தலைப்பு :
- மொழி முதல், இறுதி எழுத்துகள் (22.08.22 TO 24.08.22)
- I st Mit term test (25.08.22 TO 26.08.22)
பாடத்தின் தன்மை :
- தமிழில் உள்ள மொழி முதல் மற்றும் இறுதி எழுத்துகளின் வகைகள் பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மரக்கிளை வகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
- மொழி முதல் மற்றும் இறுதி எழுத்துகளின் வகைகளைக் குழுவாகப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.
துணைக் கருவிகள் :
- வரைபடம்
- மின்னட்டைகள்
- பொருத்தட்டை
பாட அறிமுகம் :
- மொழி என்றால் என்ன? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல் :
- ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
கற்றல் திறன்கள் :
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- சான்றுகள் அறிதல்
மனவரைபடம் :
தொகுத்தல் :
மொழி முதல் எழுத்துகள்:
- உயிர் 12 க,ச,த,ப,ம உள்ள அனைத்து உயிர்மெய், ங,ஞ,ய,வ ஆகியவற்றில் சில உயிர்மெய், ஞ,ஞா.ஞெ,ஞொ ஆகிய உயிர்மெய், ய,யா,யு,யூ,யோ,யெள
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்:
- மெய்: 18, ஆய்தம் ங,ஞ,ய,வ ஆகியவற்றில் சில
இறுதி எழுத்துகள் :
- உயிர் 12ம் மெய்யுடன் உயிர்மெய்யாக ஞ,ண்,ந்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ன் ஆகிய 11 மெய்யும் இறுதி எழுத்துகள்
மொழி இறுதியாகாத எழுத்துகள் :
- உயிர் எழுத்துகள வாராது. ஆய்தம் வராது. க்,ச்,ங்,ட்,த்,ப்,ற் ஆகிய 7 மெய் வராது. ங கர உயிர்மெய் வரிசை வராது.
வழங்குதல் :
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல் :
- மடிகணினி மூலம் இலக்கணச் ச சிறப்புகளைப் பாடலாகக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
மதிப்பீடு :
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.
வினாக்கள்:
- மொழிக்கு முதல் வராத தனி எழுத்து எது?
- மெய்யெழுத்துகள் மொழி முதல் வருமா?
உயர் சிந்தனை வினா (HOT)
- க என்ற எழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் சிலவற்றைக் கூறுக. மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வராத ஒரே எழுத்து எது?
எளிய சிந்தனை வினா (LOT)
- மெய்யெழுத்துகள் மொழிக்கு முதலில் வருமா?
- மொழி இறுதி மெய்கள் எவை?
குறைதீர் கற்பித்தல் :
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்குத் சார்பு எழுத்துகளின் வகைகளை மீண்டும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
எழுதுதல் :
- சொல்வதை எழுதுதல்,
- பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.
கற்றல் விளைவுகள் :
- மொழி முதல் இறுதி எழுத்துகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்பணி :
- மொழி முதல் இறுதி எழுத்துகளைப் பட்டியலாக எழுதி வரச் சொல்லுதல்.