பத்தாம் வகுப்பு – வரலாறு 5-மதிப்பெண் – வினா விடைத் தொகுப்பு

பத்தாம் வகுப்பு – வரலாறு 5-மதிப்பெண் – வினா விடைத் தொகுப்பு

அலகு – 1

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

1. முதல் உலகப்போருக்கான முக்கிய காரணங்களை விவாதி

 • ஐரோப்பிய நாடுகளின் அணிசேர்க்கை, எதிரணி சேர்க்கை. மூவர் உடன்படிக்கை-ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி. மூவர் கூட்டு நாடுகள்-இங்கிலாந்து, பிரான்சு, ரஷ்யா

வன்முறை சார்ந்த தேசியம்

 • இங்கிலாந்து (ஆரவாரமான), பிரான்சு (வெறிகொண்ட) ஜெர்மனி (தன்கலாச்சாரம் உயர்வு) தேசபற்றின் வளர்ச்சி

ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை

 • இரண்டாம் கெய்சர் வில்லிய மின் இரக்கமற்ற, ஆக்கிரமிப்பு, மனப்பான்மை கொண்டவர். ஜெர்மனி கப்பற்படையை விரிவுபடுத்தியதால், இங்கிலாந்தும் கப்பற்படையைவிரிவுபடுத்தி போட்டியில் இறங்கியது.

பிரான்சு – ஜெர்மனி பகை

 • பிரான்சு தன் அல்சேஸ், லொரைன் பகுதிகளை ஜெர்மனியிடம் இழந்தது. மொராக்கோவில் இங்கிலாந்து-பிரான்சு ஒப்பந்தத்தை ஜெர்மன் எதிர்த்தது. பால்கன் பகுதியில் ஆஸ்திரியா-செர்பியா இடையே பகை
 • முதல், இரண்டாம் பால்கன் போரில் துருக்கி மற்றும் பல்கேரியா தோற்றது

உடனடிக் காரணம்

 • ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசரின் மகனான பிரான்ஸ் பெர்டினாண்டு ஒரு செர்பியனால் கொல்லப்பட்டதே முதல் உலகப் போருக்கான உடனடிக் காரணமாக அமைந்தது.

2. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டு காட்டுக

 • ஜெர்மனி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்
 • ஜெர்மனி படை வீரர்கள் சுருக்கப்பட்டு, சிறிய கப்பற்படை வைக்க அனுமதி ஆஸ்திரிய-ஜெர்மனி ஒருங்கிணைப்புக்கு தடை
 • ஜெர்மனியின் காலனி நாடுகளின் உரிமையை நேச நாடுகள் பெற்றன.
 • ஜெர்மனியின் அல்சேஸ், லொரைன் பகுதிகள் பிரான்சிடம் ஒப்படைப்பு
 • ஜெர்மனியின் டான்சிக் துறைமுகம் சர்வதேசசங்கத்திடம் ஒப்படைப்பு
 • ஆஸ்திரிய சுதந்திரத்தை ஜெர்மனி அங்கீகரித்தல்

3. லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக

 • ரஷ்ய புரட்சியின் போது லெனின் வருகை போல்ஷ்விக்குகளின் இக்கட்டான சூழலை மாற்றியது.
 • அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்ற லெனின் முழக்கம் புரட்சியாளர்களை கவர்ந்தது
 • ரொட்டி, அமைதி, நிலம் என்ற லெனின் முழக்கம் போரில் துயறுற்ற மக்களை கவர்ந்தது.
 • நவம்பர் 7, 1917-ல் அரசு கட்டிடங்கள், அலுவலகங்கள் புரட்சியாளர்களால்
 • கைப்பற்றப்பட்டது.
 • நவம்பர் 8, 1917-ல் புதிய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பேற்றது.
 • லெனின் அமைதியை மேற்கொண்டு, புதிய அரசை உருவாக்க முயற்சி மேற்கொண்டார்.

4. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.

 • 1920-ல் ஆலேண்டு தீவுகள் பிரச்சனை தீர்த்தல்
 • 1921-ல் போலந்து – ஜெர்மனி எல்லை பிரச்சனை தீர்வு
 • பல்கேரியா மீது கிரிஸின் போரை தடை செய்தது
 • 1925-லொக்கர்னோ உடன்படிக்கை – ஐரோப்பாவில் அமைதி
 • லொக்கார்னோ உடன்படிக்கையின் படி ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவில் பரஸ்பரம் அமைதிக்கு உத்தரவாதமளித்தன.
 • ஜெர்மனி சர்வதேச சங்கத்தில் இணைந்தது. பாதுகாப்புக்குழுவிலும் நிரந்தர இடமளிக்கப்பட்டது.

