பத்தாம் வகுப்பு – சமூக அறிவியல் (பொருளியல்) 5 மதிப்பெண் வினா-விடைத் தொகுப்பு

பத்தாம் வகுப்பு – சமூக அறிவியல் (பொருளியல்) 5 மதிப்பெண் வினா-விடைத் தொகுப்பு

அலகு -1

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

1. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி.

மொத்த நாட்டு உற்பத்தி

 • மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு இலாபமும் இதில் அடங்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

 • ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு ஆகும்.

நிகர நாட்டு உற்பத்தி

 • மொத்த நாட்டு உற்பத்தியிருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கிய பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும்.
 • நிகர நாட்டு உற்பத்தி = மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்

நிகர உள்நாட்டு உற்பத்தி

 • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகும்.
 • மொத்த உள்நாட்டு உற்பத்தியிருந்து தேய்மானத்தைக் கழித்து பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
 • நிகர உள்நாட்டு உற்பத்தி = மொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்

தலா வருமானம் (அ) தனிநபர் வருமானம்

 • மக்களின் வழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஒரு கருவி
 • நாட்டு வருமானத்தை மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம் பெறலாம்
 • தலா வருமானம் = நாட்டு வருமானம் / மக்கள் தொகை

தனிப்பட்ட வருமானம்

 • நேர்முக வரி விதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் அனைத்து ஆதாரங்களிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிபட்ட வருமானம் எனலாம்.

செலவிடத் தகுதியான வருமானம்.

 • தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு செலவிடப்படுகின்ற வருமானத்தை செலவிடத் தகுதியான வருமானம் எனலாம்.

2. GDP-ஐக் கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.

செலவின முறை :

 • இந்த முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதிப்பண்ட பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத் தொகையாகும்.
 • செலவின முறை – Y=C+I+G+(X-M)

வருமான முறை :

 • பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தைக் கணக்கிட்டு கூறுவதாகும்.
 • வருமான முறை (வருமானம்) = கூலி+வாரம் + வட்டி + லாபம்

மதிப்பு கூட்டு முறை :

 • இம்முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டினால் இறுதிப் பண்டத்தின் மதிப்பை அளவிடலாம்.
 • மதிப்பு கூட்டுமுறை – டீத்தூள் + பால் + சர்க்கரை = தேனீர்

3. இந்தியாவில் GDP-இல் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி.

முதன்மைத் துறை (வேளாண் துறை)

 • GDP-இல் வேளாண் துறையின் பங்களிப்பு (2018-19) 15.87%
 • விவசாய பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகும்.
 • விவசாயம், காடுகள் மற்றும் மீன்பிடித்தல் அடங்கும்

இரண்டாவது துறை (தொழில் துறை)

 • GDP இல் தொழில் துறையின் பங்களிப்பு (2018-19) 29.74%
 • உலகில் இந்தியா தொழில் துறையில் எட்டாவது இடத்தில் உள்ளது
 • மின்சாரம், எரிவாயு, ஜவுளி தொழில், சணல், சிமெண்ட் காகிதம், பெட்ரோலியம், இரும்பு மற்றும் எஃகு தொழில் முக்கிய தொழிலாகும்.

3. மூன்றாவது துறை (பணிகள் துறை)

 • GDP இல் பணிகள் துறையின் பங்களிப்பு (2018-19) 54.40%
 • உலகில் இந்தியா பணிகள் துறையில் ஆறாவது இடத்தில் உள்ளது
 • போக்குவரத்து, வங்கி, கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, வர்த்தகம், ரியல் எஸ்டேட் ஆகியன அடங்கும்.

4. கீழ்கண்ட பொருளாதாரக் கொள்கைகளை விவரி?

