பத்தாம் வகுப்பு – புவியியல் 2-மதிப்பெண் – வினா விடைத் தொகுப்பு
அலகு – 1
இந்தியா- அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
- மேற்கில் – பாகிஸ்தான்,
- வடமேற்கில் – ஆப்கானிஸ்தான்,
- வடக்கில் – சீனா, பூடான், நேபாளம்,
- கிழக்கில் – வங்காளதேசம், மியன்மார்,
- தெற்கில் – இலங்கை, மாலத்தீவுகள்
2. இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக
- இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82° 30′ கிழக்கு தீர்க்க ரேகையின் தல நேரம் இந்திய திட்ட நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
- இத்தீர்க்கரேகை மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்கிறது.
- இந்திய திட்டநேரமானது கிரீன்வீச் சராசரி நேரத்தைவிட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.
3. தக்காண பீடபூமி குறிப்பு வரைக
- தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பைக் கொண்டது
- இது தோராயமாக முக்கோண வடிவம் கொண்டது
- இதன் பரப்பளவு சுமார் 7 லட்சம் சதுர கி.மீ 4. இதன் உயரம் சுமார் 500 மீ முதல் 100 மீ வரை 5. இது மேற்கிருந்து கிழக்காக சரிந்துள்ளது
4. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக
- நர்மதை,
- தபதி,
- மாஹி,
- சபர்மதி
- இவை கிழக்கிருந்து மேற்கு நோக்கி பாய்ந்து காம்பே வளைகுடா வழியாக அரபிக்கடலில் கலக்கிறது.
5. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி கூறுக.
- இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது.
- சுமார் 32 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது
- நிர்வாகத் தலைநகரம் காவராத்தி
- மினிகாய் மற்றும் அபினித்தீவுக் கூட்டங்கள் 1973 முதல் இலட்சத்தீவுகள் என அழைக்கப்படுகிறது.
அலகு-2
இந்தியா- காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
1. காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக
- அட்சம் பரவல்
- கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு
- கடல் மட்டத்திலிருந்து உயரம்
- பருவக்காற்று
- நிலத்தோற்றம்
- ஜெட்காற்றுகள்
2. வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன?
- புவிபரப்பிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தின் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.5°c என்ற அளவில் வெப்பநிலை குறையும்.
- இதற்கு வெப்ப குறைவு விகிதம் என்று பெயர்
3. ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?
- வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் ஜெட் காற்றுகள் எனப்படும்
- இக்கோட்பாட்டின் படி உப அயன மேலை காற்றோட்டம் வட பெரும் சமவெளியிருந்து திபெத் பீடபூமியை நோக்கி இடம் பெயர்வதால் தென்மேற்கு பருவக்காற்று உருவாகிறது.
- கீழை ஜெட் காற்றோட்டங்கள் வெப்ப மண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.
4. பருவக்காற்று குறித்து ஒரு சிறுகுறிப்பு வரைக
- பருவங்களுக்கேற்றவாறு தங்களது திசைகளை மாற்றிக் கொண்டு வீசும் கோள் காற்றுகள் பருவக்காற்று என்கிறோம்.
- இவை இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் முக்கிய காரணி
- இரு வகைப்படும் , வடகிழக்கு பருவக்காற்று, தென்மேற்கு பருவக்காற்று
5. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக
- குளிர்காலம் – ஜனவரி முதல் பிப்ரவரி வரை
- கோடைகாலம் – மார்ச் முதல் மே வரை
- தென்மேற்கு பருவக்காற்று காலம் – ஜீன் முதல் செப்டம்பர்வரை (மழைக்காலம்)
- வடகிழக்கு பருவக்காற்று காலம் – அக்டோபர் முதல் டிசம்பர் வரை
6. பருவ மழை வெடிப்பு என்றால் என்ன?
- தென்மேற்கு பருவக்காற்று கேரளாவிலுள்ள மலபார் கடற்கரையை அடையும்போது பலத்த இடிமின்னலுடன் கூடிய மழையை அளிக்கும் இதனை பருவ மழை வெடிப்பு என்பர்
- இது இந்தியாவின் வெப்பநிலையை பெருமளவில் குறைக்கிறது
- தென்மேற்கு பருவக்காற்று தொடங்கும் முன் வட இந்தியாவின் வெப்பநிலை 46° வரை உயரும்.
7. அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக
- மேற்கு கடற்கரை
- அசாம்.
- மேகாலயாவின் தென்பகுதி,
- திரிபுரா,
- நாகலாந்து,
- அருணாச்சல பிரதேசம்
- இப்பகுதிகள் 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவை பெறுகின்றன.
8.இந்தியாவில் சதுப்பு நில காடுகள் காணப்படும் இடங்களைக் குறிப்பிடுக.
