

தேசிய நெடுஞ்சாலை

 • மாநில தலைநகரங்கள் துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலா மையங்கள், தொழில் மையங்களை இணைப்பவை இச்சாலைகளுக்கு மத்திய அரசு பொறுப்பாகும்.

மாநில நெடுஞ்சாலைகள்

 • மாநிலத்தின் முக்கிய மாநகரங்கள், நகரங்கள், மாவட்ட தலைநகரங்களை மாநில தலைநகருடனும், தேசிய நெடுஞ்சாலையுடனும் இணைப்பவை,

மாவட்ட சாலைகள்

 • மாவட்ட வட்டார தலைமை இடங்களை மாநில, தேசிய நெடுங்சாலைகளுடன் இணைப்பவை.

கிராமபுற சாலைகள்

 • பல்வேறு கிராமங்களை அருகில் உள்ள நகரங்களுடன் இணைப்பவை. கிராம பஞ்சாயத்து பராமரிப்பு

எல்லைப்புறச்சாலைகள்

 • நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள்

விரைவுச்சாலைகள்

 • நன்கு மேம்படுத்தப்பட்ட பல வழிகளை கொண்ட அதிவேக போக்குவரத்து சாலைகள்

பன்னாட்டு நெடுஞ்சாலைகள்

 • இந்தியாவை அண்டை நாடுகளுடன் இணைக்கமான உறவை மேம்படுத்த இணைக்கப்பட்டுள்ள சாலைகள்

அலகு – 6

தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

1. தமிழ்நாட்டின் பீடபூமி நிலத்தோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்

 • தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கும் இடையில் அமைந்துள்ளது.
 • 60,000 ச.கி.மீ. கொண்ட முக்கோண வடிவம்

பாரமஹால் பீடபூமி

 • தமிழ்நாட்டின் வடமேற்கில் உள்ளது.
 • தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இதில் அடங்கும்

கோயம்புத்தூர் பீடபூமி

 • சேலம், கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்கள் பவானி, நொய்யல், அமராவதி ஆறுகள் இந்த பீடபூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்குகிறது. சிகூர் பீடபூமி
 • நீலகிரி பகுதியில் உள்ளது

மதுரை பீடபூமி

 • மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 • வைகை மற்றும் தாமிரபரணி வடிநிலங்கள் உள்ளன

2. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக

 • கர்நாடக மாநிலம் – குடகு மாவட்டம் – தலைக்காவிரியில் உற்பத்தி கர்நாடகா – தமிழ்நாட்டிற்கு 64 கி.மீ எல்லையாக உள்ளது.
 • தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் நீர்வீர்ச்சியை பெற்றுள்ளது.
 • சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை உள்ளது
 • துணை ஆறுகள் – பவானி நொய்யல், அமராவதி
 • திருச்சி மாவட்டத்தில் கல்லணை உள்ளது
 • திருச்சி மாவட்டத்தில் இரு கிளையாக பிரிந்து (கொள்ளிடம், காவிரி) ஸ்ரீரங்கம் தீவை உருவாக்குகிறது.
 • இறுதியாக கடலூருக்குத் தெற்கே கடலில்கலக்கிறது.

3. தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின்பண்புகளை விவரிக்கவும்

கோடைகாலம்:

 • மார்ச் முதல் மே வரை சூரியனின் கதிர் தென்னிந்தியாவில் செங்குத்தாக விழுவதால் பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலை உயர்கிறது.
 • தமிழ்நாடு கடக ரேகைக்கு தெற்கில் உள்ளதால் அதிக வெப்பநிலை பெறுகிறது.
 • வெப்பநிலை 30°C முதல் 40°C வரை வேறுபடும்
 • முன் பருவமழை, வெப்பசலனம் மூலம் மழையை பெறுகிறது.