அலகு-2

இரு உலகப் போர்களுக்கு இடையில் உலகம்

1. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச் சென்ற சூழ்நிலையைக் கண்டறியவும்

 • முதல் உலகப்போரின் விளைவும், சமூக ஜனநாயகக் கட்சியின் வீழ்ச்சியும் ஹிட்லரின் எழுச்சிக்கும் காரணமாயின
 • 1919-ல் ஹிட்லர் உட்பட 7 பேர் நாசிக் கட்சியை நிறுவினர்,
 • ஹிட்லர் வன்முறைசார் அரசியலை யூதர்களுக்கு எதிராக வளர்த்தார்
 • தேசிய புரட்சியில் சிறை சென்று தன் அரசியல் சிந்தனை நூலான எனது போராட்டத்தை எழுதினார்
 • முதலாளிகள் சொத்து உரிமையாளர்களின் ஆதரவால் தவறான வழியில் அதிகாரத்தை கைப்பற்றினார்
 • பின் 1933-ல் ஹிட்லர் சான்சிலராக பதவியில் அமர தொழிலதிபர்கள், குடியரசுக் கட்சியினர் ஆதரித்தனர்.
 • இவ்வாறு ஹிட்லரின் நாசிக் கட்சி, ஜெர்மனியில் இருந்த பாராளுமன்ற ஜனநாயக கட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.

2. உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதனைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்.

 • 1919-ல் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் இரட்டையாட்சி 2.
 • இந்தியாவைத் தொழில்மயமாக்க காலனிய அரசுகள் குறைவான நடவடிக்கைகள் எடுத்தன.
 • 1929-ல் பொருளாதார பெருமந்தம் ஆங்கில வர்த்தகத்தில் பெரும் சேதம்
 • 1932 ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பொருட்களுக்கு முன்னுரிமை
 • அந்நிய செலாவணி கொள்கை ஆங்கில அரசுக்கு எதிராக அரசியல் போராட்டத்தை அதிகபடுத்தியது
 • வேளாண் பொருட்களின் விலை பாதியாக குறைந்தது. வரி இரண்டு மடங்கானது
 • 1935 இந்திய அரசியலமைப்பு சட்டபடி நடந்த தேர்தல் வென்ற காங்கிரஸ் கட்சியை கேட்காமல் 2-ம் உலகப்போரில் இந்தியாவை ஈடுபட செய்தது.

3. தென்னாப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.

தேசிய அரசியலின் எழுச்சி;

 • யூனியனிஸ்ட் கட்சி, தென்னாப்பிரிக்க கட்சி என தென்னாப்பிரிக்காவில் இரு கட்சிகள்இருந்தன.
 • தென்னாப்பிரிக்க கட்சி ஆங்கிலேயரின் ஒத்துழைப்புடன் ஆட்சியை நடத்தியது. ஆனால் இக்கட்சியின் ஒரு பிரிவினர் தேசிய கட்சியை தொடங்கினர்
 • 1920- தேர்தல் தேசிய கட்சி 44 இடங்களும், தென்னாப்பிரிக்க கட்சி 41 இடங்களையும் வென்றது  
 • ஆனால் யூனியனிஸ்ட் கட்சி, தென்னாப்பிரிக்க கட்சியுடன் இணைந்ததால் தேசிய கட்சியை விட பெரும்பான்மை பெற்றது.

தேசிய அரசியலின் வளர்ச்சி;

 • 1924 தேர்தல் தேசிய கட்சி வென்றது
 • தேசிய கட்சிக்கு தொழிலாளர் இயக்கம் அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது
 • நாட்டின் பொருளாதார பிரச்சனையை தீர்க்க 1934-ல்தென்னாப்பிரிக்க கட்சியும், தேசியக் கட்சியும் இணைந்து சவுத் ஆப்பிரிக்க பார்ட்டி என எதிர் கட்சியானது

அலகு -3

இரண்டாம் உலகப்போர்

1. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க

 • 1939-1945 வரைநடைபெற்ற போரில் 24 மில்லியன் இராணுவத்தினரும், 50 மில்லியன் மக்களும் உயிரிழந்தனர்.
 • உலகம் இரு வல்லரசு அணிகளாக அமெரிக்கா தலைமையிலும், சோவியத் யூனியன் தலைமையிலும் பிரிந்தது.
 • இரு வல்லரசு நாடுகளும், உலகில் பல நாடுகளும் அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்தன.
 • பெரிய மற்றும் சிறிய நாடுகளுக்கு பொது இடமாக சில பன்னாட்டு முகமைகள் (ஐ.நா.சபை, உலகவங்கி) உருவாகின.
 • காலனி நாடுகளுக்கு விடுதலை வழங்க வேண்டிய சூழல் காலனி ஆதிக்க நாடுகள் மாறின.
 • பெண்கள் உழைப்பாளர்களாகவும், பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்றதால் சமூக உறவுகள் மாறின. (திருமணம், குடும்பம்)

2. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க. ஐ.நா.வின் அமைப்பு;

 • சமமான வாக்குகளுடன் 193 உறுப்பு நாடுகள்
 • பொதுச்சபை – ஆண்டுக்கு ஒரு முறை கூடி விவாதிக்கும் அனைத்து நாடுகளின் சபை.
 • பாதுகாப்பு அவை – முக்கிய அம்சங்களை விவாதிக்கும் அவையில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர நாடுகளும் 10 தற்காலிக நாடுகளும் உள்ளன. நிர்வாக அமைப்பு – ஐ.நாவின் செயல்பாட்டு அங்கம்
 • பன்னாட்டு நீதிமன்றம் – நீதி நிர்வாக அமைப்பு
 • பிற அமைப்புகள் – WHO, FAO, UNESCO, UNICEF

ஐ.நா.வின் செயல்பாடுகள்;

 • உலகின் சூழலுக்கு ஏற்ப செயல்பாடுகளில் மாற்றம்
 • 1960-ல் காலனி ஆதிக்க நீக்கம்
 • தன் அமைதிப்படை மூலம் உலகில் அமைதி காத்தல்
 • மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகால மாற்றங்கள், பாலின சமத்துவம் போன்றவை கவனித்தல்.

அலகு-4

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

1. சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா.சே.துங்கின் பங்களிப்பை அளவிடுக

 • 1911-ம் ஆண்டு புரட்சியின் போது மாசேதுங் தன் பொதுவுடைமை அரசியல் வாழ்வை துவங்கினார்
 • 1933-ம் ஆண்டுகளில் கட்சியின் முழுகட்டுப்பாடும் மாவோ வசம் வந்தது.
 • 1934-ல் பொதுவுடைமை இராணுவத்தினருடன் நீண்ட பயணத்தை ஆரம்பித்தார்.
 • 1937-ல் ஒரு கோடி மக்களின் தலைவரானார்.
 • தொழிலாளர்களையும், விவசாயிகளையும் தன் பக்கம் ஈர்த்தார். 1945-ல் கோமிங்டாங் பொதுவுடைமை கட்சி உள்நாட்டு போர் துவங்கியது.
 • கொரில்லா போர் முறை மூலமும், பெரிய அளவு இராணுவத்தின் மூலமும் 1948-ல் சீனாவின் பெரும் பகுதியை கைப்பற்றினார்.
 • 1949 மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டில் நடுவண் ஆட்சிக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
 • மாசேதுங்கின் சீன மக்கள் குடியரசு கட்சி சீனாவை 5 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தது.

2. ஐரோப்பியக் குழு எவ்வாறு ஐரோப்பிய இணைவானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக.

 • ஐரோப்பியக் குழுமம் 2ம் உலகப் போருக்கு பின் ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைக்கவும், போர்களை தவிர்க்கவும், அமெரிக்கா, ரஷ்யாவிற்கு சமமான ஒரு சமூகமாக 1949-ல் உருவானது.
 • ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம் ரோம் ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை நிறுவியது.
 • ஐரோப்பிய பொருளாதார சமூகம் தனியார் ஒப்பந்தத்தை புறக்கணித்து, பொதுவான விவசாய கொள்கை மற்றும் பொதுவான வெளிநாட்டு கொள்கையை உருவாக்கியது.
 • ஒற்றை ஐரோப்பியச் சட்டம் (1987) ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் எல்லைகளை விரிவாக்கியது.
 • ஐரோப்பிய ஒன்றியம் (1992) பொதுவான நிதிக் கொள்கை மற்றும் பொதுவான பணத்தை (யூரோ) ஏற்படுத்தி அவற்றை நிர்வகிக்க பொது நிறுவனங்களை நடைமுறை படுத்தியது.

அலகு-5

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

1. 19-ம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.

