10 ஆம் வகுப்பு முதல் அலகுத்தேர்வு- 50 மதிப்பெண் மாதிரி வினாத்தாள்- அலகு -4

பத்தாம் வகுப்பு  அலகுத்தேர்வு – மாதிரி வினாத்தாள் – இயல் – 4

வகுப்பு = 10                                                                                                      மதிப்பெண்கள்  – 50

                                                                                                                              நேரம் : 1.30 மணி

தமிழ்

I சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                                     1X 10 = 10

1. ஐ . பி. எம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினி

    அ. பெப்பர் ஆ. வாட்சன் இ. வேர்டுஸ்மித் ஈ) ரோபோ

2. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

    அ. துலா ஆ. சீலா இ. குலா ஈ) இலா

3. உனதருளே பார்ப்பன் அடியேனே – யாரிடம் யார் கூறியது?

    அ. குலசேகராழ்வாரிடம் இறைவன்

    ஆ. இறைவனிடம் குலசேகராழ்வார்

    இ. மருத்துவரிடம் நோயாளி

    ஈ. நோயாளியிடம் மருத்துவர்

4. “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது

     அ. பால் வழுவமைதி ஆ. மரபு வழுவமைதி

     இ. திணை வழுவமைதி ஈ. கால வழுவமைதி

5. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்கள்

     அ. 105      ஆ.102       இ. 103     ஈ. 104

6. இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும்

     அ. வழு    ஆ. வழுவமைதி    இ. வழாநிலை   ஈ. மூவிடம்

7. பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

    அ. வானத்தையும் பாட்டையும்  ஆ. வானத்தையும் புகழையும்

    இ. வானத்தையும் பூமியையும்   ஈ. வானத்தையும் பேரொலியையும்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்”

8. இப்பாடலின் ஆசிரியர்

    அ. கீரந்தையார் ஆ. பூதஞ்சேந்தனார் இ. நப்பூதனார் ஈ.குலசேகராழ்வார்

9. பாடலில் உணர்த்தப்படும் கருத்து

   அ. தத்துவக் கருத்து   ஆ. அறிவியல் செய்தி

   இ. நிலையாமை ஈ. அரசியல் அறம்

10. ஊழ் ஊழ் – இலக்கணக்குறிப்பு

    அ. இரட்டைக்கிளவி                            ஆ. பண்புத்தொகை

    இ. அடுக்குத்தொடர்                             ஈ. வினைத்தொகை

II. கீழ்க்காணும் வினாக்களுள் எவையேனும் இரண்டனுக்கு விடையளி 2 x 2=4                                                                                   

11. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

12. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. செயற்கை நுண்ணறிவுக் கருவியான வாட்சன், சில நிமிடங்களில் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுப்பிடித்தது.

ஆ. இயல்பான மொழிநடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளுக்கு வேர்டுஸ்மித் என்று பெயர்.

13. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

14. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர் குறித்து எழுதுக.

III. கீழ்க்காணும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு விடையளி 3X2=6                                                                                                                        

15. கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி தொடர் அமைக்க.

அ. சிறு-சீறு. ஆ. விதி – வீதி

16. கலைச்சொல் தருக.

Biotechnology,

Space Technology

17. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.

( கற்றல், கரு. பூவில் )

அ. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை ———-

ஆ. மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது ———–

18. வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?

19. பகுபத உறுப்பிலக்கணம் தருக. கிளர்ந்த

IV. கீழ்க்காணும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு விடையளி 3X3=9                                 

20. “மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

21.இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

22. வழாநிலை வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

23. அலகிட்டு வாய்பாடு எழுதுக.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

தியற்கை அறிந்து செயல்.

v. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி                                       2X5=10

24. உயிர்கள் தோன்றி நிலைபெற்ற நிகழ்வை பரிபாடல் வழிநின்று கூறுக.

25. தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக்கொண்டிருக்கும் தம்பி; திறன்பேசியிலேயே விளையாடிக்கொண்டிருக்கும் தங்கை; காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்; எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்க்கும் தோழி. இவர்கள் எந்தநேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட வைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியலிடுக.

VI. கீழ்க்காணும் வினாக்களுள் எவையேனும் ஒன்றனுக்கு விடையளி   1X8=8

26. ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஓட்டிச் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

27. “விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்” என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

VII. செய்யுள் வடிவில் விடை தருக                                 1X3=3

28. “வாளால் அறுத்துச் ” எனத் தொடங்கும் பெருமாள் திருமொழிப் பாடல்.

Leave a Comment