பத்தாம் வகுப்பு – பொருளியல் 2-மதிப்பெண் – வினா விடைத் தொகுப்பு
அலகு-1
மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
1. நாட்டு வருமானம் – வரையறு
- ஒரு நாட்டில் ஓராண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.
- பொதுவாக நாட்டு வருமானத்தை மொத்த நாட்டு உற்பத்தி (GNP)அல்லது நாட்டு வருமான ஈவு எனப்படுகிறது.
2. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பொருள் என்ன?
- ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்திக் காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் மொத்த மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.
- வெளியீடு என்பது பண்டங்கள் மற்றும் பணிகளைக் குறிக்கும்
3.GDP யின் முக்கியத்துவத்தை எழுதுக.
- பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு பற்றி அறிந்துகொள்ளவும்
- செல்வம் சமமற்ற முறையில் விநியோகம் செய்வதை அறியவும்
- பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சிக்கல்கள் பற்றி அறியவும்
- வாங்கும் திறன் மதிப்பீடு செய்வதற்கும் பயன்படுகிறது.
- பொருளாதார திட்டமிட வழிகாட்டியாகவும் பயன்படுகிறது.
4. தனிநபர் (தலா) வருமானம் என்றால் என்ன? .
- நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதால் கிடைப்பது தனிநபர் வருமானம்
- இது மக்களின் வாழ்க்கை தரத்தை உணர்த்தும் ஒரு கருவி
- தனிநபர் வருமானம் = நாட்டு வருமானம் /மக்கள் தொகை
5. மதிப்புக் கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு.
- ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டினால் இறுதி பண்டத்தின் மதிப்பை அளவிடலாம்
- உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும்பொழுது பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதி பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.
- எ.கா. பால் + சர்க்கரை + டீத்தூள் = தேனீர்
- இடைநிலை பண்டங்கள் = இறுதிப்பண்டம்
6. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையின் பெயர்களை எழுதுக
- வேளாண் கொள்கை
- தொழில்துறை கொள்கை
- புதிய பொருளாதாரக் கொள்கை
- வர்த்தகம், வேலைவாய்ப்பு, நாணய-வங்கி, நிதி – பணம், கூலிக்கொள்கை
7. சிறு குறிப்பு வரைக 1. GNH 2 . HDI
மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)
- மொத்த தேசிய மகிழ்ச்சி என்பது ஒரு மக்கள் தொகை கூட்டு மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை அளவிடப் பயன்படும் குறியீட்டை உள்ளடக்கியது ஆகும்.
மனிதமேம்பாட்டுக் குறியீடு (HDI)
- பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு, வயது வந்தோரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத் தரம், GDPயின் மடக்கை செயல்பாடு என கணக்கிடப்பட்டு, வாங்கும் சக்தி சமநிலைக்கு சரி செய்யப்படுகிறது.
அலகு-2
உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
1. உலக மயமாக்கல் என்றால் என்ன?
- பண்டங்கள் மற்றும் பணிகள், தொழில் நுட்பம், மூலதனம் உழைப்பு அல்லது மனித மூலதனம் ஆகியவற்றின் தடையில்லா ஓட்டத்தில் எந்த தடையும் ஏற்படாமல் உலகின் பல்வேறு பொருளாதாரங்களை ஒருங்கிணைப்பதற்காக செயல்முறையாகும்.
- உலக பொருளாதரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.
- உலகமயமாக்கல் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான சந்தைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
2. உலக மயமாக்கலின் வகைகளை எழுதுக.
- தொன்மையான உலகமயமாக்கல்
- இடைப்பட்ட உலகமயமாக்கல்
- நவீன உலகமயமாக்கல்
3. பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக
- நாட்டில் (அ) பல நாடுகளில் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெரு நிறுவனமாகும்.
- இவை சர்வதேச நிறுவனங்கள் (அ) பன்னாட்டு அமைப்பு என்றும் கூறப்படுகிறது. (எ.கா) பெப்சி, கோகா கோலா, டி வி.எஸ். பஜாஜ்
4. உலகமயமாக்கலை மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக?
- சிறு தொழிற்சாலைகள் தவிர, தொழில் உரிமம் பெறுவதை நீக்கியது
- பொதுத்துறை நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது
- அயல்நாட்டு செலவாணி ஒழுங்குமுறை பொருத்தமாக திருத்தப்பட்டது.
5. நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?
- சிறிய விவசாயிகளை உலகளாவிய சந்தையிடத்தில் ஒரு சுறுசுறுப்பான பகுதியாக வைத்திருப்பதோடு நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும், கொள்முதல் செய்யவும்,
- அவர்களின் மதிப்பை அதிகரிக்கவும் நோக்கமாகக் கொள்ளும் ஒரு வழிமுறையாகும்
6. நியாயமான வர்த்தக நடைமுறைகளின் ஏதேனும் இரு கோட்பாடுகளை எழுதுக
- பொருளாதாரத்தில் பின்தங்கிய உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு
- வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு
- நியாயமான வர்த்தக நடைமுறைகள், நியாயமான விலை
7. உலக வர்த்தக அமைப்பின் முக்கிய நோக்கம் என்ன?
- அயல் நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
- வர்த்தக தகராறுகளை கையாளுதல்
- முடிவெடுக்கும் செயல்களில் வெளிப்படை தன்மை
- பண மானியங்கள் அளித்தல்
- கடன்கள் மற்றும் இடைநிறுத்தம் போன்ற வரிச் சலுகைகள்
8. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.
- வாழ்க்கை தரத்தை அதிகரித்துள்ளது.
- ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்
- புதிய தொழில்நுட்பங்கள், அறிவியல் ஆராய்ச்சி முறைகள்
- வேகமான வர்த்தகம், அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு
அலகு-3
உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
1. FAO வின்படி உணவு பாதுகாப்பைவரையறு.
- “எல்லாமக்களும், எல்லாநேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகு முறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது.”
2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படைகூறுகள் யாவை?
மூன்று அடிப்படைக் கூறுகள்
- உணவு கிடைத்தல் விரும்பிய அளவில் உணவு இருப்பு
- உணவுக்கான அணுகல் – முதன்மையாக வாங்கும் திறன்
- உணவினை உறிஞ்சுதல் – உணவை உயிரியல் ரீதியாக பயன்படுத்துவது
3. பசுமை புரட்சியின் இந்திய உணவுக் கழகத்தின் FC யின் பங்கு என்ன?
- அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் FC I மூலம் அரசு கொள்முதல்
- அறுவடை காலத்தில் FCI உணவு தானியங்களை பெற்று மிகப்பெரிய சேமிப்பு கிடங்கில் வைத்து ஆண்டு முழுவதும் வழங்குதல்
- விவசாயிகளின் தானியங்களுக்கு உறுதியான விலையை FCI தருகிறது.
4. பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
- உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு (அரிசி, கோதுமை)
- தானியங்கள் உற்பத்தி நிலப்பரப்பு மற்றும் விளைச்சல் அதிகரிப்பு
- தானிய உற்பத்தி அதிகரிப்பால் பால், கோழி மற்றும் மீன் உற்பத்தி அதிகரிப்பு
5. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக
- மதிய உணவுத் திட்டம்
- தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்
- புரட்சித் தலைவர் MGR ஊட்டச்சத்து உணவுத் திட்டம்
- பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்
அலகு – 4
அரசாங்கமும் வரிகளும்
1. வரி வரையறுக்க
- வரிகள் என்பது எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணமேயாகும். (அல்லது) ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும்.
2. அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?
- வரி செலுத்துவதன் மூலம் அரசு அந்த நிதியிருந்து பல செயல்களை நிறைவேற்றுகிறது.
- (எ.கா.) பொருளாதார உள்கட்டமைப்பு செலவுகள் (கல்வி, உடல்நலம், துப்புரவு, போக்குவரத்து, பாதுகாப்பு)
- இராணுவம்
- அறிவியல் ஆராய்ச்சி
- கலாச்சாரம் மற்றும் கலைகள்
- பொதுப்பணிகள்
- மற்றும் பொதுக்காப்பீடுகள்.
3. வரிகளின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக
இரண்டு வகைப் படும்
- நேர்முக வரிகள் : வருமான வரி, சொத்து வரி, நிறுவன வரி,
- மறைமுக வரிகள் : முத்திரைத்தாள் வரி, பொழுது போக்கு வரி, சுங்கத் தீர்வை,
4. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி-சிறுகுறிப்பு வரைக
- இது மறைமுக வரிகளில் ஒன்று
- குறிக்கோள் = ஒரு நாடு – ஒரு அங்காடி – ஒருவரி ஆகும்
- ஜீலை 1-2017 முதல் நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது.
5. வளர் வீத வரி என்றால் என்ன?
- வருமானம் அதிகரிக்கும் போது வரிவிகிதமும் அதிகரிப்பது வளர் வீத வரி ஆகும்
- இம்முறையில் வரியின் அடிப்படைத் தளம் அதிகரிக்கும்போது வரி விகிதமும் அதிகரிக்கும்.
6. கருப்புப் பணம் என்பதன் பொருள் என்ன?
- கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரி பணமே கருப்புப் பணமாகும்
- வரி நிர்வாகத்திடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடபடாத பணம் கருப்பு பணம் ஆகும்.
7. வரி ஏய்ப்பு என்றால் என்ன?
- தனிநபர்கள் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு.
- (எ.கா.) வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல், மறைக்கப்பட்ட பணம் ஆகும்.
8. வரிக்கும், கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
வரி
- கட்டாய செலுத்துகை
- பிரதிபலன் எதிர்பாராமல் பணிகளைப் செலுத்துவது
- விதிக்கப்பட்ட வரி செலுத்தவில்லை எனில் தண்டிக்கப்படுவார்
- (எ.கா) வருமானவரி, சொத்துவரி, VAT
கட்டணம்
- தன்னார்வக் கட்டணம்
- பயன் படுத்து வதற்காக செலுத்துவது
- பணிகளை பெற விருப்பமில்லை எனில் கட்டணம் செலுத்த வேண்டாம்.
- முத்திரைவரி, ஓட்டுநர் உரிம கட்டணம், பதிவுக் கட்டணம்
அலகு -5
தமிழ் நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
1. விவசாயத் துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
- நிலத்தின் இறுதி நிலை உற்பத்தி திறன் குறைந்து வருவதால் இத்துறையில்
- உழைப்பவர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியவில்லை
- அதிக அளவு மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் இருப்பதால் ஊதியத்தை உயர்த்த முடியவில்லை
2. தொழில்துறை தொகுப்பு என்றால் என்ன?
- நோக்கம் : நிறுவனங்களிடையே பரஸ்பர தொடர்பு ஏற்படுத்துவது
- வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்கள் தங்களின் தேவைகளான சந்தைகள், தொழில் நுட்பங்கள், திறன்களை பகிர்வதே தொழில்முறை தொகுப்பாகும்.
3. தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?
- சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் அங்கு குடியேறி தங்குவதால்
- சில துறைகளில் பெரிய நிறுவனங்களை நிறுவும் போது அதன் பணிகள், சேவைகளை கவனிப்பதால்
- வட்டார மூலப்பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு முடிவு செய்தால் தொழில் தொகுப்புக்கள் உருவாகின்றன.
4. தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக
- SIPCOT-1971-ல் தொழில் முன்னேற்றத்திற்காகவும், தொழில் பேட்டைகள் அமைக்கவும் நிறுவப்பட்டது.
- TANSIDCO- சிறு தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டது
- TIIC – புதிய தொழில் பிரிவுகளை நிறுவ நிதி
- TANSI – சிறு தொழில் அமைப்புகளை தன் பொறுப்பில் எடுத்தல்
5. தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?
- திரவக் கழிவுகளால் சுகாதாரம், நீர் நிலைகள், விவசாய நிறுவனங்கள் கெடுகின்றன.
- முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலைவாய்ப்புகான குறை ஏற்படுகிறது.
- தற்காலிக பணியால் பணியாளர்களின் தரம் குறைகிறது
6. தொழில் முனைவோர் என்றால் என்ன?
- புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் தொழில் முனைவோர் ஆவார்.
- சிறந்த நிர்வாகத்திறன், வலிமையான குழுவை அமைக்கும் திறமை, தேவையான தலைமை பண்புகளை கொண்டவர்
7. தொழில் முனைவு என்றால் என்ன?
- தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகள் தொழில் முனைவு எனப்படும்
- தொழில் முனைவு ஒன்றை உருவாக்குவதற்கும் மேலும் பெரிதுபடுத்துவதற்குமான திறன் ஆகும்.
DOWNLOAD PDF – Click Here