10 ஆம் வகுப்பு முதல் அலகுத்தேர்வு- மாதிரி வினாத்தாள்- அலகு -3
பத்தாம் வகுப்பு – தமிழ்
நேரம் – 1.30 மணி தேர்வு – 1 (இயல் 3 ) மதிப்பெண்கள் 50
பகுதி – I (மதிப்பெண்கள் 8)
- அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 8×1=8
- குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.
1. ’தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’ – இப்பாடல் அடி
இடம்பெற்றுள்ள நூல் —
அ) புறநானூறு ஆ) தென்றல் விடு தூது இ) சிலப்பதிகாரம் ஈ) நற்றிணை
2. சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர்————–
அ) இளங்கோவடிகள் ஆ) நப்பூதனார் இ) அதிவீர ராமப்பாண்டியன் ஈ) பாரதியார்
3. பின் வருவனவற்றுள் முறையானத் தொடர் எது?
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
ஈ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
4. அறிஞருக்கு நூல் , அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை
வேறுபடுத்தக் காரணமாக அமைவது ———-
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
5. ”இல்லறம் புரிவது விருந்தோம்பல் பொருட்டே” என்றவர் யார்?
அ) இளங்கோவடிகள் ஆ) நப்பூதனார் இ) திருவள்ளுவர் ஈ) பாரதியார்
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருகஎன உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.
6. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
அ) காசிக்காண்டம் ஆ) கொய்யாக்கனி இ) சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம்
7. இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடியெதுகைகளை எழுதுக.
அ) விருந்தினனாக – திருந்துற ஆ) விருந்தினனாக – வியத்தல்
இ) பொருந்து – அருகுற ஈ) பரிந்துநன் – முகமன்
8. உரைத்தல் – இலக்கணக்குறிப்புத் தருக.
அ) எண்ணும்மை ஆ) வினைமுற்று இ) பெயரெச்சம் ஈ) தொழிற்பெயர்
பகுதி – II (மதிப்பெண்கள் 8) பிரிவு -1
எவையெனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 2×2=4
(11 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வெண்டும்.)
9. நச்சப் படாதாவன் செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள்
தருக.
10. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
11. தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை
உரலில் இட்டு குத்தி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்பது
இலக்கிய செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா?
உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
பிரிவு -2
எவையெனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க வெண்டும். 2×2=4
12. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன்
தொடரும் பயனிலைகள் யாவை?
13. கலைச்சொல் அறிக.
அ) Classical literature –
ஆ) Epic literature –
14. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
மலை, மாலை
பகுதி – III (மதிப்பெண்கள் 9) பிரிவு – 1
எவையெனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 1×3=3
15. புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்க திண்டும் அமைத்தனர்.திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது. இப்படி காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.
16. கீழ்க்காணும் உரையினைப் படித்து கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க.
தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தில் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். அதனால்தான் ‘விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் அன்றே கூறியுள்ளார்.
அ. விருந்தினர் என்போர் யாவர்?
ஆ. விருந்து குறித்து தொல்காப்பியர் கூறியது யாது?
இ. இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
பிரிவு – 2
எவையெனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 1×3=3
17. முல்லை நிலத்தில் இருந்தும் மருத நிலத்தில் இருந்தும் கிடைக்கும் உணவு
பொருள்கள் யாவை?
18. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு
காட்டுகிறது? பிரிவு – 3
எவையெனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 1×3=3
19. ’கண்ணே கண்ணுறங்கு
காலையில் நீ எழும்பு
மாமழை பெய்கையிலே
பாடினேன் தாலாட்டு
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு’ – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை
எழுதுக.
20. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு – இக்குறளின் பயின்றுவரும் அணியினைச் சுட்டி விளக்கம் தருக.
பகுதி – IV (மதிப்பெண்கள் (10)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 2×5=10
21. ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிபடுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
22. பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக.
பழையசோறு
பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம்வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கள் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கைநிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்த சோறு நிரில் ஊறும். விடிந்த இந்த காலையில் அதன் பெயர் பழையசோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம்போல் குடிப்பது ஒரு வகை. வாழை இலையில் அந்த பழையச் சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்டவைத்த முதல்நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு – அது கிராமத்து உன்னதம்.
”மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து” ….; முக்கூடற்பள்ளு.
23. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பகுதி – V (மதிப்பெண்கள் 16)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 2×8=16
24. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற
விவரித்து எழுதுக.
25.அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதையின் வாயிலாக விளக்குக.
26. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் , விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.