 • 19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் சமூக, சமய சீர்திருத்தங்கள் பல நடைபெற்றன.
 • இந்திய மக்கள் மேற்கத்திய கருத்துக்களால் (சமத்துவம், சுதந்திரம்) கவரப்பட்டனர்
 • எனவே நம் பண்பாட்டின் குறைகளை நீக்கி பழைய புகழை கொண்டு வர விரும்பினர்
 • நடுத்தர வர்கத்தினரின் மேற்கத்திய கருத்துக்கள், சிந்தனைகள்  இந்திய சீர்திருத்தவாதிகளின் இந்திய, மேற்கத்திய பண்பாட்டு இணக்க முயற்சி
 • சீர்திருத்த வாதிகளின் கருத்துக்கள் சதி பெண்சிசு கொலை, குழந்தை திருமணம் போன்ற சமூக தீமைகளை கட்டுபடுத்தின.
 • இச்சூழல் 19ம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் உருவாகி நாட்டின் பழம்பெரும் கலாச்சாரத்தை மீட்க விரும்பின

2. இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரும், விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினை திறனாய்வு செய்க. ராமகிருஷ்ணரின் தொண்டு;

 • அனைத்து மதங்களின் உலகளாவிய மூலக்கூறுகளை பின்பற்றி வீடுபேற்றை அடைதல்
 • ஜீவன் என்பதே சிவன்
 • மனிதர்களுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை.
 • உயிர்கள் மேல் இரக்கம் தேவையில்லை, சேவையே தேவை

விவேகானந்தரின் தொண்டு;

 • நடைமுறை வேதாந்தமான மனிதகுலத்திற்கு தொண்டு
 • பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம்
 • இந்து சமூகத்திற்கு புத்துயிர் அளிக்க இளைஞர்களுக்கு அழைப்பு
 • இந்து சமய சடங்குகளில் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு கட்டாய அனுமதி
 • இவரின் கருத்தால் மேற்கத்திய கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடம் அரசியல் மாற்றம்

3. பெண்களின் மேம்பாட்டிற்கு 19-ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக

 • இராஜாராம் மோகன்ராய் : உடன்கட்டை (சதி), பலதாரமணம் ஒழிப்பு விதவை மறுமணம், பெண்கல்வி ஊக்குவிப்பு
 • ஈஸ்வர சந்திர வித்யாசாகர் : பெண் கல்விக்கு பெண்கள் பள்ளிகள் விதவை மறுமண ஆதரவு
 • கேசவ சந்திர சென் : கிருத்துவ மத சாரம், குழந்தை திருமண எதிர்ப்பு
 • M.G.ரானடே : விதவை மறுமண சங்கம், சாதி மறுப்பு திருமணம்
 • சுவாமி தயானந்த சரஸ்வதி : விதவை மறுமண ஆதரவு, குழந்தை திருமண எதிர்ப்பு
 • ஜோதிபா பூலே : விதவைகள் காப்பகம், குழந்தை திருமண எதிர்ப்பு, உயர்சாதி இந்துக்கள் மறுமண ஆதரவு.

அலகு -6

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள்

1. கிழக்கிந்தியக் கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக

 • வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம் (1790-1799) பாஞ்சாலக்குறிச்சியின் பாளையக்காரராக தன் 30-வது வயதில் கட்டபொம்மன் பொறுப்பேற்றார். பாளையப் பகுதியில் வரி வசூல் செய்த கம்பெனி, நிர்வாக படை பலத்துடன் வசூல் செய்தது கட்டபொம்மனுக்கும் கம்பெனிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.
 • ஜாக்சனோடு ஏற்பட்ட மோதல் ஆட்சியர் ஜாக்சனை சந்திக்க சென்ற கட்டபொம்மன்அவமானப்பட்டதால் ஆபத்தை உணர்ந்து தப்பி செல்ல முயன்றார். ஊமைத்துரை ஆட்களின் உதவியோடு கோட்டையிருந்து தப்பினார். அமைச்சர் சிவசுப்ரமணியனார் கொல்லப்பட்டார்.
 • பாஞ்சாலங்குறிச்சி வந்த கட்டபொம்மன் ஆட்சியர் ஜாக்சன் தம்மை அவமானப்படுத்தியதை கம்பெனி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார்.
 • சிவகங்கை மருது பாண்டியரின் கூட்டமைப்பில் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்க்க முடிவு செய்தார்.
 • பாஞ்சாலங்குறிச்சி முற்றுகை : 1799 மே மாதம் வெல்லெஸ்லிபிரபு கட்டளையின்படி கம்பெனிபடையும், திருவிதாங்கூர் படையும் இணைந்து கட்டபொம்மனை சரணடைய கோரின.
 • கட்டபொம்மன் சரணடைய மறுத்து புதுக்கோட்டைக்கு தப்பி ஓடினார். எட்டையபுரம், புதுக்கோட்டை மன்னர்களின் துரோகத்தால் பிடிபட்டார்.
 • பிடிபட்ட கட்டபொம்மன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக் கொண்டு இறுதியில் கயத்தாறில் உள்ள புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார்.(1799-அக்-16)

2. சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக

 • சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலை தலைமையிடமாக கொண்டு மருது சகோதரர்கள் பிரிட்டிஷாரை எதிர்க்க முற்பட்டனர்.
 • கம்பெனி ஆட்சி எதிர்ப்பு மற்றும் கட்டபொம்மனுக்கு ஆதரவு, என இவர்களின் போக்கு சிவகங்கை வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.
 • கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரை, செவத்தையாவுக்கு மருது சகோதரர்கள் அடைக்கலம் கொடுத்தது கம்பெனி ஆட்சிக்கு பிடிக்காமல் அவர்களை ஒப்படைக்குமாறு கம்பெனி வற்புறுத்தியது.
 • இதை மறுத்து 1801ல் நாட்டின் விடுதலைக்காக திருச்சிராப்பள்ளி பேரறிக்கையை வெளியிட்டனர்.
 • சில பாளையக்காரர்களுடன் மருது சகோதரர்கள் படையும், சில பாளையக்காரர்களுடன் கம்பெனி படையும் போரிட்டன.
 • கம்பெனியில் தொடர் தாக்குதலால் மருது சகோதரர்கள் படைகள் தோற்கடிக்கப்பட்டு சிவகங்கை பிரிட்டீஷ் கம்பெனியுடன் இணைந்தது.
 • 1801-அக்டோபர் 24ல் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டவுடன் சிவகங்கையின் துயரமான வீழ்ச்சி முடிவடைந்தது.

3. வேலூரில் 1806ல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக

புரட்சியின் கூறுகள்;

 • 1792ல் திப்புவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் சேலம் திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.
 • மனமுடைந்த சிற்றரசர்கள், நிலச்சுவான்தாரர்கள் ஏற்படுத்தியதே 1806ம் ஆண்டு வேலூர் புரட்சியாகும்.

புரட்சிக்கான காரணங்கள்;

 • பிரிட்டீஷ் இராணுவத்தல் இந்திய வீரர்களுக்கு குறைந்த ஊதியம், குறைந்த பதவி உயர்வு
 • சமய நம்பிக்கைகளுக்கு ஆங்கிலேய அதிகாரிகளின் குறைவான மதிப்பு
 • சிக்கலான வேளாண் கொள்கை
 • 1805-ல் கடும் பஞ்சம், நெருக்கடி
 • ராணுவத்தில் புதிய விதிமுறைகள் மத அடையாளங்கள், காதணிகள் அணியத் தடை, தாடி, மீசையில் கட்டுப்பாடு, விலங்கு தோலினால் ஆன தலைப்பாகை அறிமுகம்

புரட்சி வெடித்தல்;

 • கம்பெனியின் கட்டுப்பாடுகளை 1806 ஜீலை 10 அதிகாலையில் நடந்தபுரட்சியில் ஆங்கில அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
 • கர்னல் கில்லஸ்பியின் பதிலடியால் புரட்சி ஒடுக்கப்பட்டது. இவ்வாறு பல கூறுகள் 1806ம் ஆண்டு வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்றன

அலகு-7

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்.

1. 1857ம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பின் விளைவுகள் குறித்து விரிவாக ஆராயவும்

ஆங்கிலேயரின் இணைப்புக் கொள்கை;

 • ஆங்கிலேயர்கள் தங்கள் முழு அதிகாரங்களைக் கொண்டு சுதேச அரசர்கள் ஊழல்வாதிகள் மற்றும் திறனற்றவர்கள் என அவர்களின் ஆட்சிப் பகுதிகளை இணைத்துக் கொண்டனர்.
 • வாரிசு இழப்புக் கொள்கை மூலம் சதாரா, ஜான்சி, நாக்பூர், சாம்பல்பூர் ஆகியன இணைக்கப்பட்டன.

இந்திய கலாச்சார உணர்வுகள் பற்றிய தீவிரதன்மை இல்லாதது;

 • மதக் குறியீடு, தாடி வைக்க தடை
 • புதிய தலைப்பாகை அறிமுகம், ஆடை கட்டுப்பாடு
 • ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம்
 • பசு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய தோட்டாக்களின் பயன்பாடு

விளைவுகள்;

 • 1858 விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை
 • கம்பெனி ஆட்சி முடிவு, இங்கிலாந்து அரசின் நேரடி ஆட்சி
 • மதம் சார்ந்த விஷயங்களில் தலையீடு இல்லை .
 • அரசுப் பணியில் இந்தியர்கள், ராணுவ கட்டமைப்பில் மாற்றம்
 • இந்திய அரசு செயலர் நியமனம்.