- சதுப்பு நிலக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழி முகப் பகுதிகளில் காணப்படுகின்றன.
- கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதியில் உலகில் மிகப்பெரிய சதுப்புநிலக்காடுகள் உள்ளன.
- மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் ஓதக்காடுகள் காணப்படுகின்றன.
9. இந்தியாவிலுள்ள உயிர்க்கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக
- நீலகிரி – தமிழ்நாடு
- மன்னார் வளைகுடா – தமிழ்நாடு
- அகத்திய மலை – கேரளா
- கட்ச் – குஜராத்
- பெரிய நிக்கோபார் – அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- சுந்தரவனம் – மேற்கு வங்காளம்
10. புலிகள் பாதுகாப்புத் திட்டம் என்றால் என்ன?
- இத்திட்டம் 1973ல் தொடங்கப்பட்டது.
- புலிகளை பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது.
- இத்திட்டம் புலிகளின் எண்ணிக்கையை 60% உயர்த்தி 1979ல் 3015 ஆக உயர்த்தியது.
அலகு-3
வேளாண்மைக் கூறுகள்
1. மண் வரையறு.
- மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருட்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருட்கள் காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது. புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்
- பல்வேறு காலநிலை சூழலில் பாறைகள் சிதைவடைவதால் மண் உருவாகிறது
2. இந்தியாவில் காணப்படும் மண் வகைகளின் பெயர்களைப் பட்டியலிடு.
- வண்டல்மண்
- கரிசல் மண்
- செம்மண்
- சரளை மண்
- காடு மற்றும் மலை மண்
- வறண்ட பாலைமண்
- உப்பு மற்றும் கார மண்
- களிமண் மற்றும் சதுப்பு நில மண்
3. கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக
- ஈரமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.
- தக்காண பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது
- டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது.
4. வேளாண்மை வரையறு
- குறிப்பிட்ட பயிர்களை உற்பத்தி செய்தும், கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும் நார் மற்றும் இதர பொருட்களை வழங்குவது வேளாண்மையாகும்.
- இந்தியா வேளாண்மை மூலம் 50% மேல் மக்களுக்கு வேலை வாய்பை தருகிறது.
- நாட்டின் மொத்த வருமானத்தில் 25% ஐ நாட்டிற்கு அளிக்கிறது.
5. இந்தியாவின் வேளாண்மை முறைகளைக் குறிப்பிடுக
- தன்னிறைவு வேளாண்மை
- இடப்பெயர்வு வேளாண்மை
- தீவிர வேளாண்மை
- வறண்ட நில வேளாண்மை
- கலப்பு வேளாண்மை
- படிகட்டு முறை வேளாண்மை
6. இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக
- காரிஃப் பருவம் – ஜீன் முதல் செப்டம்பர் வரை
- ராபி பருவம் – அக்டோபர் முதல் மார்ச் வரை
- சையத் பருவம் – ஏப்ரல் முதல் ஜூன் வரை
7. இந்தியாவின் தோட்டப்பயிர்களைக் குறிப்பிடுக
- தேயிலை
- காபி
- இரப்பர்
- வாசனைப் பொருட்கள்
8. கால்நடைகள் என்றால் என்ன?
- இந்தியாவின் விவசாயத்தோடு ஒருங்கிணைந்த கூறுகள் கால்நடைகள்
- கால்நடைகளின் பல்வேறு வகை பயண்பாடுகள் காரணமாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
- வேளாண்மை பொய்க்கும் போது வேலைவாய்ப்பையும், வருவாயையும் அளிக்கிறது.
- நிலத்தை உழவும், பயிர்களுக்கு உரம் அளிக்கவும் பயன்படுகிறது.
9. இந்தியாவில் மீன் வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு தருக
- கடல் மீன் பிடிப்பு கடற்கரைப்பகுதி, கடற்கைரையை ஒட்டிய பகுதி மற்றும் ஆழ்கடல் முக்கியமானப்பகுதிகளில் 200 மீட்டர் ஆழம் வரை உள்ள கண்டத்திட்டு பகுதிகளில் மீன் பிடித்தல் நடைபெறுகிறது. ( கேரளா- முதலிடம்)
- உள்நாட்டு மீன் பிடிப்பு நீர்த்தேக்கங்களான ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் மற்றும் கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளில் நடைபெறும் மீன்பிடித்தல். ( ஆந்திர பிரதேசம் – முதலிடம்)
அலகு -4
வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
1. வளத்தை வரையறுத்து அதன் வகைகளைக் குறிப்பிடுக.
- இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளம் எனப்படும். (எ.கா) காற்று, நீர், மண், புதை படிம எரிபொருட்கள்
- தொடர்ந்து கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் இருவகையாக பிரிக்கலாம்
- புதுபிக்க இயலும் வளங்கள்,
- புதுபிக்க இயலாத வளங்கள்.
2. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
- ஒரு குறிபிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும்.
- வகைகள்: உலோக கனிமங்கள் அலோக கனிமங்கள்
3. மெக்னீசியத்தின் (மாங்கனீசு) பயன்களைக் குறிப்பிடுக.
- இரும்பு எஃகு மற்றும் உலோக கலவை உற்பத்திக்கு அடிப்படை மூலப் பொருள்
- வெளுக்கும் தாள், பூச்சிக்கொல்லிகள், வண்ணப்பூச்சிகள், மின்கலன்கள் தயாரிக்க பயன்படுகிறது.
4. இயற்கை எரிவாயு என்றால் என்ன?
- ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து புதையுண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக மக்குவது மூலம் உண்டாகும் ஒரு வாயு இயற்கை எரிவாயு.
- பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படும்
- இயற்கையாக உருவாகும் ஒரு நீர்ம கரிம வாயு, பெரும்பகுதி மீத்தேன் வாயுவாக இருக்கும்.
5. நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக.
நிலக்கரியின் வகைகள் கரிம அளவுகள்
- ஆந்தரசைட் 80 முதல் 90 சதவீதம்
- பிட்டுமினஸ் 60 முதல் 80 சதவீதம்
- பழுப்பு நிலக்கரி 40 முதல் 60 சதவீதம்
- மரக்கரி 40 சதவீதத்திற்கும் குறைவு
6. இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக
- மேற்கு வங்கத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றங்கரை நெடுகிலும் அமைந்துள்ளது
- டிட்டகார், ஜகட்டட் பட்ஜ்-பட்ஜ், ஹவுரா ஆகியன முதன்மை சணல் உற்பத்தி பகுதிகள்
- மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், உத்திர பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், அசாம், ஒடிசா சணல் உற்பத்தி செய்யும் மாநிலங்கள்.
7. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்திப் பகுதிகளைக் குறிப்பிடுக
- மேற்கு கடற்கரைக்கு அருகில்;
- மும்பை ஹை எண்ணெய் வயல்
- குஜராத் கடற்கரை
- அங்கலேஸ்வர்
- காம்பே
- கிழக்கு கடற்கரைக்கு அருகில்;
- பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
- திக்பாய் எண்ணெய் வயல்
- ருத்ரசாகர்-லாவா
- அந்தமான் நிக்கோபார் உட்பகுதி
அலகு : 5
இந்தியா- மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
1. இடம் பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
- ஒரு பகுதியிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்வது இடம் பெயர்வு எனப்படும்.
- வகைகள்;
- உள்நாட்டு இடப்பெயர்வு-ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறுவது.
- சர்வதேச இடப்பெயர்வு-நாடுகளுக்கிடையே நடைபெறுவது.
2. இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக.
- இந்திய தரை வழிப் போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக கருதப்படுகிறது..
- அதிக அளவு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது.
- வணிகம், சுற்றுளா, கல்வி போன்றவற்றை ஊக்குவிக்கிறது.
- பொருளாதார வளர்ச்சிக்கும், தேசிய ஒருமைப்பாடு வளரவும் உதவுகிறது
- மூலப்பொருள் மற்றும் முடிவுற்ற பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுகிறது.
3. நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு வரைக
- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களையும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் அதன் சந்தை பகு திக ளோடு இணைக்கும் எளிதான மற்றும் சிறந்த போக்குவரத்தாகும்.
- குழாய் போக்குவரத்து அமைக்க ஆரம்பகால செலவு அதிகம், ஆனால் பராமரிப்பு செலவு குறைவு
- (எ.கா) அசாம்-கான்பூர், சலாயா-ஜலந்தர்
4. இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளைக் குறிப்பிடுக
- தேசிய நீர்வழிப் போக்குவரத்து எண்-1
- இது ஹால்தியா மற்றும் அலகாபாத், கங்கை – ஹூக்ளி ஆறுகளுடன் இணைந்து செயல்படுகிறது (1620 கி.மீ)
- தேசிய நீர்வழிப் போக்குவரத்து எண்-2
- இது துபரி மற்றும் காடியா, பிரம்மபுத்திரா ஆற்றில் (891 கி.மீ)
- தேசிய நீர்வழிப் போக்குவரத்து எண்-3 (இந்தியாவில் முதலாவது)
- இது கொல்லம் மற்றும் கோட்டபுரம், கேரளா (205 கி.மீ)
5. தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
- தகவல்கள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்களின் தொழில் நுட்ப பரிமாற்றமே தகவல் தொடர்பு என்கிறோம்
- தகவல் தொடர்புகள் இரு பிரிவுகளாக உள்ளது
- தனிமனித தகவல் தொடர்பு
- பொதுத் தகவல் தொடர்பு
- தகவல் தொழில் நுட்பத் துறையில் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வகையில் உள்ளது.
