10 STD TAMIL I UNIT TEST MODEL QUESTION PAPER FOR UNIT -1
பத்தாம் வகுப்பு – தமிழ்
நேரம் – 1.30 மணி தேர்வு – 1 (இயல் 1 ) மதிப்பெண்கள் 50
பகுதி – I (மதிப்பெண்கள் 8)
- அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 8×1=8
- குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.
1. சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து
வேகவேண்டும் என்று பாடியவர் ———– ஆவார் .
அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) க.சச்சிதானந்தன்
இ) பாரதியார் ஈ) நப்பூதனார்
2. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்
இ) க. அப்பாத்துரையார் ஈ) தமிழழகனார்
3. தமிழழகனாரின் சிறப்புப்பெயர் ———– ஆகும்.
அ) கவிமணி ஆ)மொழிஞாயிறு இ) சந்தக்கவிமணி ஈ) பாவலரேறு
4. சார்பெழுத்துகள் ————— வகைப்படும்
அ) 2 ஆ) 10 இ) 12 ஈ) 18
5. அளபெடை என்பதற்கு ———— என்பது பொருள்.
அ) குறுகி ஒலித்தல் ஆ) நீண்டு ஒலித்தல்
இ) திரிதல் ஈ) ஓசை மாறுபடாது ஒலித்தல்
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
6. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) கனிச்சாறு ஆ) கொய்யாக்கனி இ) சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம்
7. இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) கம்பர் ஆ) இளங்கோவடிகள் இ) கண்ணதாசன் ஈ) பெருஞ்சித்திரனார்.
8. இன்னறும் – இலக்கணக்குறிப்புத் தருக.
அ) எண்ணும்மை ஆ) வினைமுற்ற இ) பெயரெச்சம் ஈ) பண்புத்தொகை
பகுதி – II (மதிப்பெண்கள் 8) பிரிவு -1
எவையெனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 2×2=4
9. விடைக்கேற்ற வினாவினை அமைக்க.
அ. ”நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்கிறார் மாகாக்கவி பாரதியார்.
ஆ. திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழி.
10. தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள் நான்கினை எழுதுக.
11. மண்ணும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடித்தாழ
வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெரும் காப்பியங்களைத் தவிர
எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
பிரிவு -2
எவையெனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க வெண்டும். 2×2=4
12. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. – மேற்கண்ட தொடர்களில் தவறான
தொடரினைச் சுட்டிக்காட்டி, பிழைக்கான காரணத்தை எழுதுக.
13. வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
14. அகராதியைக் கண்டு பொருள் எழுதுக.
அடவி –
பழனம் –
பகுதி – III (மதிப்பெண்கள் 9) பிரிவு – 1
எவையெனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 1×3=3
15. ’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’. – இதுப்போல் இளம் பயிர் வகை ஐந்தின்
பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
16. கீழ்க்காணும் உரையினைப் படித்து கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு
விடையளிக்க.
”தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட்பலச்சொல் வரிசைகள் அவற்றில் இல்லாக் குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்கு உரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள “ என்று திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார் கால்டுவெல் அவர்கள்.
அ) தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளில் எவ்வரிசை சொற்கள் இல்லை?
ஆ) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
இ) இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
பிரிவு – 2
எவையெனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 1×3=3
17. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
18. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.
பிரிவு – 3
எவையெனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 1×3=3
19. வினைமுற்றுறை வினையாலணையும் பெயராக மாற்றிக் தொடர்களை
இணைத்து எழுதுக.
அ) கலையரங்கத்தில் எனக்காக காத்து இருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.
ஆ) ஊட்ட மிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
இ) நேற்று என்னை சந்தித்தார். அவர் என் நண்பர்.
20. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
பகுதி – IV (மதிப்பெண்கள் (10)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 2×5=10
21. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும்
பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு
ஒன்றை உருவாக்குக.
22. மொழிபெயர்க்க.
அ) If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mandela
ஆ) Language is the road map of a culture. It tells you where its people come
from and where they are going – Rita Mae Brown
23. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பகுதி – V (மதிப்பெண்கள் 16)
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 2×8=16
24.தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும்
தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரை குறிப்புகளை எழுதுக. (அல்லது)
25. ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
சூழல் – வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்.
26. குமரிக்கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக்கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்த்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும்அவ்வன்னைக்குச் பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை அணிவித்து சிற்றிலக்கியங்களையெல்லாம் அணியாகப் பூட்டி, அழகு கூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப்புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக் கொண்டு சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை வரைக.