10 STD TAMIL LESSON PLAN FOR AUGUST 1ST WEEK (01.08.22 TO 05.08.22)

10 STD TAMIL LESSON PLAN FOR AUGUST 1ST WEEK (01.08.22 TO 05.08.22)

தலைப்பு :

  • மலைபடுகடாம்
  • கோபல்லபுரத்து மக்கள்
  • தொகாநிலைத் தொடர்கள்
  • திருக்குறள்

துணைக்கருவிகள் :  

  • விளக்கப்படம்
  • மடிக்கணினி

நோக்கம்  : 

  • கலைகளில் சிறந்து விளங்கிய பண்டைத்தமிழரை மன்னர்களும் வள்ளல்களும் விருந்தோம்பியும் பரிசளித்தும் போற்றியதை அறிதல்.
  • சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறைகளை வட்டார இலக்கியங்களின் நடையில் புரிந்து படித்தல்.
  • மொழிப் பயன்பாட்டில் தொகாநிலைத் தொடர்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.
  • திருக்குறளின் வழியே வாழ்வியலைக் கற்றுக் கொள்ளுதல்.

உணர்தல்  : 

  • கூத்தர், பாணர், விறலியர் போன்ற கலைஞர்கள் ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறன்களை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்துப் பரிசு பெற்றதை உணர்தல்.
  • பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல் என்பதை உணர்தல்.
  • சொற்றொடர் அமைப்பில் தொகாநிலைத் தொடர்கள் பற்றி உணர்தல்.
  • மனித வாழ்வுக்கு வழிகாட்டும் திருக்குறளின் அறக்கருத்துகளைப் படித்துணர்தல்.

பாட அறிமுகம்  : 

  • விருந்தினராக உங்கள் வீட்டுக்கு வருபவருக்கு நீங்கள் எத்தகைய விருந்தினை அளிப்பீர்கள்? – என மாணவர்களிடம் கேட்டல்.
  • நீங்கள் யாருக்கேனும் பசியாற்றிய அனுபவம் உண்டா ?
  • உணவு உண்ணும் நேரத்தில் நண்பரோ, உறவினரோ வந்தால் என்ன செய்வீர்கள்?  என மாணவர்களிடம் கேட்டல்.
  • ‘காற்று வீசியது’ என்னும் தொடரில் இடம்பெறும் எழுவாயையும் பயனிலையையும் குறிப்பிடுக என்று மாணவர்களிடம் வினா எழுப்புதல்.
  • திருக்குறளை இயற்றியது யார்?
  • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை? – என்பன போன்ற வினாக்களை மாணாக்கரிடம் எழுப்புதல்.

விதைநெல்  : 

  • பெருங்கௌசிகனாரின் ‘மலைபடுகடாம்’ பாடலை விளக்கிக் கூறுதல். பண்டைத் தமிழ்க் கலைஞர்கள் உபசரிக்கப்பட்டதைப் பற்றி எடுத்துரைத்தல்.
  • இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி கி.ராஜநாராயணனால் படைக்கப்பட்ட ‘கோபல்லபுரத்து மக்கள்’ கதையினை விளக்கிக் கூறுதல்.
  • தொகாநிலைத்தொடரின் வகைகளை அறிதல்.

விதைத்தல் : 

  • மலைபடுகடாம் பாடலை ஏற்ற இறக்கத்துடன் படித்தல்.
  • இசையுடன் பாடுதல்.
  • கூத்தர், பாணர், விறலியர் போன்ற பண்டைத் தமிழ்க் கலைஞர்களைப் பற்றிய காணொலிகளைக் காட்டுதல்.
  • விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.
  • கோபல்லபுரத்து மக்கள் கதையினை உரிய பாத்திரங்களுக்கேற்ப வாசித்துக் காட்டல்.
  • கதையினைக் கூறி மாணவரையும் கூறச் செய்தல்.
  • கரிசல் மண்ணினைச் சார்ந்த காணொலிகளைக் காட்டல். கி.ராஜநாராயணின் ‘கரிசல் இலக்கியம்’ பற்றிய காணொலிகளைக் காட்டல்.
  • வட்டார வழக்குச் சொற்களை அறிதல்.
  • விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.
  • பொருத்தட்டைகளைப் பயன்படுத்துதல்.
  • தொகாநிலைத்தொடர் வகைகளைச் சான்றுகளுடன் எடுத்துக் கூறுல். விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.
  • ஒழுக்கமுடைமை.மெய் உணர்தல். பெரியாரைத்துணைக்கோடல், கொடுங்கோன்மை, கண்ணோட்டம். ஆள்வினை உடைமை, நன்றிஇல் செல்வம் ஆகிய அதிகாரங்களிலிருந்து கொடுக்கப் பட்டுள்ள குறட்பாக்கள் வாயிலாக வாழ்வியலை அறிதல்.
  • குறட்பாக்களைப் படிக்கவும், பாடவும் செய்தல்.
  • குறட்பாக்களை இசையுடன் கேட்கவும். உடன் பாடவும் செய்தல். கருத்தட்டைகளின் வாயிலாக விளக்குதல்.
  • விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.

கருத்துப்புனைவு  :  மலைபடுகடாம்

கருத்துப்புனைவு  :  கோபல்லபுரத்து மக்கள்

கருத்துப்புனைவு  : தொகாநிலைத் தொடர்கள்

கருத்துப்புனைவு  : திருக்குறள்

கருத்துத்தூவானம்  :  மலைபடுகடாம்

  • நன்னனிடம் பரிசில் பெறுவதற்குப் பரிசில் பெற்ற கூத்தர், மற்ற கூத்தரை ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைகிறது.
  • பகலில் இளைப்பாறி, இரவில் சேர்ந்து தங்குங்கள்.
  • கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள். பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றி உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.
  • உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள்ளும் உரிமையுடன் நுழையுங்கள்.
  • உறவினர் போலவே பழகும் அவர்கள் இனிய சொற்களைக் கூறுவர். நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.

கருத்துத்தூவானம்  : கோபல்லபுரத்து மக்கள்

  • சுப்பையாவின் புஞ்சையில் அருகு எடுத்தல் – பசியால் வாடி இளைத்துப் போன இளைஞன் ஒருவனை அன்னமய்யா காணுதல் – சிரட்டையில் நீத்துப்பாகத்தை வடித்துக் கொடுத்தல் – வேப்பமரத்து நிழலில் இளைஞன் படுத்து உறங்கல் – இளைஞனுக்கும் அன்னமய்யாவுக்கும் மேலான மனநிறைவு – இளைஞனின் பெயர் பரமேஸ்வரன் – தற்போதைய பெயர் மணி – அருகெடுத்தவர்களின் உபசரிப்பு – இடது கையில் கம்மஞ்சோற்றுப் பள்ளத்தில் துவையல் – உண்டவுடன் மண்ணால் கைகளைச் சுத்தப்படுத்துதல் – சாப்பிட்டு முடித்தவர்கள் ஊர்க்கதைகள் பேசுதல் – மணி திரும்பவும் படுத்து அமைதியாகக் கண்களை மூடல் – அன்னமிட்டவர் அன்னமய்யாதான்.

கருத்துத்தூவானம்  :  தொகாநிலைத் தொடர்கள்

  • ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர். தொகாநிலைத்தொடர் ஒன்பது வகைப்படும்.
  • எழுவாய்த்தொடர் – இனியன்கவிஞர்
  • விளித்தொடர் நண்பா எழுது
  • வினைமுற்றுத் தொடர் – பாடினாள் கண்ணகி
  • பெயரெச்சத் தொடர் – கேட்ட பாடல்
  • வினையெச்சத் தொடர் – பாடி மகிழ்ந்தனர்
  • வேற்றுமைத் தொடர் – கட்டுரையைப் படித்தாள்
  • இடைச்சொல் தொடர் – மற்றொன்று
  • உரிச்சொல் தொடர் – சாலச்சிறந்தது
  • அடுக்குத் தொடர்  – வருக! வருக! வருக!

கருத்துத்தூவானம்  : திருக்குறள்

ஒழுக்கமுடைமை:

  • ஒழுக்கம் எல்லாச் சிறப்பையும் தருவது: உயிரினும் மேலானது.
  • ஒழுக்கமாக வாழ்பவருக்கு மேன்மை ; தவறுபவருக்குப் பழி.
  • ஒத்து வாழக் கல்லாதவர். பல கற்றவராயினும் அறிவில்லாதவரே.

மெய் உணர்தல்:

  • எப்பொருளாயினும் உண்மைப் பொருள் காண்பதே அறிவு.
  • ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றும் அழிந்தால் துன்பமில்லை

பெரியாரைத் துணைக்கோடல்:

  • கிடைத்தற்கரிய பெரும்பேறு பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்வது. இடித்துரைக்கும் பெரியாரைத் துணையாகக் கொள்ளாத மன்னன். பகைவன் இன்றியும் தானே கெடுவான்.

கொடுங்கோன்மை:

  • அதிகாரமிக்க அரசன் வரி விதிப்பது, ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது.

கண்ணோட்டம்:

  • இரக்கமில்லாத கண்களால் பயனில்லை.
  • இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை.

ஆள்வினை உடைமை:

  • முயற்சி செய்தால் செல்வம். இல்லையேல் வறுமை.
  • அறிய வேண்டியதை அறிந்து முயலாததே இழிவு.

நன்றி இல் செல்வம்:

  • அடுத்தவர்க்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவரது செல்வத்தால் பயனில்லை.
  • பிறருக்கு உதவாதவரின் செல்வம் ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்ததுக்கு நிகர்.

விளைச்சல்  : 

  • ஆற்றுப்படை – விளக்கம் தருக.
  • கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
  • உரிச்சொற்றொடருக்குச் சான்று தருக.
  • அடுக்குத் தொடர் – விளக்குக.
  • உயிரினும் ஓம்பப்படுவது எது?
  • உவமையணியை விளக்குக.

தொடர்பணி  :   

  • உணவு, விருந்து குறித்த பழமொழிகளைத் திரட்டி, அவை சார்ந்த நிகழ்வுகளை எடுத்துரைக்க.
  • அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
  • சங்கிலிப்பிணைப்பு பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயலையும் விருந்தினருக்கு உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலையும் ஒப்பிட்டுப் பேசுக.
  • நீங்கள் படித்த செய்தித்தாள்களில் உள்ள தொகாநிலைத் தொடர்களைத் தொகுத்து வருக.
  • திருக்குறள் பற்றிய அறிஞர்களின் கருத்துகளைத் தொகுத்தெழுதுக.

Leave a Comment