விவசாயக் கொள்கை

 • உள்நாட்டு வேளாண்மை மற்றும் வெளிநாட்டு வேளாண்மை இறக்குமதி பொருட்கள் பற்றிய அரசின் முடிவு, நடவடிக்கைகள் பற்றியது.
 • உள்நாட்டு வேளாண் உற்பத்தி அங்காடியில் ஒரு குறிப்பிட்ட விளைவை அடைய வேளாண் கொள்கைகள் வகுத்தல்
 • வேளாண் கொள்கைகள் – விலை , நிலச்சீர்திருத்தம் , உணவு , பாசனம் ,பசுமை புரட்சி ,கூட்டுறவு கொள்கை

தொழிற் கொள்கை.

 • தொழில் துறை முன்னேற்றம் வேலை வாய்ப்பு உருவாதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஊக்குவிக்கிறது.
 • நவீனமயமாக்கல் ஏற்பட்டு பொருளாதாரம் தன்னிறைவு அடைகிறது
 • வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு
 • பெரிய அளவு தொழிற்சாலைகளுக்கானது
 • தொழில் கொள்கைகள் : 1.ஜவுளி 2. சர்க்கரை 3. சிறுதொழில்

புதிய பொருளாதாரக் கொள்கை.

 • இது LPG அதாவது தாராளமயமாதல், தனியார்மயமாதல், உலகமயமாதல் எனப்படுகிறது.
 • இது உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை உருவாக்குவது ஆகும்.
 • இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் ஒரு மொத்த பொருளாதார வளர்ச்சியை ஒரு குறிப்பிட்ட வகையில் முன்னேற செய்தது.

அலகு-2

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

1. MNC பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக

MNC யின் பரிமாண வளர்ச்சி: –

 • கிழக்கு இந்திய நிறுவனம் இந்தியாவை ஒரு வர்த்தக நிறுவனமாகக் கொண்டு பின் அரசியல் ரீதியாக நாடெங்கும் ஆதிக்கம் செலுத்தியது.
 • 1920ல் MNC இந்தியாவில் நுழைந்து 1950-ல் உற்பத்தி பணிகளை தொடங்கியது (எ.கா) அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி

MNC யின் நன்மைகள்

 • குறைந்த விலையில் தரமாகவும், பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத்தி
 • விலை குறைப்பால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிப்பு
 • வரி மாறுபாடு, உள்ளூர் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு

MNC யின் தீமைகள்

 • முற்றுரிமையை வளப்பதற்கான ஒரு வழியாகவும், சுற்றுச்சூழளுக்கு தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.
 • சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்
 • ஒழுக்க நெறிமுறைகளை மீறுதல்

2. உலக வர்த்தக அமைப்பு பற்றி எழுதுக.

உலக வர்த்தக அமைப்பு WTO

 • 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பை (WTO) அமைக்க ‘காட் உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றின் இறுதி ஒப்பந்தத்தில் 104 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டது.
 • WTO உடன்படிக்கை ஜனவரி 1, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது.
 • உறுப்பு நாடுகள்- 164
 • தலைமையகம்- ஜெனிவா, சுவிட்சர்லாந்து
 • உறுப்பினர்கள்- தலைமை இயக்குனர் (1) துணை தலைமை இயக்குநர் (4) அலுவலகBஊழியர்கள் (600)

WTO -ன் குறிக்கோள்கள் (நோக்கம்)

 • அயல்நாட்டு வாணிபத்திற்கு விதிகள் அமைத்தல், செயல்படுத்துதல்
 • வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்
 • வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சியை பாதுகாத்தல்
 • முழு வேலைவாய்ப்பை உறுதிபடுத்துதல், தேவையை அதிகரித்தல்

WTO -ன் மானியங்கள்

 • பண மானியங்கள் அளித்தல்
 • வரி சலுகைகள் அளித்தல்
 • கடன் உத்திரவாதங்கள்
 • நிறுவனத்தின் பங்கு விலை அதிகமாக இருத்தல்

3. உலக மயமாக்களின் சவால்களை எழுதுக.

