10 ஆம் வகுப்பு – தமிழ்
பாடதிட்டக் குறிப்பேடு
(26.06.23 TO 30.06.2023)– ஜூன் நான்காம் வாரம்
தமிழ் இயல் : 1 – உரைநடை உலகம்
தலைப்பு:
- தமிழ்ச்சொல் வளம்
விளைவு :
- பிற மொழிகளில் இல்லாத சொல் வளம் தமிழில் உண்டு என்பதை அறிதல்,
உணர்தல் :
- தமிழ்ச்சொல் வளம் பலதுறைகளில் சிறப்பாக உள்ளது .
- இங்குப் பயிர்வகைச் சொற்களைப் பற்றி அறிதல்,
முன்னறிவு:
- ‘அரும்பு’ என்றால் என்ன ? , காய்ந்த இலையை எவ்வாறு குறிப்பிடுவோம் ? என மாணவர்களிடம் கேட்டல்,
விதைநெல்:
- மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் ‘ சொல்லாய்வுக் கட்டுரைகள்’ நூலில் உள்ள ‘தமிழ்ச்சொல் வளம்’ என்னும் கட்டுரைச் செய்திகள் .
விதைத்தல் :
- எந்த மொழிக்கும் இல்லாத தனிச் சிறப்பு தமிழுக்கு உண்டு. அதுவே தமிழ்ச் சொல் வளம் .
- பயிர் வகைச் சார்ந்த சொல்லாக்கம் தமிழரின் நுண்ணறிவைக் காட்டுகிறது.
- பயிரின் அடி வகை, கிளைப் பிரிவுகள், காய்ந்த அடியும் கிளையும் பெயர்பெறுதல், இலை பூவின் நிலைகள், கொழுந்து வகை, பிஞ்சு வகை, குலை வகை, கெட்டுப்போன காய்கனி வகை, பழத்தோல் உகை, மணி வகை, இளம் பயிர் வகை எனத் தாவரங்களின் பல்வேறு நிலை சார்ந்த சொல் வளத்தை விளக்குதல்,
கருத்துப் புனைவு :

கருத்துத் தூவானம் :
- நாட்டின் வளத்தால் நாகரிகம் நிறைந்த தமிழர் என்பதை அறிதல்.
- ஒவ்வொரு பொருளையும் ஆராய்ந்து நுண்பாகுபாடு செய்து சொற்களை அமைக்கும் மதி நுட்பத்தை விளக்குதல்.
விளைச்சல் :
- வேர்க்கடலை. மிளகாய் அதை, மாங்கொட்டை ஆகிய குறிக்கும் பயிர் வகை பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்களை எடுதுக.
- இளம் பயிர் வகைச் சொற்களை விளக்குக.
சங்கிலிப் பிணைப்பு.
- தமிழர் உறவுமுறைச் சார்ந்த சொல் வளத்தைப் பட்டியலிடுக,
- கணினி, இணையம் சார்ந்த தமிழரின் சொல்லாக்கத்தை விளக்கிக் கட்டுரை எழுதுக .