7 – ஆம் வகுப்பு – தமிழ் – பாடக்குறிப்பு – ஜுலை இரண்டாவது வாரம் (11.07.22 முதல் 15.07.22 வரை )
தலைப்பு :
- குற்றியலுகரம், குற்றியலிகரம்
பாடத்தின் தன்மை :
- குற்றியலுகரம் , குற்றியலிகரம் பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மரக்கிளை வகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
- குற்றியலுகரம் , குற்றியலிகரம் கருத்துகளைக் குழுவாகப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.
துணைக் கருவிகள் :
- வரைபடம்
- மின்னட்டைகள்
- பொருத்தட்டை
பாட அறிமுகம் :
- சார்பு எழுத்து வகைகள் யாவை? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல் :
- ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
கற்றல் திறன்கள் :
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
- சான்றுகள் அறிதல்
மனவரைபடம் :
தொகுத்தல் :
- தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரைமாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும். குற்றியலுகரம் ஆறு வகைப்படும்:
- நெடில் தொடர் குற்றியலுகரம்
- ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
- உயிர்த் தொடர் குற்றியலுகரம்
- வன்தொடர் குற்றியலுகரம்
- மென் தொடர் குற்றியலுகரம்
- இடைத் தொடர் குற்றியலுகரம்
வழங்குதல் :
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல் :
- மடிகணினி மூலம் இலக்கணச் சிறப்புகளைப் பாடலாகக் காட்டி , பாடத்தை வலுவூட்டுதல்.
மதிப்பீடு :
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல். வினாக்கள்:
- சார்பெழுத்துகள் யாவை?
- குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
- குற்றியலிகரம் என்றால் என்ன?
குறைதீர் கற்பித்தல் :
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்குத் தமிழ் குற்றியலுகர வகைகளை மீண்டும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்,
எழுதுதல் :
- சொல்வதை எழுதுதல் ,
- பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்,
கற்றல் விளைவுகள் :
- குற்றியலிகர குற்றியலுகரங்களை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்பணி :
- குற்றியலுகர வகைகளைச் சான்றுடன் எழுதி வரச் சொல்லுதல்,