6 STD TAMIL LESSON PLAN FOR AUGUST 1ST WEEK (01.08.22 TO 05.08.22)

6 STD TAMIL LESSON PLAN FOR AUGUST 1ST WEEK (01.08.22 TO 05.08.22)

தலைப்பு :

  • கிழவனும் கடலும்
  • முதலெழுத்தும் சார்பெழுத்தும்
  • திருக்குறள்

பாடத்தின் தன்மை :

  • கடலில் மீன் பிடிக் காட்சி செய்திகளை விளக்குவதால், மைசிந்தும் வகையைச் சார்ந்தது.
  • தமிழில் உள்ள எழுத்துகளின் வகைகள் பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மரக்கிளை வகையைச் சார்ந்தது.
  • அறநெறியினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

  • கிழவனும் கடலும் கதைக் கருத்துகளைக் குழுவாககப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.
  • எழுத்துகளின் வகைகள் கருத்துகளைக் குழுவாகப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.
  • ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.

துணைக் கருவிகள் :

  • காட்சிப்படம்
  • மின்னட்டைகள்
  • கப்பல் மாதிரி உருவம்
  • திருக்குறள் – நூல் 
  • விளக்கப்படம்
  • ஒலிபெருக்கி

பாட அறிமுகம் :

  • கடல் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
  • எழுத்துகளின்வகைகள் யாவை? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
  • வள்ளுவர் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல் :

  • கிழவனும் கடலும் , முதலெழுத்தும் சார்பெழுத்தும், திருக்குறள் , பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள் :

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல் மையக்கருத்தை அறிதல்

மனவரைபடம் : கிழவனும் கடலும்

மனவரைபடம் : முதலெழுத்தும் சார்பெழுத்தும்

மனவரைபடம் : திருக்குறள்

தொகுத்தல் : கிழவனும் கடலும்

  • சாண்டியாகோ வயது முதிர்ந்த மீனவர் – அவரிடம் மீன்பிடிக்கக் கற்கும் மாணவன் மனோலின் – 84 நாட்கள் ஆகியும் மீன் ஏதும் கிடைக்கவில்லை –  
  • முதல் 40 நாட்கள் மனோலின் உதவினான் – பெற்றோர் வேறு படகிற்கு அனுப்பினர் – 85 வது நாள் பெரிய போராட்டம் மீன் மாட்டுகின்றது – சுறாக்கள் அவற்றை உண்ண முயற்சிக்கின்றது –  எப்படியோ காப்பாற்றி கரை சேர மீன் முள் மட்டும் இருப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைகின்றார் –  உன் முயற்சி வென்றது என்றான் மனோலின், சாண்டியோவுக்கு ஆறுதலாக இருந்தது.

தொகுத்தல் : முதலெழுத்தும் சார்பெழுத்தும்

  • உயிர் எழுத்து – 12 மெய்யெழுத்து – 18 ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் ஆகும் – பிற எழுத்துகள் தோன்றவும் இயங்கவும் முதற்காரணமானது  -முதலெழுத்துகளைச் சார்ந்து தோன்றும் எழுத்துகள் சார்பெழுத்து ஆகும். உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம். ஆய்தக்குறுக்கம். மகரக்குறுக்கம், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகிய பத்தும் சார்பெழுத்தின் வகையாகும்.

தொகுத்தல் : திருக்குறள்

  • அகரம், ஆதிபகவன் முதல், – மழை இல்லை உயிர்கள் பசி, – கெடுப்பதும் காப்பதும் மழை – செயற்கு அரிய செய்வர் பெரியர்,செய்யார் சிறியர்.தம்மை விட மக்கள் அறிவுடையர் என்பதே மகிழ்ச்சி – பெற்றதை விட மகன் சான்றோன் என்பதே மகிழ்ச்சி, – எல்லாப்பொருள்- அன்பிலார், தம்முயிரும் பிறர் அன்புடையார். அன்புள்ளது உயிர் உடம்பு அன்பில்லாதது எலும்பு. பணிவு இன் சொல் அணி. இன்னாச் சொல் காய், இனிய சொல் கனி போன்றது.

வழங்குதல் :

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

 வலுவூட்டல் :

  • மடிகணினி மூலம் தமிழின் சிறப்புகளைக் காட்டி , பாடத்தை வலுவூட்டுதல்,
  • மடிகணினி மூலம் இலக்கணச்  சிறப்புகளைப் பாடலாகக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
  • மடிகணினி அல்லது தொலைக்காட்சி மூலம் பாடல் காட்சிகளைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.

மதிப்பீடு :

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்,

வினாக்கள்:

  • சாண்டியாயோ என்பவர் யார்?
  • மனோலின் என்பவர் யார்?
  • மீன் கிடைக்க எத்தனை நாட்கள் ஆயின?
  • முதலெழுத்து என்றால் என்ன?
  • சார்பெழுத்து என்றால் என்ன?
  • சார்பெழுத்து எத்தனை வகைப்படும்?
  • ஒருவற்கு சிறந்த அணி எது?
  • இன்சொல் எதனைப் போன்றது?
  • என்பு தோல் போர்த்த உடம்பு கொண்டோர் யாவர்?

குறைதீர் கற்பித்தல் :

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு கூடுதல் வாசித்தல் பயிற்சியினையும் பாடப்பொருளின் சுருக்கத்தையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்குத் சார்பு எழுத்துகளின் வகைகளை மீண்டும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.

எழுதுதல் :

  • சொல்வதை எழுதுதல்
  • பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.

கற்றல் விளைவுகள் :

  • முயற்சித் திருவினையாக்கும் என்பதனை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
  • சார்பெழுத்துகளின் வகைகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
  • திருக்குறளின் பாடல் வழி அறநெறிக் கருத்துகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி :

  • கப்பல் , மீன்கள் போன்ற உருவங்களைச் ஒன்றினைச் செய்து வரச் சொல்லுதல்.
  • சார்பெழுத்துகளின் சான்றுகளை எழுதி வரச் சொல்லுதல்.
  • கடவுள் வாழ்த்து அதிகாரத்திலுள்ள பிற குறட்பாக்களை அறிந்து எழுதி வரச் சொல்லல்.

Leave a Comment