2. 1905ம் ஆண்டு நிகழ்ந்த வங்காள பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்து கொண்டனர்?

வங்காள மக்கள் நடந்து கொண்ட விதம்;

 • மத அடிப்படையில் பிரித்த வங்கப் பிரிவினை மக்களை ஒன்றுபடச் செய்தது. மிதவாதிகள், தீவர வாதிகள் என இரண்டாக போராட்டக் குழு பிரிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டது.
 • மனுக்கள், பொது கூட்டங்கள், செய்தி பிரச்சாரங்கள் மூலம் மக்கள் எதிர்ப்பு நடந்தது.
 • அந்நிய பொருட்களை மக்கள் புறக்கணித்தனர்
 • சுதேசி இயக்கக் கொள்கை வங்க மக்களிடம் வேகமாக பரவியது
 • புறக்கணிப்பும், சுதேசி இயக்கமும் இணைந்தே நடந்தது
 • 1905 அக்டோபர் 16 பிரிவினை நாள் துக்க நாளாக மாறியது
 • மக்கள் பள்ளி, கல்லூரிகள் புறக்கணிப்பு, நீதிமன்ற அரசு சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

3. தன்னாட்சி (ஹோம்ரூல்) இயக்கத்தை தொடங்கியதன் மூலம் திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் இந்திய சுதந்திர போராட்டத்தை 1916ம் ஆண்டுக்குப் பின் எவ்வாறு தக்க வைத்தனர்?

 • திலகர் மற்றும் அன்னிபெசன்டின் தன்னாட்சி இயக்கத்தின் போது இந்திய தேசிய இயக்கம் புதிய வடிவம் பெற்றது
 • முதல் உலகப்போருக்குப் பின் தன்னாட்சி வழங்கும் அதிகாரம் கொடுக்காமல் ஆங்கில அரசு ஏமாற்றியது புதிய மக்கள் இயக்கம் உருவாக வழி செய்தது.
 • ஆங்கிலேயரை எதிர்க்க 1916 ஏப்ரல் மாதம் திலகரும், செப்டம்பர் மாதம் அன்னிபெசன்டும் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கினர்.
 • தன்னாட்சிக்கு ஆதரவாக இரண்டு அமைப்புகளும் தீவிரமாக செயல்பட்டது.
 • பத்திரிக்கை உரைகள், பொது கூட்டங்கள், விரிவுரைகள், விவாதங்கள் தன்னாட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது.
 • 1916 லக்னோ அமர்வில் காங்கிரஸ் உறுப்பினர்களை ஒன்று சேர்க்க உதவியது
 • விடுதலை இயக்கத்தில் அதிக இளைஞர்களை சேர்த்தும், இயக்கத்தை கிராம பகுதியிலும் சேர்த்தது.
 • அரசமைப்பு பெற தன்னாட்சி, டொமினியன் அந்தஸ்து, இலக்கை அடைய வன்முறையற்ற வழியை குறிக்கோளாக தன்னாட்சி இயக்கம் வைத்திருந்தது.

அலகு – 8

தேசியம்: காந்திய காலகட்டம்

1. காந்தியடிகள் ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராய்க

 • தென்னாப்பிரிக்க இனவேறுபாடு கொண்ட ரயில் பயண அனுபவம்
 • டால்ஸ்டாய், ஜான் ரஸ்கின் படைப்புகள் இவரை மாற்றியது
 • லண்டனில் படிக்கும் போது கிடைத்த அனுபவங்கள்
 • உண்மையின் வடிவான சத்தியாகிரக வழி போராட்டம்
 • சம்பரானில் தீன் காதியா அகற்றி வெற்றி
 • இயக்கங்கள் நடத்தி (ஒத்துழையாமை, சட்டமறுப்பு, வரிகொடா) போராட்டத்தை தீவிரப்படுத்தியது
 • உப்பு சத்தியாகிரகத்தால் ஒரு மக்கள் தலைவரானார்
 • தீண்டாமை, வகுப்புவாரி முறை ஒழிப்பு
 • வெள்ளையனே வெளியேறு இயக்கம் மூலம் மாபெரும் தலைவரானார் மேற்கூறிய அனைத்தும் காந்தியடிகள் ஒரு மக்கள் தலைவராக உருமாற உதவிய காரணிகளாகும்.

2. காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமாக சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்

 • 1929ல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது
 • இதன்படி வரிகொடா இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் மூலம் வன்முறையின்றி சுதந்திரம் அடைய உறுதிமொழி ஏற்கப்பட்டது.
 • முக்கிய கோரிக்கையாக உப்பு வரியை ரத்து செய்யுமாறு காந்தியடிகள் அரச பிரதிநிதியிடம் அளித்தார்.
 • பதில் அளிக்காததால் சட்ட மறுப்பு இயக்கத்தை தீவரப்படுத்தினார்.
 • பெண்கள், பலபிரிவு மக்களுடன் தண்டி யாத்திரையை தொடங்கி உப்பு காய்ச்சி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
 • ஆனால் காந்தியடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவரின் புகழ் இந்திய அளவில் உயர்ந்தது. இவ்வாறு காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமாக சட்ட மறுப்பு இயக்கம் அமைந்தது.

3. இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்

 • 1905 கர்சனின் வங்கப்பிரிவினை இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம்
 • 1920ல் இந்து முஸ்லீம் இடையே ஏற்பட்ட மோதல் மத்திய சட்டபேரவையில்
 • முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு என முஸ்லீம் லீக் கோரியது
 • 1932ல் ராம்சேமெக்டொனல்டு வகுப்புவாத அறிக்கை
 • முகமது அலிஜின்னா 1934-ல் முஸ்லீம் லீக்கிற்கு புத்துயிர் அளித்து 1940ல் தனிநாடு கோரிக்கை வைத்தார்.
 • இந்து மகா சபையும், முஸ்லீம் லீக்கும் அரசியல் காரணங்களுக்காக மதத்தை பயன்படுத்தின 6. 1946 தேர்தல் இடைக்கால அரசில் இணைந்த முஸ்லீம் லீக் தனிநாடு கோரிக்கைக்கு வலு சேர்த்தது.
 • 1947 ஜீலை 18 பிரிட்டீஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலை சட்டம் மூலம் இந்தியாபாகிஸ்தான் என இரு நாடாக பிரித்து விடுதலை அறிவித்தது. இவையே இந்தியாவின் பிரிவினைக்கு பின்னால் இருந்த காரணிகளாகும்.

அலகு-9

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

1. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்?

 • வங்கப் பிரிவினையால் தோன்றிய சுதேசி இயக்கம் தமிழ்நாட்டில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது
 • அந்நிய பண்டங்கள் புறக்கணித்தல் நடவடிக்கைகள்
 • பாரதியாரின் தேசபற்று பாடல்களின் எழுச்சி
 • சுதேசி கருத்துக்களை பரப்ப சுதேசமித்திரன், இந்தியா போன்ற இதழ்கள் தோன்றின
 • சுதேசி இயக்கத்தில் மாணவர்கள், இளைஞர்கள் சேர்ந்தனர்
 • சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை வ, உ,சி தொடங்கினார்
 • திருநெல்வேலிகலகம் போராட்டத்தை அதிகரித்தது
 • ஒத்துழையாமை இயக்கத்தில் ராஜாஜியும், பெரியாரும் துடிப்புடன் செயல்பட்டனர்
 • வரிகொடா இயக்கமும், அந்நிய பொருட்கள் புறக்கணிப்பு தமிழகம் முழுவதும் நடந்தது.

2. தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க

தோற்றம்;

 • சென்னை மாகாணத்தில் கல்வியறிவு பெற்ற பிராமணர்கள் அதிகம் இருந்தனர்
 • இவர்களின் அரசியல் ஆதிக்கம் மற்றும் சமூக நடவடிக்கைகள் மேலோங்கி இருந்தன
 • காங்கிரசிலும் பிராமணர்களே அதிகம் இருந்தனர்

பிராமணர் அல்லாதோர் இயக்கம்

 • 1912ல் சென்னை திராவிடர்கழகம் உருவானது
 • T.M.நாயர், L.தியாகராயர் முக்கிய பங்காற்றினர்
 • இதுவே பிராமணரல்லாதோர் நலன்களை பாதுகாக்க தென்னிந்திய நல உரிமை சங்கமாக மாறியது
 • ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தமிழில் திராவிடன், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா என்ற விழிப்புணர்வு செய்தித்தாள்களை வெளியிட்டது.
 • இதுவே பின் நீதிக் கட்சியாக மாறி பிராமணர் அல்லாத பிற மக்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கு போராடியது.
 • இதன் விளைவாக 1919-ம் ஆண்டு சட்டம் பிராமணல்லா தோருக்கு தேர்தல் இடஒதுக்கீடு வழங்கியது.

3. சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி

 • காந்தியடிகள் 1930ல் தொடங்கிய சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழகத்தில் பல்வேறு ரீதியான மக்கள் கலந்து கொண்டனர்
 • சென்னையில் கடைகள் முன் மறியலும், அந்நிய பொருட்கள் புறக்கணிப்பும் நடந்தது
 • ராஜாஜி வேதாரண்யத்தை நோக்கி உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார் நாமக்கல் கவிஞரின் தேசபக்தி பாடல்களும், பயணித்த பாதை எங்கும் வரவேற்பு கிடைத்தது
 • உப்பு சட்டத்தை மீறியதால் ராஜாஜி உடன் 12 தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்
 • இந்த சட்ட மறுப்பு இயக்கம் சென்னை , ராமேஸ்வரம் தூத்துக்குடி, உவரி மற்றும் பல இடங்களில் நடந்தது.
 • தீரர் சத்தியமூர்த்தி அந்நிய துணிகள் விற்கும் கடைகளை தடை செய்தார்
 • திருப்பூரில் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய திருப்பூர் குமரன் காவலர்கள் தடியடியால் இறந்தார், இவ்வாறு சட்ட மறுப்பு இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி பெற்றது.

அலகு – 10

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

1.தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்

 • காலனியாதிக்கத்தின் போது தமிழ் மறுமலர்ச்சியில் பண்பாடு, மனிதநேயம், கலாச்சாரம் போன்ற மாற்றத்தை தமிழ்நாடு அனுபவித்தது
 • அச்சு இயந்திரம் வருகை, தமிழ்மொழி மீதான ஆய்வுகள் தமிழ் மறுமலர்ச்சிக்கு உதவின
 • ஐரோப்பிய மொழிகள் தவிர அச்சில் ஏறிய முதல் மொழி தமிழ்மொழியே ஆகும்
 • பண்டைய தமிழ் இலக்கியங்கள் வெளியிட கீழ்கண்ட தமிழ் அறிஞர்கள் அரும்பாடு பட்டனர் சி.வை.தாமோதரனார், உ.வே.சாமிநாதனார் (தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள்)
 • பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களின் வரலாறு, மரபு, மொழி, இலக்கியம், சமயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது
 • தமிழர்களின் அடையாளம் அச்சு வடிவிலான பண்டை தமிழ் நூல்களால் வெளிவந்தன
 • கால்டுவெல்லின் தமிழின் தொன்மையும், பி.சுந்தரனார், திரு.வி.க.பாரதிதாசன், பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் போன்றோரின் பங்கும் தமிழ் மறுமலர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உதவின.

2. நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி, சமூக நீதிக்கான அதன் பங்களிப்பை சுட்டிக் காட்டவும்

நீதிக்கட்சியின் தோற்றம்;

 • தமிழக அரசியல் பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பிராமணரல்லா Dr. நடேசனார், பி.டி. தியாகராசர், T.M. நாயர் மற்றும் அலமேலு மங்கை ஆகியோர் பிராமணர் அல்லாத தென்னிந்திய நல உரிமை சங்கத்தை 1916 நவம்பர் 20ல் உருவாக்கினர்
 • இதுவே நீதிக்கட்சியாக பெயர் மாற்றப்பட்டது

நீதிக்கட்சியின் பங்களிப்பு

 • கட்சியின் கொள்கைகளை பரப்ப திராவிடன், ஜஸ்டிஸ், ஆந்திர பிரகாசிகா பத்திரிக்கைகள் வெளியிட்டது.
 • பிராமணரல்லாதவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் களத்தில் இடம்
 • சாதி மறுப்பு திருமண ஆதரவு, தேவதாசி முறை ஒழிப்பு
 • 1921-ல் அரசியலில் பெண்களுக்கு வாக்குரிமை, இடஒதுக்கீடு
 • 1924-ல் பணியாளர் தேர்வு வாரியம் தோற்றம்
 • 1926ல் அறநிலையத்துறை சட்டம் இயற்றல்
 • ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா
 • மதிய உணவு திட்டம் சென்னையில் முதன்முதல் அறிமுகம்

3. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்

பெரியாரின் பங்களிப்பு:

 • சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்
 • பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்ப குடியரசு, ரிவோல்ட் பகுத்தறிவு, விடுதலை போன்ற பத்திரிக்கைகளை நடத்தினார்.
 • இந்தி மொழி கட்டாயத்தை எதிர்த்து இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வைக்கம் போராட்டம்
 • குழந்தை திருமணம், தேவதாசி முறையை எதிர்த்தார்
 • பெண்களுக்கு சொத்துரிமை ஆண்-பெண் சமஉரிமை
 • சுய மரியாதை திருமணங்களை நடத்தினார்
 • அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆக வாதிட்டார்
 • சேரன் மாதேவி குருகுலப் பள்ளி சாதிவேறுபாடு எதிர்ப்பு
 • மூட நம்பிக்கைகளை வன்மையாக கண்டித்தார்.

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment