6 – ஆம் வகுப்பு – தமிழ் – பாடக்குறிப்பு – ஜுலை முதல் வாரம் (04.07.22 முதல் 8.07.22 வரை )
இயல் – 1 தலைப்பு
- வளர்தமிழ்
- கனவு பலித்தது (கடிதம்)
பாடத்தின் தன்மை :
- தமிழ் பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மைசிந்தும் வகையைச்
- சார்ந்தது.
- தமிழில் உள்ள அறிவியல் பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மைசிந்தும் வகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
- உரைப்பகுதியைக் குழுவாகப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்,
- கடிதக் கருத்துகளைக் குழுவாககப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்,
துணைக் கருவிகள் :
- தமிழ் இலக்கிய வரலாறு நூல்
- விளக்கப்படம்
- மின்னட்டைகள்
- பொருத்தட்டை
பாட அறிமுகம் :
- தமிழின் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
- கடிதம் எப்படி எழுத வேண்டும் என்பது குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல் :
- உரைப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
- கடிதச் சுருக்கத்தினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
கற்றல் திறன்கள் :
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
- மையக்கருத்தை அறிதல்
மனவரைபடம் : வளர்தமிழ்

மனவரைபடம் : கனவு பலித்தது (கடிதம்)

தொகுத்தல் : வளர்தமிழ்
- தொல்காப்பியம் தமிழில் கிடைக்கும் பழமையான நூல்,
- இலக்கியத்திற்குப் பிறகே இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும் அதனால் தமிழ் மூத்த மொழி.
- திணை இரண்டு வகைப்படும். அவை உயர் திணை , அஃறிணை, உயர்திணையின் எதிர் திணை தாழ்திணை ஆகும். ஆனால், அவ்வாறு கூறாது அஃறிணை கூறியிருப்பது தமிழ்ச்சொற்களின் பொருட்சிறப்பு ஆகும். செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை ஆகிய
- ஓசையினைக் கொண்டது.எதுகை, மோனை, இயைபு ஆகிய சொல் இனிமையால் இனிய மொழி ஆனது.
- இளமை, எளிமை,வளமை ஆகிய திறன்களைக் கொண்டது தமிழ் மொழி. செம்மொழிகளுள் ஒன்று.இலக்கிய இலக்கண வளம் நிரம்பியது.
தொகுத்தல் : கனவு பலித்தது (கடிதம்)
- சாதனைக்கு மொழி தடையில்லை. தமிழ் இலக்கியங்களில்அறிவியல் சிந்தனை மிகுதிதியாக உள்ளன.
- தொல்காப்பியர் நிலம்,நீர், காற்று,தீ , வானம் என ஐம்பூதம் பற்றிக் கூறுகின்றார்.
- ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களை வகைப்பாடு செய்கிறார்.
- கடல் நீர் ஆவியாகி மேகமாக மாறுகின்றது. இதனை முல்லைப்பாட்டு, பரிபாடல்,திருக்குறள் ஆகிய இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
- திரவம் மீது அழுத்தினால் சுருக்க முடியாது என்று ஔவையார் தம்பாடலில் விளக்குகிறார். போர் வீரர்களின் காயத்தை ஊசியால் தைத்த செய்தியைப் பதிற்றுப்பத்து விளக்குகின்றது.
- தொலைவில் உள்ள பொருள்கள் அருகில் தோன்றச் செய்யலாம் என்பதைத் திருவள்ளுவமாலை தெரிவிக்கின்றது.
வழங்குதல் : வளர்தமிழ்
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வழங்குதல் : கனவு பலித்தது (கடிதம்)
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல் :
- மடிகணினி மூலம் தமிழின் சிறப்புகளைக் காட்டி , பாடத்தை வலுவூட்டுதல். மதிப்பீடு : வளர்தமிழ்
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல். வினாக்கள் : வளர்தமிழ்
- திணை எத்தனை வகைப்படும்?
- இனிமையான ஓசைகள் யாவை?
- தமிழில் கிடைக்கும் பழமையான இலக்கணநூல் எது?
வினாக்கள் : கனவு பலித்தது (கடிதம்)
- ஐம்பூதங்கள் யாவை?
- பதிற்றுப்பத்து கூறும் செய்தி யாது?
- ஔவையார் பாடலின் கருத்து யாது?
குறைதீர் கற்பித்தல் :
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு கூடுதல் வாசித்தல் பயிற்சியினையும் பாடப்பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
எழுதுதல் :
- சொல்வதை எழுதுதல் ,
- பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.
கற்றல் விளைவுகள் :
- தமிழின் நயங்களை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
- தமிழிலுள்ள அறிவியல் செய்திகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்பணி :
- உனக்குத் தெரிந்த காப்பியங்களைப் பட்டியலிட்டு வரச் சொல்லுதல், தமிழின் சிறப்பை விளக்கும் கவிதைகளை அறிந்து எழுதி வரச் சொல்லுதல்.