10 – ஆம் வகுப்பு – தமிழ் – பாடக்குறிப்பு – ஜுலை இரண்டாவது வாரம் (11.07.22 முதல் 15.07.22 வரை )
தலைப்பு :
- கேட்கிறதா என் குரல்!
- காற்றே வா! ,
- முல்லைப் பாட்டு
விளைவு :
- காற்று மாசுபாடு குறித்துக் கலந்துரையாடி விழிப்புணர்வு பெறுதல்.
- காற்றின்றி அமையாது உயிரியக்கம்’ என்பதை அறிதல்,
- மழைக்காலத்தில் தமிழர்கள் வாழ்வை எதிர்கொள்கிற இயல்பு அறிதல்,
உணர்தல் :
- இயற்கை ஆற்றல்களை அனுபறித்துப் போற்றும் உணர்வு பெறுதல்
- இயற்கையோடு இயைந்த வாழ்வைக் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதை அறிதல்,
- இயற்கைச் சூழலை உணரும் ஆற்றல் பெறுதல் ,
முன்னறிவு :
- “காற்றில்லாமல் மனிதனால் வாழ முடியுமா?’ ஜம்பெரும் பூதங்கள் என்னென்ன?” எனக் கேட்டல் ,
- ”காடு, மலை அருவி என இயற்கை வளம் இப்போது எப்படி இருக்கிறது ? ” எனக் கேட்டல்,
விதைநெல்:
- இயற்கையின் கூறுகளில் காற்றின் பங்கு கூடுதலானது, காற்று, ஓர் உருவம் கொண்டு நம்மிடம் பேசுவது போல் பாடம் அமைந்துள்ளது.
- பாரதியாரின் வசன கவிதை வழியாகக் காற்றைப் புகழ்ந்துரைத்தல்.
- முல்லைப் பாட்டின் வழி தமிழரின் வாழ்வியலை உணர்தல்
விதைத்தல் : கேட்கிறதா என் குரல்!
- உலக உயிர்களின் இயக்கத்தைத் தீர்மானிப்பது காற்று. திருமூலர், ஔவையார் காற்றைச் சிறப்பித்தல் – பருவநிலைக்கேற்ற பெயர்கள் – திசைக்கேற்ற பெயர்கள் – கிழக்கு – கொண்டல், மேற்கு -கோடை, வடக்கு – வாடை, தெற்கு – தென்றல் – இலக்கியத்தில் காற்று – ஹிப்பாலஸ் பருவக்காற்று – மழை பொழிற்குக் காரணம், புயல் – உயிர்வளி – நவீன தொலைத் தொடர்பின் மையமாகச் செயல்படுதல் – காற்று மாசடைதல் ,தவிர்க்கும் முறைகள் பற்றி விளக்குதல்,
விதைத்தல் : காற்றே வா!
- ‘ காற்றே வா!, மலர்களில் தவழ்ந்த மணம் வீசி வா, இலைகளில் அலைகளில் மிதந்த உயிர் வளியைத் தா – எம் உயிர் நெருப்பை நீடிக்கத் தென்றலாய்த் தணிந்து வா – உன்னைப் புகழ்ந்து வழிபடுகிறோம்!” என வசன கதையை
- விளக்குதல்
விதைத்தல் : முல்லைப் பாட்டு
- திருமாலின் நெடுந் தோற்றம் போன்ற மேகம் பெரு மழையைப் பொழிகின்ற மாலை நேரத்தில் முதிய பெண்கள் ஊர்ப்பக்கம் சென்றனர். அவர்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்- கன்றின் வருத்தம் கண்ட இடைமகள் தாயர் விரைந்து வருவர் என்ற கூறுதல் – தலைவன் வருதற்கான நற்சொல் இது என மகிழ்தல்,
கருத்துப் புனைவு : கேட்கிறதா என் குரல்!

கருத்துப் புனைவு : காற்றே வா!

கருத்துப் புனைவு : முல்லைப் பாட்டு

கருத்துத் தூவானம் :
- மரம் வளர்ப்பின் தேவை. ஓசோன் படலத்தைப் பாதுகாப்பது குறித்துத் தொகுத்துரைத்தல்
- பாரதியாரின் கவிதை – காற்றைப் புகழ்வது – முல்லைப்பாட்டு – இயற்கை வாழ்வு ஆகியனவற்றைத் தொடுத்துரைத்தல்
விளைச்சல் :
- உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான முழக்கத் தொடர் ஒன்றை எழுதுக.
- சோலைக் காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசுவது போல் ஓர் உரையாடல் அமைக்க
- வசன கவிதை – குறிப்பு வரைக
- மாஅல் – இலக்கணக் குறிப்பு தருக.
- பாரதி காற்றிடம் விடுக்கும் வேண்டுகோள் யாது ?
- முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை எழுதுக
சங்கிலிப் பிணைப்பு:
- காற்று பேசியதுபோல் நிலம் பேசுவதாக எண்ணிக்கொண்டு பேசுக
- தாஜ்மகால் நிறம் மாறிக் காணப்படும் காரணத்தை ஆய்க
- சங்க கால மக்களின் – வாழ்க்கை குறித்தக் கருத்ததுக்களைப் பதிவு செய்க.
- இயற்கைச் சூழல் சார்ந்து கவிதை எழுதி வருக