 • உலக மயமாக்களின் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் நீடிக்கப்பட வேண்டும் அவை தன்னிச்சையாக செயல்படாது.
 • உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது
 • உலகமயமாக்கல் ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது
 • குழந்தை தொழிலாளர் மற்றும் அடிமைத்தனம் போன்றவை அதிகரிப்பு
 • துரித உணவு உட்கொள்வதால் உடல் நலகுறைவு, நோய் ஏற்பட வழிவகை செய்கிறது
 • வளர்ந்து வரும் உலகில் இது உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்ற அச்சம்.
 • ஊதியங்கள், தொழிலாளர் உரிமைகள், வேலை வாய்ப்புகள் அடிமட்டத்திற்கு செல்வது.

அலகு-3

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

1. பசுமை புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.

 • நாடு விடுதலை அடைந்த போது நாட்டின் உணவு உற்பத்தி அதிக கவலையை உண்டாக்கியது
 • போதிய அந்நிய செலாவணி இருப்பு இல்லாததால் இந்தியா பணக்கார நாடுகளிடம் சலுகை விலையில் உணவு தானியங்களை இறக்குமதி செய்தது தொழில் மயமாக்கலுக்கு முன்னுரிமை அளித்ததால் விவசாயம் பாதித்தது. வறட்சி நிலவியது.
 • புதிய விவசாயக் கருவிகளைப் பற்றி தெரிந்தும் அவற்றை வாங்கிப் பயன்படுத்த பணம் இல்லை
 • நிலத்தின் உற்பத்தி திறனும் விவசாயத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் விவசாயத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் மிகவும் குறைவாக இருந்தது.
 • மக்கள் தொகையில் 70% விவசாயத்தில் ஈடுபட்டாலும் உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது.
 • இச்சூழல் 1965ல் பசுமை புரட்சி தொடங்கி 1967 முதல் 1978 வரை விவசாயத்தில் மாபெரும் புரட்சி செய்தது.
 • இதன் விளைவாக உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது.

2. குறைந்தபட்ச ஆதரவு விலையை விளக்குக

 • ஒரு பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு நிபுணர் குழுவால் ஒரு விலை நிர்ணயம் செய்வது குறைந்தபட்ச ஆதரவு விலையாகும்.
 • எனினும் விவசாயிகளை திறந்தவெளி சந்தையில் அதிக விலை கிடைத்தால் அங்கேயும் விற்கலாம்.
 • குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக விற்றால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசே கொள்முதல் செய்யும்.
 • இதனால் பயிர் விளைச்சல் முடிவில் அவர்கள் பெறும் விலை உறுதியாக உள்ளது.
 • விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
 • இந்த விலை அறிவித்த பின், பயிர்கள் பரவலாக வளரும் இடங்களில் அரசு கொள்முதல் மையங்கள் திறக்கப்படும்.

3. பொது விநியோக முறையை விவரிக்கவும்

 • மக்கள் வருமானத்தின் சமமற்ற நிலை, பொருளாதார வறுமையை கருத்தில் கொண்டு, பொது வழங்கல் முறை மூலம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.
 • இதன் தன்மை, நோக்கம் மற்றும் செயல்பாடு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
 • உலகளாவிய பொது வழங்கல் முறை குடும்ப வழங்கல் கார்டு பெற்றவர்கள் அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படுகிறது தமிழ்நாடு இம்முறையை பின்பற்றுகிறது
 • இலக்கு பொது வழங்கல் முறை சில அளவுகோலின் அடிப்படையில் சிலருக்கு மட்டும் பொருட்கள் வழங்கப்படுகிறது. இம்முறைக்கு மத்திய, மாநில அரசு மானியம் தருகிறது
 • 2013-ல் நிறைவேறிய தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 50% நகர்புற 75% கிராமபுற குடும்பங்களையும் உள்ளடக்கியது.
 • உலகளாவிய பொதுவழங்கள் முறையை கொண்டுள்ள தமிழ்நாடு அனைத்து
 • அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்குகிறது.

4. வாங்கும் திறனை பாதிக்கும் காரணிகள் யாவை? அவற்றை விளக்குக

அதிக மக்கள் தொகை

 • இது அதிக தேவைக்கு வழி வகுப்பதால் அளிப்பு தேவை சமமாக இல்லை எனவே சாதாரண விலை அதிகரித்து கிராமபுற மக்களின் வாங்கும் சக்தி பாதிக்கும்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்தல்

 • இதில் விலையில் நிலையான அதிகரிப்பு ஏற்படுவதால், வாங்கும் சக்தியை சுரண்டி, ஏழைமக்களை பாதிக்கிறது.

பொருட்களின் தேவை

 • இதனால் பொருட்களின் விலை அதிகரித்து வாங்கும் சக்தி பாதிக்கிறது.
 • பொருட்களின் விலை நாணய மதிப்பை பாதிக்கிறது.
 • பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் போது பொருட்களின் விலை அதிகரித்து வாங்கும் திறன் பாதிக்கிறது.
 • வறுமை மற்றும் சமத்துவமின்மையால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

5. புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய குறிக்கோள்கள் யாவை?

 • உள்ளீடுகளின் (விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்பாசனம்) உற்பத்தித்திறனை உயர்த்துதல்
 • ஒவ்வொரு ஹெக்டேர் நிலத்திற்கும் உற்பத்தி அதிகரிப்பு
 • ஏழை மற்றும் குறு விவசாயிகளின் நலன்களுக்காக கடன் ஆதரவு, நிலசீர்திருத்தம், இடைத்தரகர்கள் ஒழிப்பு.
 • விவசாய துறையில் நவீன தொழில் நுட்பத்தை புகுத்துதல்
 • இந்திய விவசாயத்தின் சுற்றுச் சூழல் சீரழிவை சரிசெய்தல்
 • கூட்டுறவு சங்கங்கள், சுய உதவி நிறுவனங்களின் அதிகார தடையை நீக்குதல்

அலகு-4

அரசாங்கமும் வரிகளும்

1. சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக

நேர்முக வரிகள்:

 • ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிப்பதாகும்.

வருமான வரி

 • முக்கிய நேர்முகவரி, தனிநபர் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது.

நிறுவன வரி

 • இந்தவரி, நிறுவனங்கள் மீது விதிக்கப்படுகிறது

சொத்து வரி

 • தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படும் வரி.

மறைமுக வரிகள்:

 • ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமையை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது மறைமுக வரி ஆகும்.

முத்திரைத்தாள் வரி

 • அரசாங்க ஆவணங்கள் மீது விதிக்கப்படும் வரி

பொழுதுபோக்கு வரி

 • பொழுதுபோக்கு மூலத்திற்கு அரசால் விதிக்கப்படும் வரி

சுங்கத் தீர்வை

 • உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள உற்பத்திப் பொருள் மீது விதிக்கப்படும் வரி.

2. GST ன் அமைப்பை எழுதுக?

 • நுகர்வோர்கள் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்கும் போது விதிக்கப்படும் வரியாகும்.

மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST)

 • மதிப்புக் கூட்டு வரி / விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச் சீட்டு வரி மற்றும் மாநில கூடுதல் கட்டணம்

மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST)

 • மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, எதிர் வரி, கூடுதல் ஆயத்தீர்வை, கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம்

ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST)

 • நான்கு முக்கிய GST விகிதங்கள் – 5%, 12%, 18%, 28% காய்கறிகள் உணவு தானியங்களுக்கு வரி விலக்கு.

3. கருப்புப் பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக

கருப்புப் பணம்

 • சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
 • வரி நிர்வாகிகளிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கில் காட்டப்படாத பணம்.

கருப்பு பணத்திற்கான காரணங்கள்

 • பண்டங்கள் பற்றாக்குறை
 • உரிமம் பெறும் முறை (பொருட்களின் குறைவான அளிப்பினால் தவறான விநியோகம்)

தொழில் துறையின் பங்கு

 • கருப்பு பணம் தோன்ற தொழில் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
 • கடத்தல் ஒரு முக்கிய காரணம்
 • வரி விகிதம் அதிகமாகும் போது கருப்பு பணம் அதிகரிக்கும்.

