பத்தாம் வகுப்பு தமிழ் – ஒரு மதிப்பெண் வினாக்கள்

பத்தாம் வகுப்பு  தமிழ் – ஒரு மதிப்பெண் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

வினா எண்  1 முதல் 11  வரை

1. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழுணர்வை ஊட்டியவர் —————————

2. ‘இன்னறும் பாப்பத்தே’ எனப் பெருஞ்சித்திரனார் பாடுவது—————————

3. ‘எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் —————————

4. திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது ————————— வரிசை, தமிழ் அல்லாத பிற மொழிகளில் இல்லை .

5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை —-

6. இளம் பாக்குக்கு வழங்கும் சொல் —————————

7. பூ விரியத் தொடங்கும் நிலையைக் குறிக்கும் சொல் —————————

8. சாகும்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் – என்று பாடியவர் —————————

9. காய்ந்த இலையும், காய்ந்த தோகையும் குறிப்பது —————————

10. எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக் குறிக்கும் சரியான தமிழ்ச் சொல்————–

11. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர் —————————

12. கொழுந்தாடை என்பது —————————

13. சம்பா நெல்லின் உள் வகைகள் —————————

14. திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர் —————————

15. நறுவீ என்பதில் வீ என்பதன் பொருள்—————————

 16. சார்பெழுத்துக்கள்—————————வகைப்படும். 

 17. செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிமையான ஓசைக்காக வரும் அளபெடை——————

18. கெடுப்பதூஉம் – இச்சொல்லில் இடம் பெற்றுள்ள அளபெடை —————————

19. வெஃகுவார்க்கில்லை, உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள் —————————

20. அசைஇ – இலக்கணக்குறிப்பு —————————

21. பின்வருவனவற்றுள் தொடர் மொழி —————————

22. கேடு என்ற சொல் —————————

23. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது —————————

24. கேள்வியினான் – இலக்கணக்குறிப்பு —————————

25. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே —————————

 26. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம் பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை? —————————

 27. மதுரை சென்றார் – இத்தொடரில் அமைந்துள்ள வேற்றுமைத் தொகை எவ்வகை? ———————–

28. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது —————————-

 29. அன்பால் கட்டினார், அறிஞருக்குப் பொன்னாடை ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது —————————

30. காலங்கரந்த பெயரெச்சம் —————————-

31. வட்டத்தொட்டி என்பது —————————-

32. நன்மொழி – இலக்கணக்குறிப்பு —————————

33. செந்தாமரை – இலக்கணக்குறிப்பு —————————

34. மூதூர் – இலக்கணக்குறிப்பு —————————

35. பெரிய மீசைசிரித்தார் – இதில் பெரிய மீசை என்னும் சொல்லுக்கான தொகையின் வகை ———-

36. சிவப்புச் சட்டை பேசினார் – இதில் சிவப்புச் சட்டை என்னும் சொல்லுக்கான தொகையின் வகை —————————

37. தொங்கான் என்பது ————————— குறிக்கும்.

38. கேட்ட பாடல் – தொடர் வகை —————————

39. வடித்த கஞ்சி —————————

40. செறிந்த என்பதன் இலக்கணக்குறிப்பு —————————

41. பாடி மகிழ்ந்தனர் என்பது —————————.

42. தடக்கை என்பதன் இலக்கணக்குறிப்பு —————————

43. வேண்டிய என்னும் கூட்டுநிலைப் பெயரெச்சம் எவ்வாறு உருவாகின்றது? —————————

44. பகைவர் இன்றியும் தானே கெடும் மன்னன். காரணம் : —————————

45. உனதருளே பார்ப்பன் அடியனே யார் யாரிடம் கூறியது? —————————

46. தன்மை வினைகள் —————————

47. குலசேகர ஆழ்வார், வித்துவக் கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார், பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். இத்தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதிகள் முறையே —————————

48. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது —————————

49. இந்த மாறன் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டான் என்பது —————————

50. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – இத்தொடர் ————————— ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

51. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும், எழுதுவதும் —————————

52. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது? —————————

53. அருந்துணை என்பதைப் பிரித்தால் ————————— என்று பிரியும்.

54. இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்பது எவ்வகை வினா? இதோ இங்கு நிற்கும் என்று விடையளிப்பது எவ்வகை விடை? —————————

55. இங்கு மருத்துவமனை எங்குள்ளது என்று கேட்பது —————————அதோ அங்கு உள்ளது என்று கூறுவது  —————————

56. வினவும் வினாவிற்கு விடையாக நேர்ந்ததைக் கூறுவது —————————

57. நன்னூல் கிடைக்குமா? எனக் கடைக்காரரிடம் கேட்பது —————————

58. நேரடி விடைகளாக இருக்கும் வெளிப்படை விடைகள் எத்தனை? —————————

59. வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் குறிப்பது —————————

60. ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு – இவ்வரிகளில் அமையும் பொருள்கோள் —————————

61. பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது —————————

62. கம்பர் தாம் இயற்றிய காப்பியத்திற்கு இட்ட பெயர் —————————

63. விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் —————————

64. பொய்யோ எனும் இடையாளொடும், இளையானோடும் போனாள். இதில் கோடிட்ட சொற்களுக்கு உரியவர்கள் யார்? யார்? —————————

65. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன? —————————

66. முன்பனிக் காலத்தை பொழுதாகக் கொண்ட நிலங்கள் —————————.

67. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் —————————

68. முதுவேனிற்காலம் ————————— மாதங்கள்.

69. ஐப்பசி, கார்த்திகை – —————————

70. விளரியாழ் எத்திணைக்குரியது? —————————

71. முல்லை நில மக்களின் உணவுப் பொருள்கள் —————————

72. நெய்தல் நிலத்துக்குரிய தொழில் —————————

73. முல்லை நிலப் பறை —————————

74. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்ற அறப்போர் முறையை தொடங்கி வைத்த ஆண்டு ——————

75. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலின் ஆசிரியர் —————————

76. சாகித்ய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல் —————————

77. தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியைத் துறக்க முன் வந்தவர் —————————

78. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது எது? —————————

79. குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் —————————

80. மாலவன் குன்றம் போனாலென்ன, வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும். – மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே —————————

81. ‘திருபுவனச் சக்கரவர்த்தி’ என்ற பட்டம் பெற்றவன் —————————.

82. தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயுமாக இருந்த அரசன் என்னும் மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் —————————.

83. மெய்கீர்த்திக்கு முன்னோடியாய்த் திகழும் சங்க இலக்கியங்கள் —————————

84. மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் பெருங்காப்பியம் —————————

85. புறத்திணைகள் மொத்தம் —————————

86. இட்லிப்பூ என்பது ————————— என்று அழைக்கப்படுகிறது.

87. ஆநிரைகளை மீட்டல் —————————

88. காஞ்சி மரம் ————————— நிறப்பூக்கள் கொண்டவை.

89. தற்போது முடக்கத்தான் என்று அழைக்கப்படுவது —————————

90. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம் —————————

91. வாகை என்பதன் பொருள் —————————

92. உழுபவருக்கே நில உரிமை இயக்கம் தொடங்கியவர் —————————

93. இசைக்கு கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது —————————

94. அறம் அறக் கண்ட நெறிமான் அவையம் என்கிறது —————————

95. சங்க இலக்கிய அறங்கள் இயல்பானவை. கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூறியவர் —————————

96. உதவி செய்தலை ஈழத்து பூதன் சேந்தனார் குறிப்பிடும் முறை —————————

97. அறம் செய்வதில் ——————- நோக்கம் இருக்கக்கூடாது என்று முடமோகியார் குறிப்பிட்டுள்ளார்.

98. மேன்மை தரும் அறம் என்பது —————————

99. தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, தன் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் எனக்கூறும் மன்னன் —————————

100. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் —————————

101. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்றவர் —————————

102. ————————— ஓர் அதிசய திறவுகோல்.

103. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர் —————————

104. புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது. இகழ்ந்தால் என் மனம் இறந்து விடாது. – இவ்வடிகளில் அமைந்த முரண் சொல் —————————

105. ஒருவர் பேசுவது போல அமையும் ஓசை —————————

106. பெருங்கதை என்னும் காப்பியம் —————————அமைந்த நூல்.

107. மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப அடிகள் அமையும் பா வகை —————————

108. இருவர் உரையாடுவது போன்ற ஓசை —————————

109. சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் அமைந்த பாவினம் —————————

110. பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும் பா வகை —————————

111. ஊர்மக்கள் என்பது —————————

112. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு – —————————

113. நான் மட்டும் தண்டனை பெற்று நரகம் சேர்வேன். மக்கள் அனைவருக்கும் நலம் கிட்டும் – என்று கூறியவர் —————————

114. ஜெயகாந்தன் படைப்புகளில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் —————————

115. சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கப்படுபவர் —————————

116. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையாகவும், சவாலுமாகவும் ஜெயகாந்தன் கருதுவது —-

117. ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு —————————

118. ஜெயகாந்தனின் சோவியத் நாட்டு விருது பெற்ற நூல் —————————

119. கலையின் கணவனாகவும், சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன். இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது? —————————

120. தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை —————————

121. ‘வாய்மையே மழை நீராகி’ என்னும் தொடரில் வெளிப்படும் அணி —————————

122. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று —————————வேண்டினார்.

123. தீவகம் என்னும் சொல்லின் பொருள் —————————

124. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை. இக்குறட்பாவில் பயின்று வரும் அணி —————————

125. உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றி பெறுவன —————————

126. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடு. —————————

127. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள். இத்தொடர் —————

128. ஆடுக – இலக்கணக்குறிப்பு – —————————

129. ஏமரா மன்னன் – இலக்கணக் குறிப்பு —————————

130. வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் தாயைப் பிரிந்திருக்கும் ————————— வருந்திக் கொண்டிருந்தாள்.

131. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் – இப்பழமொழி உணர்த்தும் சரியான பொருள் ————————– 132. காற்றின் மெல்லிய ————————— பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான ————————— பூக்களை மாலையாக்குகிறது.

133. புதிருக்கான விடையை வரிசைப் படுத்துக.

பொய்கையிடம் போனால் குளிர்ந்து போகிறாய் ;

பூக்களைத் தொட்டால் நறுமணத்தோடு வருகிறாய்;

புல்லாங்குழலில் புகுந்தால் இசையாகி விடுகிறாய்

—————————

134. சங்க இலக்கியங்கள், ஐந்திணைகளுக்குமான ஒழுக்கங்களை இருதிணைகளும் பயன் பெற எடுத்து இயம்புகின்றன. – இத்தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் பொருத்ததமான விரியைக் கண்டறிக.

ஐந்திணை : —————————

இருதிணை : —————————

135. புதிருக்கான விடையை வரிசைப்படி தேர்ந்தெடுக்க.

தவழும்போது ஒரு பெயர் ; விழும்போது ஒரு பெயர்; உருளும்போது ஒரு பெயர்; திரண்டோடும் போது ஒரு பெயர் – அவை என்ன? —————————

136. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார் – இவ்விலக்கியங்களுக்குள் இருக்கும் தமிழெண்களைக் கண்ட றிக. – —————————

137. ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர். – இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது? —————————

138. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு —————————

139. களிஇயல் யானைக் கரிகால் வளவ – என்று பாடியவர் —————————

140. குறிஞ்சி – —————————

141. முல்லை – —————————

142.  மருதம் – —————————

143. நெய்தல் – —————————

144. குறிஞ்சி – —————————

145. முல்லை – —————————

146. மருதம் – —————————

147. பாலை – —————————

148. தற்குறிப்பேற்ற அணி – —————————

149. தீவக அணி – —————————

150. நிரல் நிறை அணி – —————————

151. தன்மையணி – —————————

பாடலைப் படித்து விடையளிக்க

வினா எண் 12 முதல் 15 வரை

தென்னன் மகளே திருக்குறளின் மாண்புகழே

இன்னறும் பாப்பத்தே எண்தொகையே நற்கணக்கே

 மன்னுஞ் சிலம்பே மணிமேகலை வடிவே

 முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே

1.  இப்பாடல் இடம் பெற்று கவிதைத் தொகுப்பின் பெயர் என்ன? —————————

2.. இப்பாடலின் ஆசிரியர் —————————

3. நற்கணக்கே என்பது —————————

4. தென்னன் மகள் – என்பதன் பொருள் யாது? —————————

5. இன்னறும் – இலக்கணக்குறிப்புத் தருக. —————————

6.. எண்தொகையே – பிரித்து எழுதுக. —————————

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தே தமிழ்  

7.. இப்பாடலின் ஆசிரியர் —————————

8.. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் —————————

9.. இப்பாடலில் வந்துள்ள அடியெதுகை சொற்கள் —————————

10. முத்தமிழ் – விரித்தெழுதுக – —————————

11. இப்பாடலில் தமிழ் எதனோடு ஒப்பிடப்படுகிறது? —————————

வாளால் அறுத்துச்சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன் போல மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டமா நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியனே.

12. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் —————————

13. இப்பாடலின் ஆசிரியர் —————————

14. பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்கள் யாவை? —————————

15. மாயம் – என்பதன் பொருள் யாது? —————————

16. வித்துவக்கோட்டமா – இதில் இடம் பெற்றுள்ள வழுவமைதி —————————

17. மீளா என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு – —————————

18. மாளாத – என்பதன் பொருள் யாது? —————————

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருந்துவதும் கல்வியென்றே போற்று.

19.. பாடலில் இடம் பெற்றுள்ள சீர் எதுகைகளை எழுதுக. —————————

20.. அருந்துணையாய் – இச்சொல்லைப் பிரித்தால் —————————

21. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் —————————

22. இப்பாடலின் ஆசிரியர் —————————

23. மருளை அகற்றி என்பதன் பொருள் —————————

24. இப்பாடலில் போற்றிக் கற்க வேண்டியதாய் ஆசிரியர் கூறுவது —————————

25. அருந்துணை – இலக்கணக் குறிப்பு – —————————

26. அறிவுக்குத் தெளிவைத் தருவது —————————

தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க

கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க

தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்

வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ.

27. இப்பாடலின் ஆசிரியர் —————————

28.. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் —————————

29. கொண்டல் – இச்சொல்லின் பொருள் – —————————

30. இப்பாடலில் உள்ள அடி ஏதுகைகளை தேர்க. —————————

உறங்குகின்ற கும்பகன்ன உங்கள் மாய வாழ்வெலாம்

இறங்குகின்றது இன்று காண் எழுந்திராய் எழுந்திராய்

கறங்குபோல வில்பிடித்த காலதூதர் கையிலே

உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்

31.. இப்பாடலின் ஆசிரியர் —————————

32. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் —————————

33. கறங்கு – இச்சொல்லின் பொருள் – —————————

34.. இப்பாடலில் உள்ள சீர் மோனைச் சொற்களை தேர்க —————————

35.. மாய என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக. —————————

வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்

பூவும் புகையும் மேவிய விரையும்

பகர்வனர் திரிதரு நகரவீதியும்;

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

36.. இப்பாடலின் ஆசிரியர் —————————

37.. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் —————————

38.. வண்ணமும் சுண்ணமும் – இலக்கணக்குறிப்பு – —————————

39.. விரை என்பதன் பொருள் —————————

40 காருகர் என்பதன் பொருள் —————————

41.. இப்பாடலில் இடம் பெற்றுள்ள நறுமணப்பொருட்கள் யாவை? —————————

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்:

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்

42.. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் —————————

43.. இப்பாடலின் ஆசிரியர் —————————

44.. பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்கள் யாவை? —————————

45. தூசும் – என்பதன் பொருள் யாது? —————————

மண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்

 பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்

துன்னகாரரும் தோலின் துன்னரும்

கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி

46. இப்பாடலின் ஆசிரியர் —————————

47.. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் —————————

48.. மண்ணுள் வினைஞர் பொருள் தருக. —————————

49. இப்பாடலில் உள்ள சீர் ஏதுகைகளை தேர்க பொன்செய் – —————————

பழுது இல் செய்வினைப் பால்கெழு மாக்களும்;

குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும்

வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்

அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;

சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு

மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்

50. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் —————————

51.. இப்பாடலின் ஆசிரியர் —————————

52. இப்பாடலில் பயின்று வந்துள்ள அடி எதுகைகளை எடுத்தெழுதுக—————————

53.. குழலினும் யாழினும் – இலக்கணக்குறிப்பு – —————————

பூக்கையைக் குவித்து பூவே

புரிவோடு காக்கென்று அம்பூஞ்

சேக்கையைப் பரப்பி இங்கண்

திருந்திய அறத்தை யாவும்

யாக்கையைப் பிணித்தென்று ஆக

இனிதிலுள் அடக்கி வாய்ந்த

ஆக்கையை அடக்கிப் பூவோடு

அழுங்கணீர் பொழிந்தான் மீதே.

54.. இப்பாடலின் ஆசிரியர் —————————

55. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் —————————

56. கணீர் – இலக்கணக்குறிப்பு – —————————

57.. சேக்கை என்ற சொல்லின் பொருள் – —————————

நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே.

58.. இப்பாடலின் ஆசிரியர் —————————

59. இப்பாடல் இடம் பெற்ற நூல் —————————

60.. பாடலில் இடம் பெற்றுள்ள அடி எதுகைச் சொற்களைக் குறிப்பிடுக. —————————

விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க

வினா எண் 16 முதல் 20 வரை

1. ஒரு நாட்டின் வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்களும் அமைந்திருக்கும்.

2. 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது.

3. செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன் சில நிமிடங்களில் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

4. திறன்பேசிகளில் இயங்கும் உதவும் மென்பொருள், நாம் படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும்.

5. வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று.

6. புறஊதாக் கதிர்கள் நேரடியாக உயிரினங்களைத் தாக்குவதால் மிகுந்த துன்பத்தை உயிரினங்கள் அடைகின்றன.

7. பத்துப்பாட்டில் மிகக்குறைந்த அடிகளைக் கொண்ட நூல் முல்லைப்பாட்டு.

8. முல்லைப்பாட்டைப் பாடியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகரது மகனாவார்.

9. செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் ஆகும்.

10. வானத்துத் தேவர்கள் ஆடும் ஆட்டம் தேவராட்டம் எனப்படும்.

11. நாம் இப்போது செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இருக்கிறோம்.

12. கருத்தாழமும் வாசகர் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன்.

13. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

14. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

15. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டுவரும் கலையே தெருக்கூத்து என்பர்.

16. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்.

17. நாயக்கர், மராட்டியர் ஆட்சிக்காலத்தில் வழிப்போக்கர்களுக்காக மிகுதியான சத்திரங்கள் கட்டப்பட்டன.

18. பாடுவதற்குத் தகுதி உடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப்பாடுவது பாடாண் திணையாகும்.

19. மொழி என்பது உலகின் போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவி காலத்திற்கேற்ப  மாற்றப்பட வேண்டும்.

20. காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் அவரை மாலையிட்டு வரவேற்றனர்.

21. விருந்து பற்றி எடுத்துரைக்கும் சங்க இலக்கிய நூல்கள் புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை.

22. வேப்பமாலை அணிந்த குசேலபாண்டியன். தமிழறியும் பெருமான். அடியார்க்கு நலநிதி போன்றவன்.

23. ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகு நோபல் பரிசு கிடைத்தது.

24. தமிழர்களின் மிகப்பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று பொம்மலாட்டம்.

25. மரபார்ந்த கலைகளில் ஒன்று கரகாட்டம் ஆகும்.

26. நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் என்றார் ந,முத்துசாமி.

27. 1948 ஆகஸ்டு எட்டாம் நாள், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாளாகும்.

28. முதலாம் இராசராசன் காலம் தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டன.

29. பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநராகப் பணியாற்றினார்.

30. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.

31. இல்வாழ்க்கை என்பது அன்பும் அறனும் நிறைந்தது.

32. பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி.

33. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்கிறார் மணவை முஸ்தபா.

34. சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் அரசர்களை முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன.

35. பாவாணர் உலகத்தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர்.

36. செங்கீரைச் செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5 முதல் 6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும் பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர்.

37. கா என்பதற்குப் பாரந்தாங்கும் கோல் என்று பொருள்.

38. வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.

39. இளங்கோ தந்த சிலம்பு தமிழினத்தின் பொதுச் சொத்து.

40. கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ் என்பவர் பருவக் காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார்.

41. மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும்.

42. இந்தியாவின் மகத்தான சாதனையாக கருதுவது பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்தது என்கிறார் ஜெயகாந்தன்.

43. பிள்ளைத்தமிழ் இரண்டு வகைப்படும்.

44. கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.

45. மொழிபெயர்ப்பு, மொழியில் புதுக்கூறுகளை உருவாக்கி மொழிவளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

46. தமிழ்நூல்கள், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், வடமொழி, ரஷ்ய மொழி, வங்க மொழி, மராத்தி மொழி போன்ற பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

47. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று முழங்கினார் ம.பொ.சிவஞானம்.

48. இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர் மார்ஷல்.ஏ.நேசமணி ஆவார்.

49. விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தில் கருதுகின்றனர்.

50. ஞானம் என்னும் கவிதையை இயற்றியவர் தி.சொ.வேணுகோபாலன்.

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment