10 ஆம் வகுப்பு முதல் அலகுத்தேர்வு-50 மதிப்பெண் மாதிரிவினாத்தாள்- அலகு -2

       பத்தாம் வகுப்பு – தமிழ்

நேரம் – 1.30 மணி                          தேர்வு – 2    (இயல் 2 )                    மதிப்பெண்கள் 50

     பகுதி – I  (மதிப்பெண்கள் 8)

  1. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                        8×1=8
  2. குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.

1.    ’வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்  ஆயுள் பெருக்கம் உண்டாம்’ – இப்பாடல்

                    அடிகளுக்கு உரியவர்

       அ) இளங்கோவடிகள்           ஆ) கம்பர்                      இ) ஓளவையார்     ஈ) திருமூலர்

2.  ’வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ – இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் –

         அ)  புறநானூறு                                                             ஆ) தென்றல் விடு தூது

       இ) சிலப்பதிகாரம்                                                           ஈ) நற்றிணை

3.   ’நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா’ யார்?

        அ) இளங்கோவடிகள்          ஆ) கம்பர்      இ) பாரதியார்           ஈ) ஐயூர் முடவனார்

4.   பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் ————-

       அ) முல்லைப்பாட்டு                                                    ஆ) மதுரைக்காஞ்சி

       இ) நெடுநல்வாடை                                                     ஈ) திருமுருகாற்றுப்படை

5. காலங்கரந்த பெயரெச்சம் ———-

      அ) வேற்றுமைத்தொகை                                     ஆ) வினைத்தொகை

      இ) உம்மைத்தொகை                                               ஈ) பண்புத்தொகை

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.               

      சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

      உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

      நடுங்கு சுவல் அசைந்த கையள், “கைய

     கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

     இன்னே வருகுவர், தாயர்”

6.  இப்பாடல் இடம்பெற்ற நூல்?

      அ) முல்லைப்பாட்டு                                                   ஆ) குறிஞ்சிப்பாட்டு 

      இ) திருமுருகாற்றுப்படை                                     ஈ) கூத்தராற்றுப்படை

7. இலக்கணக்குறிப்புத் தருக – உறுதுயர்

     அ) பண்புத்தொகை                                                     ஆ)வினைத்தொகை 

     இ) உவமைத்தொகை                                              ஈ) உம்மைத்தொகை

8.  பொருள் தருக – தாம்பு

அ) பாம்பு                                                                        ஆ) கொம்பு 

இ) கயிறு                                                                      ஈ) நூல்

              பகுதி – II  (மதிப்பெண்கள் 8)                பிரிவு -1

எவையெனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.  2×2=4

(10 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வெண்டும்.)               

9.   விடைக்கேற்ற வினாவினை அமைக்க.

அ. திருமூலர் தம் திருமந்திரத்தில் மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து  

        வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்.

ஆ. காற்று, பருவக்காலங்களில் மேகத்தைச் சுமந்துவந்து மழையைத் தரும்.

10.   நமக்கு உயிர் காற்று

        காற்றுக்கு வரம் மரம்

        மரங்களை வெட்டி எறியாமல்

        நட்டு வளர்ப்போம்  – இத்தொடர்களைப் போலவே   உலக காற்று நாள்  

        விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்கள் எழுதுக.

11.  வசன கவிதை குறிப்பு தருக.

                                                                         பிரிவு -2

எவையெனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                                2×2=4

12. தண்ணீர் குடி,  தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக ;  

     தொடரில் அமைக்க.

13. பகுபத உறுப்பிலக்கணம்  தருக.                   வாழ்ந்த

14. கலைச்சொற்கள் தருக.

Storm                                               –              

Land breeze                               –              

                                                பகுதி – III (மதிப்பெண்கள் 9)                 

            பிரிவு – 1      

எவையெனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.                       1×3=3

15. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில்    

      நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்… .. முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப்   

      பற்றிப் பேசுகிறது. இவ்வாறு நீர் தன்னைப் பற்றி பேசினால் கற்பனையில்      

      தலைப்புகளை எழுதுக.

16. காற்று மாசுபடும் விதம் குறித்து கேட்கிறதா என்குறல் பாடம் வழிநின்று விளக்குக.

பிரிவு – 2     

எவையெனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.                       1×3=3

17. மாகாக்கவி பாரதியார் பற்றி குறிப்பு வரைக.

18.’ சிறுதாம்பு தொடுத்த’ எனத்தொடங்கும் முல்லைப்பாட்டு பாடலைப் பிழையின்றி 

      எழுதுக.                                                                    பிரிவு – 3

எவையெனும் ஒரு வினாவிற்கு  மட்டும் சுருக்கமாக  விடையளிக்க.                     1×3=3

19. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத்

       தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் 

       சுவர்கடிகாரத்தில் மணி பார்த்தாள். இப்பத்தியில் அமைந்துள்ள தொகைச்   

       சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,  விவரித்து எழுதுக.

20. அன்மொழித்தொகையினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

பகுதி – IV  (மதிப்பெண்கள் (10)    

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                               2×5=10

21.  முல்லைப் பாட்டில்  உள்ள  கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

        22.  மொழிபெயக்க.

The golden sun gets up early in the morning and stars it bright rays to fade         

         away the dark.  The milky clouds start their bantering wandering. The colourful  

          birds start twitting their morning melodies in percussion. The cute butterflies

          dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze

         gently blows  everywhere and makes everything pleasant.

23.   காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பகுதி – V     (மதிப்பெண்கள் 16)

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                        2×8=16

24.புயலிலே ஒரு தோணி கதையினைக் கருப்பொருள் சிதையாமல் எழுதுக

25. மாநில அளவில் நடைபெற்ற’ மரம் இயற்கையின் வரம்’ என்னும் தலைப்பிலான   

        கட்டுரைப்  போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு  பெற்ற தோழனை வாழ்த்தி 

        மடல் எழுதுக.

 26.  மலர்ந்தும் மலராத பாதிமலர் போல்

                வளரும் விழி வண்ணமே – வந்து

       விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

                விளைந்த கலை அன்னமே

       நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

                நடந்த இளந் தென்றலே – வளர்

       பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த  தமிழ் மன்றமே.   

                                             – கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை   நயத்தையும் பாராட்டி  உரைசெய்க.

Leave a Comment