அலகு – 5

தமிழ் நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

1. வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?

 • துறை சார்ந்த சிறப்பு கவனம்
 • நிறுவனங்களுக்கு இடையே பரஸ்பர முறையில் இணைதல் புத்தாக்கத்தால் போட்டி
 • நம்பிக்கையை எளிதாக்கும் சமூக கலாச்சாரம்
 • பல்வேறு திறமையான தொழிலாளர்கள்
 • சுய உதவிக் குழுக்களின் செயல்பாடு
 • பிராந்திய மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு
 • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிக்கு அருகில் இருத்தல்

2. தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக

 • இந்தியாவின் மிகப்பெரிய நெசவுத்தொழில் துறைக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது.
 • காலனித்துவ காலம் முதல் பருத்தி தொழில் வளர்ச்சி காரணமாக கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான் செஸ்டர் என அழைக்கப்படுகிறது. கோம்புத்தூரை சுற்றிலும் ஏராளமான நெசவு ஆலைகள், விசைத்தறி நெசவுத் தொழில் தொகுப்புகள் உள்ளன.
 • ஈரோடு மற்றும் சேலத்தில் அதிக மின்தறி அலகுகள்
 • திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி
 • கரூர்-மேஜை துணி, திரைச்சீலை, துண்டுகள் படுக்கை விரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது.
 • மதுரை, காஞ்சிபுரம் – பாரம்பரிய பட்டு மற்றும் கைத்தறி புடவைகளுக்கு சிறப்பு

3. தொழில் மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக

கல்வி

 • திறமையான மனித வளம் தொழிற்சாலைக்கு தேவை
 • படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, எண் கணித திறன்கள் வளர்ப்பது
 • அதிக தொழில்நுட்ப வல்லுநர்கள் தருதல்

உள்கட்டமைப்பு

 • மின்சார விநியோகம் மாநிலம் முழுவதும் சிறப்பான பங்களிப்பை தருகிறது.
 • உள் கட்டமைப்பு ஒரு சிறந்த போக்குவரத்தாகும்
 • கிராம நகரங்களை, அரசு-தனியார் போக்குவரத்து இணைத்து, உற்பத்தியாளர்களை சந்தைகளாடு இணைக்கிறது.

தொழில்துறை ஊக்குவிப்பு:

 • சிறந்த தொழிற்பிரிவுக்கு தொழிற்சாலைகளை சிறந்த பகுதிகளில் ஏற்படுத்த முயற்சி
 • தானியங்கி, உயிரி தொழில்நுட்பம், செய்தி தொடர்புகளில் நல்ல நடைமுறை
 • அனைத்து பிரிவு உள் கட்டமைப்பை மேம்படுத்த தொழில் துறை மேம்பாட்டு முகமை நிறுவுதல்

4. தொழில் முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக

 • கிராமபுற, பின்தங்கிய தொழிற்சாலைகளை முன்னேற்றுகிறார்கள்
 • வட்டார ஏற்றத் தாழ்வுகளை நீக்குகிறார்கள்
 • மொத்த உள்நாட்டு உற்பத்தி, தலா வருமானம் உயர உதவுகிறார்கள்
 • வருமானம் மற்றும் செல்வத்தின் செறிவை குறைத்து சமூக வளர்ச்சிக்கு உதவுகிறார்கள்
 • மக்களின் அசையா சேமிப்பு மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலம் மூலதனத்தை செயல்பட வைக்கிறார்கள்.
 • கைவினைஞர்கள், தொழில் நுட்பம் பெற்றவர்கள், தொழில் வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறார்கள்.
 • புத்தாக்கத்தின் மூலம் இலாபத்தை அதிகரிக்கிறார்கள்
 • குறைந்த விலையில் தரமான பொருட்கள் வழங்க உதவுகிறார்கள்

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment