ஐந்து நாட்கள் பயிற்சி முகாமில் நடத்தப்பட்ட சதுரங்க போட்டிகளில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த மூன்று மாணவியர், மூன்று மாணவர்கள் என ஆறு பேர் வெற்றி பெற்று அசத்தினர்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 38 மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயலும் மாணவர் களுக்கு, வட்டார அளவி லான சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத் தப்பட்டு, மொத்தம் 76 மாணவியர் உட்பட, 152 மாணவர்கள் முதல் இரண்டு இடங்களை வென்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, சென்னை செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியில், ஐந்து நாட்கள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
முகாமில், சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்கள் குறித்து பயிற்சி அளிக் கப்பட்டது. இறுதி நாளான நேற்று, 152 மாணவர்க ளுக்கு சதுரங்கப் போட்டி கள் நடத்தப்பட்டன.
மொத்தம் ஆறு சுற்றுகள் வீதம், ‘லீக்’முறையில்போட்டிகள் நடத்தப்பட்டன. முடிவில், சிறுவர்களில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மிதுன் முதலிடத்தையும்,தேனி ஸ்ரீராம் இரண்டாமிடத்தையும், வேலுார் சாம் எடிடியா மூன்றாம் இடத் தையும் வென்றனர்.
சிறுமியரில் கிருஷ்ணகிரி மாவட்டம் தாருனிகா முதலிடத்தையும், திருச்சி ஷிபா இரண்டாமிடத்தையும், சோலையம்மாள் மதுரை மூன்றாம் இடத்தையும்வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, நாட்டு நலப்பணித் திட்டத்தின் இணை இயக்குனர் அமுதவல்லி பரிசுகளை வழங்கினார். செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி நிறு வன தலைவர் பாபு மனோகரன், மாணவர்களை பாராட்டினார்.