குளிர்காலம்:

 • ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாட்டில் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுவதால் காலநிலை குளிராக உள்ளது.
 • வெப்பநிலை 15°C முதல் 25°C வரை வேறுபடும்
 • மலைப்பகுதியில் 5°C க்கு குறைவாக வெப்பம் மூடுபனியை உருவாக்குகிறது.
 • பொதுவாக வறண்ட வானிலையே காணப்படுகிறது.

4. தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல் மற்றும் அவற்றின் பண்புகளை விளக்குக

1. வண்டல் மண்

 • ஆறுகளால் படியவைக்கும் நுண் படிவுகளால் உருவான வளம் மிக்க மண்
 • ஆற்றுப் பள்ளத்தாக்கு (தஞ்சாவூர், நாகை, திருநெல்வேலி) பகுதிகளில் இம்மண் அதிகம் உள்ளது.
 • நெல், கரும்பு, வாழை மற்றும் மஞ்சள் நன்கு வளரும்

2. கரிசல் மண்

 • தீப்பாறைகள் சிதைவால் உருவாகிறது
 • தக்காண பீடபூமி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் காணப்படுகிறது.
 • பருத்தி, கம்பு, சோளம், கால்நடை தீவனங்கள் பயிரிடலாம்

3. செம்மண்

 • மணல் மற்றும் களிமண் கலந்த ஈரத்தை தக்க வைக்கும் மண்
 • இராம நாதபுரம், சிவகங்கையில் அதிகம் காணப்படுகிறது.
 • இரும்பு ஆக்ஸைடு அதிகம் உள்ளதால் நெல், கேழ்வரகு, புகையிலை, காய்கறிகள் பயிரிடலாம்.

4. சரளை மண்

 • இதில் உள்ள சத்துக்கள் அடித்து செல்வதால் உருவாகும் வளமற்ற மண்
 • காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சை , நீலகிரியில் உள்ளது.
 • நெல், வாழை, மிளகு, காபி, தேயிலை பயிரிடலாம்

5. உவர்மண்

 • சோழமண்டல கடற்கரை பகுதியில் மட்டும் உள்ளது
 • பயிரிட உகந்த மண் அல்ல

5. புயலுக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ள வேண்டிய அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகளை ஏழுதுக.

புயலுக்கு முன்:

 • வதந்திகளை நம்பாமல் அமைதிகாத்தல் வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் வானிலை நிகழ்வை தெரிந்து கொள்ளல்
 • விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாத்தல்
 • அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
 • குடியிருப்பு பாதுகாப்பை உறுதி செய்தல்
 • மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை செய்தல்.

புயலுக்குப் பின்:

 • நிவாரண முகாம்களை மறு அறிவுப்பு வரும் வரை பாதுகத்தல்
 • பாம்பு, பூச்சிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருத்தல்
 • கழிவுகள், இறந்த விலங்குகளின் உடல்களையும் அகற்றுதல்.
 • இழப்பின் உண்மையான மதிப்பு, அளவினை அதிகாரிகளிடம் தெரிவித்தல்

அலகு -7

தமிழ்நாடு – மானுடப் புவியியல்

1. தமிழ்நாட்டில் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக

தோட்ட வேளாண்மை

 • ஒரு பெரிய நிலப்பரப்பில் (மலைசரிவுகளில்) அறிவியல் முறைபடி ஒரே பயிரை அதிக அளவில் பயிரிடுவது (எ.கா.) காப்பி, தேயிலை, ரப்பர், முந்திரி, சின்கோனா,

காப்பி:

 • காப்பி உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில் இரண்டாமிடம்
 • மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையில் பயிரிடப்படுகிறது

தேயிலை;

 • தேயிலை உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில் இரண்டாமிடம்
 • நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைகளில் பயிரிடப்படுகிறது

ரப்பர் :

 • கன்னியாகுமாரி மலைப்பகுதியில் அதிகம் உள்ளது

சின்கோனா :

 • ஆணை மலைப்பகுதியில் சின்கோனா பயிரிடப்படுகிறது

முந்திரி;

