10 STD TAMIL UNIT 1 FREE ONLINE TEST July 20, 2022May 12, 2022 461 Created on January 25, 2022 By barathiraja.r82 10 தமிழ் - இயல் 1 - ONLINE TEST 1 / 32 1. சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் என்று பாடியவர் ----------- ஆவார் . அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) க.சச்சிதானந்தன் இ) பாரதியார் ஈ) நப்பூதனார் 2 / 32 2. பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் என்ன? அ) துரைமாணிக்கம் ஆ) கனகசபை இ) சுப்பையா ஈ) சுப்பிரமணி 3 / 32 3. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல? அ) உலகியல் நூறு ஆ) பாவியக்கொத்து இ) மாங்கனி ஈ) மகபுகுவஞ்சி 4 / 32 4. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல அ) நூறாசிரியம் ஆ) கனிச்சாறு இ) எண்சுவை எண்பது ஈ) குருஞ்சிதிட்டு 5 / 32 5. தென்மொழி, தமிழ்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை ஊட்டியவர்யார்? அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) க.சச்சிதானந்தன் இ) பாரதியார் ஈ) நப்பூதனார் 6 / 32 6. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்? அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) க.சச்சிதானந்தன் இ) பாரதியார் ஈ) நப்பூதனார் 7 / 32 7. தட்டு என்பதற்கு இணையானத் தமிழ்ச்சொல் ----------- ஆகும். அ) தட்டை ஆ) கழி இ) அடி ஈ) கழை 8 / 32 8. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் --------- அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) ஜி.யூ. போப் இ) கால்டுவெல் ஈ) வீரமாமுனிவர் 9 / 32 9. திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, --------- வரிசை,தமிழ்மொழி அல்லாத பிற மொழிகளில் இல்லை. அ) ஒரு பொருள் பல சொல் ஆ) பலபொருள் ஒரு சொல் இ) ஒன்றொழிப் பொதுச்சொல் ஈ) ஓரெழுத்து ஒருமொழி 10 / 32 10.சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்? அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) இரா. இளங்குமரனார் இ) க. அப்பாத்துரையார் ஈ) தமிழழகனார் 11 / 32 11.மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்? அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) தேவநேயப் பாவாணர். இ) க. அப்பாத்துரையார் ஈ) தமிழழகனார் 12 / 32 12.மெத்த அணிகலன்களாக தமிழழகனார் குறிப்பிடும் நூல் ------------ ஆகும். அ) ஐஞ்சிறுகாப்பியங்கள் ஆ) ஐம்பெருங்காப்பியங்கள் இ) சங்க இலக்கியம் ஈ) பக்தி இலக்கியம் 13 / 32 13.தமிழழகனாரின் சிறப்புப்பெயர் ------- ஆகும். அ) கவிமணி ஆ) மொழிஞாயிறு இ) சந்தக்கவிமணி ஈ) பாவலரேறு 14 / 32 14.சண்முக சுந்தரம் என்பது யாருடைய இயற்பெயர்? அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) தேவநேயப் பாவாணார். இ) க. அப்பாத்துரையார் ஈ) தமிழழகனார் 15 / 32 15. சார்பெழுத்துகள் -------------- வகைப்படும் அ) 2 ஆ) 10 இ) 12 ஈ) 18 16 / 32 16.உயிரளபெடை ------------ வகைப்படும். அ) 2 ஆ) 3 இ) 5 ஈ) 6 17 / 32 17.சூடு - இச்சொல் --------- தொழிற்பெயர் ஆகும். அ) தொழிற்பெயர் ஆ) முதனிலைத் தொழிற்பெயர் இ) எதிர்மறைத் தொழிற்பெயர் ஈ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் 18 / 32 18.இவற்றுள் முதனிலைத் தொழிற்பெயரைத் தெரிவு செய்க அ) கெடுதல் ஆ) கெடு இ) கேடு ஈ) செல்லாமை 19 / 32 19.செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிமையான ஓசைக்காக வரும்அளபெடை ------------- அளபெடை ஆகும். அ) இன்னிசை ஆ) சொல்லிசை இ) இசைநிறை ஈ) ஒற்றளபெடை 20 / 32 20.அளபெடை என்பதற்கு ------------ என்பது பொருள். அ) குறுகி ஒலித்தல் ஆ) நீண்டு ஒலித்தல் இ) திரிதல் ஈ) ஓசை மாறுபடாது ஒலித்தல் 21 / 32 21.மொழி -------------- வகைப்படும். அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5 22 / 32 22.ஒற்றளபெடையாக வரும் எழுத்துகளின் எண்ணிக்கை -------------- அ) 8 ஆ) 9 இ) 10 ஈ) 11 23 / 32 23.'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது----- அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும் இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும் ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும் 24 / 32 24.'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். -இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது---- அ) இலையும் சருகும் ஆ)தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும் 25 / 32 25. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.--- அ) எந்+தமிழ்+நா ஆ) எந்த+தமிழ்+நா இ) எம்+தமிழ்+நா ஈ) எந்தம்+தமிழ்+நா 26 / 32 26.'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - இத்தொடர் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே- அ) பாடிய, கேட்டவர் ஆ) பாடல்; பாடிய இ) கேட்டவர் ; பாடிய ஈ) பாடல் ; கேட்டவர் 27 / 32 27.வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ---------- அ) குலை வகை ஆ) மணி வகை இ) கொழுந்து வகை ஈ) இலை வகை 28 / 32 28. குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்களின்அடைமொழிகளின் முறையே--------------- ---------------ஆகும். அ) நல்ல, ஒத்த, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும் ஆ) ஒத்த, நல்ல, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும் இ) ஓங்கு, நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும் ஈ) நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும், ஓங்கு 29 / 32 29. பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய்வாழ்த்து, முந்துற்றோம் ஆகிய நூல்களின் முறையே உள்ள பாடல்கள் ------------ ஆகும். அ) அழகார்ந்த செந்தமிழே, செப்பரிய நின்பெருமை ஆ) செப்பரிய நின்பெருமை, அழகார்ந்த செந்தமிழே இ) முத்தமிழ் துய்ப்பதால், செப்பரிய நின்பெருமை ஈ) முத்தமிழ் துய்ப்பதால், அழகார்ந்த செந்தமிழே 30 / 32 30. தமிழழகனார் பாடிய சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை ------ அ) 10 ஆ) 12 இ) 18 ஈ) 96 31 / 32 31. இந்திய மொழிகளிலிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் அச்சேறிய முதல் மொழி ----- அ) சமஸ்கிருதம் ஆ) சீனம் இ) தெலுங்கு ஈ) தமிழ் 32 / 32 32. போர்ச்சுகீசு நாட்டில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பெட்ட கார்டிலா நூல் ----- எழுத்துருவில் அச்சிடப்பட்டது. அ) பாலி ஆ) பிராகிருதம் இ) வட்டெழுது ஈ) ரோமன் Your score is The average score is 62% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz WhatsApp Facebook Twitter Messenger Email Related
Janani G h s school velacheri
I am janani g h s school velacheri