6. பன்னாட்டு வணிகம் – வரையறு.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளிடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம்
- ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இதன் இருகூறுகள் ஆகும்
- நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து இதில் முக்கிய பங்கு வகிக்கிறது
- இதில் அந்நியநாட்டு பணம் பயன்படுத்தப்படுகிறது.
7. சாலை போக்குவரத்தின் சாதக அம்சங்களைக் குறிப்பிடுக
- குறுகிய தூர பயணத்திற்கு மிகவும் உகந்தது.
- சாலைகளை அமைப்பது, பராமரிப்பு செய்வது மற்ற போக்குவரத்து முறைகளை விட மலிவானது.
- சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய மலிவான போக்குவரத்து
- இதன்மூலம் பண்ணைகள், தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றுடன் எளிதில் தொடர்பு கொள்ளலாம்
அலகு – 6
தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
1. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக
- கிழக்கு – வங்காள விரிகுடா
- மேற்கு – கேரளா
- வடக்கு – ஆந்திர பிரதேசம்
- வடமேற்கு – கர்நாடகா
- தெற்கு – இந்தியப் பெருங்கடல்
- 2. தேரி என்றால் என்ன? இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் தேரி எனப்படும்
3. கடற்கரை சமவெளி எவ்வாறு உருவாகிறது?
- இச்சமவெளி கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளால் உருவாகிறது.
- சில இடங்களில் 80 கி.மீ அதிகமான அகலத்துடன் காணப்படுகிறது.
4. தமிழ்நாட்டின் முக்கியத் தீவுகளை குறிப்பிடுக
- பாம்பன்.
- முயல்தீவு,
- குருசடை,
- நல்லதண்ணி தீவு
- புள்ளிவாசல்,
- ஸ்ரீரங்கம்,
- உப்புதண்ணித்தீவு,
- தீவுத்திடல்,
- காட்டுப்பள்ளித்தீவு,
- குவிப்பில்தீவு
- விவேகானந்தர் நினைவுப்பாறை
5. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக.
- கரையாறு
- சேர்வலாறு
- மணிமுத்தாறு
- சித்தாறு
- பச்சையாறு
- கடனா நதி
- ராமநதி
6. பேரிடர் அபாய நேர்வு- வரையறு
- ஐ.நாவின் UNDRR கூற்றின் படி, பேரிடருக்கான காரணங்களை முறையாகக் கண்டறிந்து பேரிடரின் போது அதன் தாக்கங்களைக் குறைப்பதாகும்.
- 7. புயலின் போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது. கைபேசி மூலமாகவும், வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மூலமும் மீனவர்களை எச்சரிக்கிறது.
- மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்தும், படகுகளை பாதுகாக்கவும் கூறுகிறது.
அலகு-7
தமிழ்நாடு – மானுடப் புவியியல்
1.தமிழ்நாட்டின் வேளாண் பருவகாலங்களை எழுதுக.
- பருவம் விதைக்கும் காலம் அறுவடைகாலம்
- சொர்ணவாரி ஏப்ரல் – மே ஆகஸ்டு – செப்டம்பர்
- (சித்திரை பட்டம்)
- சம்பா (ஆடிபட்டம்) ஜூலை- ஆகஸ்டு ஜனவரி – பிப்ரவரி
- நவரை நவம்பர் – டிசம்பர் பிப்ரவரி – மார்ச்
2. கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.
- கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் (ஈரோடு, திருப்பூர்) ஏராளமான பருத்தி நெசவாலைகள் அமைந்துள்ளதால் கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.
- கோயம்புத்தூர் நெசவுத் தொழில் மூலம் மாநில பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கிறது.
3. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக.
- மேட்டூர் அணை
- பவானிசாகர் அணை
- அமராவதி அணை
- சாத்தனூர் அணை
- பாபநாசம் அணை
4. பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன?
- இத்திட்டம் சென்னையிலும், புறநகரிலும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
- மே 2017 முதல் மெட்ரோ இரயில் அமைப்பும், பாதாள இரயில் போக்குவரத்துடன் விரிவு செய்துள்ளது.
5. தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பட்டியலிடுக.
- விமான நிலையங்கள்:
- சென்னை
- தூத்துக்குடி
- மதுரை
- சேலம்
- திருச்சி
- கோவை துறைமுகங்கள் :
- சென்னை
- தூத்துக்குடி
- எண்ணூர்
- நாகை
DOWNLOAD PDF – Click Here