 • கடலூர் மாவட்டத்தில் அதிகம் பயிராகும்

ஏலக்காய்;

 • மதுரையை சுற்றியுள்ள மலைப்பகுதியில் பயிராகும்

மிளகு;

 • மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளில் பயிராகிறது

2. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களை பற்றி எழுதுக

 • மனிதன் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் நீர் இயற்கையின் ஒரு விலைமதிப்பற்ற பரிசாகும்
 • இந்தியாவின் மக்கள் தொகையில் 6% உள்ள தமிழ்நாடு நீர்வளத்தில் 2.5% மட்டுமே பெற்றுள்ளது.
 • தமிழ்நாடு நீர் ஆதாரத்திற்கு பருவ மழையையே சார்ந்து உள்ளது
 • தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு 930 மில்லிமீட்டர்
 • தமிழ்நாட்டின் நீர் தேவையை பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள் பூர்த்தி செய்கின்றன. (எ.கா.) மேட்டூர், சாத்தனூர், முல்லை பெரியார், வைகை, அமராவதி, அணைகள்
 • மேற்பரப்பு நீர்வள ஆதாரங்கள்
 • ஆற்று வடிநிலம், ஏரிகள், நீர்தேக்கங்கள் 95% பயன்பாடு
 • நீரின் அளவு சுமார் 24,864 மில்லியன் க.மீ
 • நிலத்தடி நீர்
 • ஆழ்துளை கிணறு, திறந்த கிணறுகள் 80% பயன்பாடு – நீர்வளம் 22,433 மில்லியன் க.மீ

4. தமிழ்நாட்டில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் மற்றும் அதற்கான காரணங்களை எழுதுக

மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகள்;

 • சென்னை மாவட்டம் மிக அதிக மக்களடர்த்தி கொண்டது
 • காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, கோவை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர், நாகை, கன்னியாகுமரி மக்கள் அடர்த்தி அதிக மாவட்டங்கள்

மக்கள் அடத்திக்கான காரணங்கள்;

 • சமவெளி பகுதியில் வாழ்வதற்கேற்ற கால நிலை
 • மிதமான தட்பவெப்பநிலை, பொருளாதார செயல்களுக்கு ஏற்ற சூழல்
 • கற்றோர், கல்லாதோருக்கு ஏற்ற வேலைவாய்ப்பு
 • தொழில்துறை, விவசாயம் சிறந்த பகுதிகளில் மக்களடர்த்தி அதிகமாக உள்ளன

5. தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து முறைகளை விவரி

சாலை போக்குவரத்து;

 • மொத்த சாலைகளின் நீளம் 1,67,000 கி.மீ 2.
 • மாநில நெடுஞ்சாலை பராமரிப்பு
 • தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம பஞ்சாயத்து சாலைகள்

இரயில் போக்குவரத்து

 • மொத்த இருப்பு பாதையின் நீளம் 6,693 கி.மீ
 • தெற்கு ரயில்வே தலைமையிடம் சுமார் 690 ரயில் நிலையங்கள்
 • சென்னையில் புறநகர் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் திட்டம் என வளர்ந்துள்ளது

வான்வழி போக்குவரத்து

 • சென்னை நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையம்
 • 4-முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் சென்னை , திருச்சி, கோயம்புத்தூர், மதுரை
 • பயணிகள், சரக்கு போக்குவரத்திற்கு முக்கிய பங்கு

நீர்வழிப் போக்குவரத்து

 • 3 பெரிய துறைமுகங்களும் (சென்னை , எண்ணூர், தூத்துக்குடி)
 • 15 சிறிய துறைமுகங்களும் உள்ளன
 • சிறிய துறைமுகங்கள் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது
 • வாகன ஏற்றுமதிக்கு சென்னையும், நிலக்கரி இறக்குமதிக்கு எண்ணூர், தூத்துக்குடியும் பயன்படுகிறது.

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment