1,311 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் நீக்கம்!

1,311 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் நீக்கம்!

     அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 ஆண்டுகளாக பணியாற்றிய 1,311 விரிவுரையாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

     எம்.இ., மற்றும் எம்.எஸ்சி. முடித்த பட்டதாரிகள் மாநிலம் முழுதும் இயங்கும் 52 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு நிறுவனங்களில் பல்வேறு கட்டங்களில் பகுதி நேர விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். இதில் பகுதி நேர விரிவுரையாளர்களாக 2500 பேர் பணிபுரிந்தனர்.

      இவர்களில் முதுகலை, ஆராய்ச்சி படிப்பு, பி.எட் போன்ற கூடுதல் கல்வித் தகுதி பெற்ற 1,311 பேர் தேர்வு செய்யப்பட்டு பகுதி நேர ஆசிரியர்களாக இருந்து முழுநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆட்சியின்போது 2019 நவம்பரில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர்களுக்கு மாதம் 15,000 ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

டிஸ்மிஸ்

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் கடந்த வாரம் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,024 பேர் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நிரந்தரப் பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி கமிஷனர், லட்சுமி பிரியா அனுப்பிய சுற்றறிக்கையில், ‘இனி பகுதி நேர மற்றும் பகுதி நேர விரிவுரையாளர்களை பணியமர்த்தக் கூடாது. புதிய ஆட்கள் தேவை என்றால் யாரையும் நியமிக்கக் கூடாது. தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்துக்கு கடிதம் அனுப்ப வேண்டும்; இயக்குனரகம் ஆய்வு செய்யும்,” என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment