10 STD TAMIL LESSON PLAN – JULY 1 ST WEEK (04.07.22 TO 08.07.2022)

10 – ஆம் வகுப்பு – தமிழ் –  பாடக்குறிப்பு – ஜுலை முதல் வாரம் (04.07.22 முதல் 8.07.22 வரை ) 

இயல் – 1. தலைப்பு

  1. இரட்டுற மொழிதல்
  2. உரைநடையின் அணிநலன்கள்,
  3. எழுத்து சொல்

விளைவு

  • இயற்கைக்கு அமைந்துள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு என்பதை அறிதல்.
  • சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரையுள்ள நயங்களை எல்லாம் சேர்த்து உரைநடையின் அணிநலன்களில் கண்டுகளித்தல்
  • மொழியைப் பிழையின்றில் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கனம் என்பதை அறிதல்,

உணர்தல்

  • தமிழ் கடலோடு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் தமிழின் பெருமையை உணர்தல்.
  • தமிழ் இலக்கிய வடிவம் மாற்றம் – தற்கால உரைநடையிலும் உத்திகளைக் கையாளும் சிறப்புகள் பற்றி அறிதல்,
  • மூவகை  மொழிகள் பற்றி அறிதல்

முன்னறிவு

  • ‘இரட்டுற மொழிதல்’, ‘சிலேடை’ என்றால் என்ன? என மாணவர்களிடம் கேட்டல்.
  • ‘தமிழ்த் தென்றல் என அழைக்கப் பெறுபவர் யார்?’ என மாணவர்களிடம் கேட்டல்,
  • ‘வைகை’ ‘பலகை’ – இச்சொற்களில் அமையும் இரண்டு பொருள்களைப் பற்றி விளக்கம் கேட்டல்

விதைநெல்

  • தமிழழகனாரின் பாடல் வழியே தமிழ் கடலோடு ஒத்திருத்தலை எடுத்துரைத்தல்.
  • எழில் முதல்வன் எழுதிய ‘புதிய உரைநடை’ எனும் நூலில் உள்ள ‘உரைநடையின் அணிகலன்கள்’ எனும் கட்டுரை வழி தற்கால உரைநடைச் செழுமை பற்றி அறிதல்,
  • அளபெடை, மூவகை மொழிகள், தொழிற்பெயர் பற்றி அறிதல்.

விதைத்தல் – இரட்டுற மொழிதல்

  • ‘ஆழிக்கு இணை’ பாடலை ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டல்.
  • பாடலை இனிய ஓசையுடன் பாடுதல்.
  • தமிழழகனார் பற்றிய காணொலிகளைக் காட்டுதல்.
  • சொற்களைப் பகுத்தும் தொகுத்தும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டல். விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.

விதைத்தல் – உரைநடையின் அணிநலன்கள்

  • இணையத் தமிழனும் சங்கப் புலவரும் சந்தித்து உரையாடுகின்றனர்
  • சங்கப் புலவரிடம் இக்கால உரைநடையில் பயன்படுத்தப்படும் உத்திகளை விவரிக்கிறான் இணையத் தமிழன்
  • நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலரில் உவமை
  • அறிஞர் அண்ணாவின் உரைநடை வழி உருவகம்
  • வ. ராமசாமி எழுத்தில் இணை ஒப்பு (எடுத்துக் காட்டு உவமையணி) திரு.வி.க, வின் உரைநடையில் இலக்கணை’ (உயிரற்ற பொருள்களுடன் பேசும் கற்பனை)
  • இரா. பி.சேதுவின் தமிழின்பம்’ நூலில் எதுகையும் மோனையும் பயன்படுத்தப்பட்ட முறை
  • மு.வரதராசனாரின் உரைநடை
  • பாரதியின் உரைநடை ஆகியவை பற்றி விவரித்தல்,

விதைத்தல் – எழுத்து , சொல்

  • செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய உயிர் நெட்டெழுத்துகள் நீண்டு ஒலிப்பது உயிரளபெடை. செய்யுளிசை  அளபெடை, சொல்லிசை அளபெடை, இன்னிசை அளபெடை, தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி , தொழிற்பெயர், வினையாலணையும் பெயர், ஆகியவற்றைச் சான்றுகளுடன் விளக்குதல்.

கருத்துப் புனைவு – உரைநடையின் அணிநலன்கள்,

கருத்துப் புனைவு – எழுத்து சொல்

கருத்துத் தூவானம் :

  • உரைநடையில் முரன்படு மெய்ம்மை – உணர்ச்சி வெளிப்பாடு பற்றித் தொடுத்துரைத்தல்.
  • முதனிலைத் தொழிற்பெயர், முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் ஆகியவற்றைத் தொகுத்துரைத்தல்

விளைச்சல்:

  • எதிரிணை இசைவு’ என்றால் என்றால் என்ன ?
  • அறிஞர் அண்ணாவின் உரைநடை நயத்தை விளக்குக ?
  • உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
  • மொழி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
  • எதிர்மறைத் தொழிற்பெயருக்குச் சான்று தருக.

 சங்கிலிப் பிணைப்பு:

  • நீங்கள் படித்தவற்றுள் நினைவில் நீங்கா இடம்பெற்ற இலக்கியத்  தொடர்கள் நயங்களை எழுதுக ?
  • தேன் நூல் பை, மலர் வா – இத்தனிமொழிகளுடன் சொற்களை இணைத்து  தொடர்மொழியாக்குக ?
  • கான், சிரி, படி, தடு – வினை அடிகளை  விகுதிகளுடன் இணைத்துத்  தொழிற்பெயர்களை உருவாக்குக ?

Leave a Comment