தலைப்பு:
- மொழிபெயர்ப்புக் கல்வி (22.08.22 TO 24.08.22)
- I st Mit term test – (25.08.22 TO 26.08.22)
துணைக்கருவிகள் :
- வரைபடம்
- மின்னட்டை
- பொருத்தட்டை
நோக்கம் :
- மொழிபெயர்ப்பின் தேவையையும் நுட்பத்தையும் அறிதல் மொழிகளுக்கிடையில் உள்ள வேற்றுமைகளை விட்டு ஒற்றுமைப்படுத்த மொழிபெயர்ப்பு உதவுகிறது.
கற்றல் திறன்கள் :
- புதிய சொற்களை அடிக்கோடிடுதல்
- அகராதிகளைக் கொண்டு பொருள் அறிதல்
பாட அறிமுகம்:
- TELEVISION TELEPHONE இச்சொற்களுக்குத் தமிழாக்கம் என்ன?” என வினவுதல்.
மனவரைபடம் :

தொகுத்தல் :
- சாகித்ய அகாதெமி, வால்காவிலிருந்து கங்கை வரை பற்றிய செய்திகளைத் தொகுத்துரைத்தல்,
விளக்குதல் :
- தொல்காப்பியத்தில் `மொழிபெயர்த்தல்’ என்னும் தொடர் – மொழிபெயர்ப்பின் தேவை. கல்வியாக ஆக்குவதால் அனைத்துலக அறிவையும் பெறுதல் – பிறநாட்டு இலக்கியம். பண்பாடு, கலை போன்றவற்றை அறிதல், இலக்கிய இறக்குமதி – ஷேக்ஸ்பியர், தாகூரின் படைப்புகள். செம்மையான, திருத்தமான மொழிபெயர்ப்பு- பயன்கள், பல்துறைவளர்ச்சி – மொழிவளர்ச்சி ஆகிய செய்திகளை விவரித்தல்
வலுவூட்டல்:
- ‘மொழிபெயர்ப்புக் கல்வி’ பாடத்தின் வழியே பிறமொழி இலக்கியங்களின் சுவைகளை அறிதல்,
குறைதீர் கற்பித்தல் :
- மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு புரியாத பகுதிகளை மீண்டும் விளக்குதல்
கற்றல் விளைவு:
- கொடுக்கல் வாங்கலாக அறிவும் உணர்வும் அனைத்து மொழிகளிலும் பரவ மொழிபெயர்ப்பு துணையாவதை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
மதிப்பீடு :
- தமிழ், ஆங்கிலம் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழி எது ? ஏன்?
- மொழிபெயர்ப்பின் பயன்களை விளக்குக.
தொடர்பணி :
- மொழிபெயர்ப்புச் சிறுகதை ஒன்றைப் படித்து அதன் கதைச்சுருக்கத்தை வகுப்பில் கூறுக. மொழிபெயர்ப்பு மென்பொருள்கள் பற்றி அறிமுகம் செய்தல்