7 STD TAMIL LESSON PLAN FOR AUGUST 1ST WEEK (01.08.22 TO 05.08.22)
தலைப்பு :
- இந்திய வனமகன் (நேர்காணல்)
- நால்வகைக் குறுக்கங்கள்
- திருக்குறள்
பாடத்தின் தன்மை :
- செயற்கைக் காடு உருவாக்கும் செய்திகளை விளக்குவதால், மைசிந்தும் வகையைச் சார்ந்தது.
- தமிழில் உள்ள நால்வகைக் குறுக்கங்கள் பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மரக்கிளை வகையைச் சார்ந்தது.
- வாழ்வியல் சார்ந்த அறநெறியினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
- இந்திய வனமகன் குறித்த உண்மை நிகழ்வுக் கருத்துகளைக் குழுவாககப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.
- நால்வகைக் குறுக்கங்கள் கருத்துகளைக் குழுவாகப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.
- ஆசிரியர் குறட்பாவைச் சந்த நயத்துடன் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.
துணைக் கருவிகள் :
- காட்சிப்படம்
- மின்னட்டைகள்
- காடுகள் மாதிரி உருவம்
- வரைபடம்
- பொருத்தட்டை
- திருக்குறள் – நூல்
- விளக்கப்படம்
- ஒலிபெருக்கி
பாட அறிமுகம் :
- காடுகள் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
- சார்பு எழுத்துகளின்வகைகள் யாவை? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
- திருக்குறள் மற்றும் வள்ளுவர் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல் :
- இந்திய வனமகன் (நேர்காணல்), நால்வகைக் குறுக்கங்கள், திருக்குறள், பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
கற்றல் திறன்கள் :
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
- மையக்கருத்தை அறிதல்
- சான்றுகள் அறிதல்
மனவரைபடம் : இந்திய வனமகன் (நேர்காணல்)

மனவரைபடம் : நால்வகைக் குறுக்கங்கள்

மனவரைபடம் : திருக்குறள்

தொகுத்தல் : இந்திய வனமகன் (நேர்காணல்)
- 1979ல் பிரம்மபுத்திரா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. மரங்கள் இல்லாத தீவில் பாம்புகள் கரை ஒதுங்கின. சில பாம்புகள் இறந்தன. ஊர்ப் பெரியவர்கள் ‘தீவில் மரங்கள் இல்லாதது தான் காரணம்’ என்றனர். அவரிடம் தீவு முழுவதும் மரம் வளர்க்கும் எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.ஊர் மக்களிடம் தீவில் மரம் வளர்க்கலாம் என்று அவர் கூறிய போது , ஜாதவ்பயேங் தீவில் விதைகளை விதைக்கத் தொடங்கினார். நன்கு பராமரித்தார். ஆனால் அவைகள் முளைக்கவில்லை. வனத்துறை அறிவுறுத்தலால் மூங்கில் மரங்களை வளர்க்கத் தொடங்கினார். அவை நன்கு வளர ஆரம்பித்தது. அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். மூங்கிலைத் தவிர வேறு எந்த மரமும் இத்தீவில் வளரவில்லை .அசாம் வேளாண் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜாதுநாத் அவர்களின் அறிவுறுத்தலின் படி மண்புழுவுடன் சிவப்புக் கட்டெறும்பை அத்தீவு மண்ணில் விட்டார். சிறிது சிறிதாக மண்ணின் தன்மை மாறி பசும்புல்லும் மரங்களும் வளரத்தொடங்கின.மழை பெய்யாத காலங்களில் பானை பெரிய மூங்கில் துணை கொண்டு சொட்டு சொட்டாக நீரினை மரங்களுக்கு விட்டார். மரங்கள் பெருகி வளர்ந்து, அத் தீவு பெருங்காடானது.
தொகுத்தல் : நால்வகைக் குறுக்கங்கள்
- ஐகாரக்குறுக்கம் ஐகாரம் தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஐகாரக்குறுக்கம் எனப்படும். சொல்லுக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் குறுகும். சான்று: சைவம், சமையல்
- ஔகாரம் தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஔகாரக்குறுக்கம் எனப்படும். சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். சான்று: ஒளவையார், வௌவால்
- மகரம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும். சான்று: வலம் வந்தான்
- ஆய்தக்குறுக்கம் ஆய்தம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் எனப்படும். சான்று: கற்றீது.
தொகுத்தல் : திருக்குறள்
- பொறாமை கொண்டவருடைய செல்வம் , பொறாமை இல்லாதவருடைய வறுமை சான்றோரால் ஆராயப்படும். பிறருடைய குற்றத்தைக் காண்பது போல தன் குற்றத்தைக் காண்பவருக்கு வாழ்வில் துன்பம் இல்லை. நேருக்கு நேர் நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால், அவர் இல்லாத போது புறங்கூறல் கூடாது.செல்வங்களுள் சிறந்தது அருட்செல்வம்.பொருட்செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளது.பொருள் வரும் வழிகளை அறிதல், பொருள்களைச் சேர்த்தல், சேர்த்த பொருளைப் பாதுகாத்தல் ,பொருளைப் பிரித்துச் செலவு செய்தல் ஆகியன சிறந்த அரசின் செயல்கள் ஆகும்.
வழங்குதல் :
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல் :
- மடிகணினி மூலம் காடுகளின் நன்மைகளைக் காட்டி , பாடத்தை வலுவூட்டுதல்.
- மடிகணினி மூலம் இலக்கணச் சிறப்புகளைப் பாடலாகக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்,
- மடிகணினி அல்லது தொலைக்காட்சி மூலம் பாடல் காட்சிகளைக் காட்டி , பாடத்தை வலுவூட்டுதல். திருக்குறள் கதைகள் கூறி வலுவூட்டல்.
மதிப்பீடு :
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல். வினாக்கள்:
- ஜாதவ்பயேங் என்பவர் யார்?
- ஜாதவ்பயேங் காட்டை உருவாக்கிய இடம் எது?
- இந்தியாவின் வன மகன் யார்?
- மகரக்குறுக்கம் என்றால் என்ன?
- ஆய்தக்குறுக்கம் என்றால் என்ன?
- ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன?
- ஒருவன் தன் மனதில் எப்படிப்பட்ட நெறியினைக் கொண்டு வாழ்தல் வேண்டும்?
- சான்றோரால் ஆராயப்படுவது எது?
- எப்போது புறங்கூறுதல் கூடாது?
குறைதீர் கற்பித்தல் :
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு கூடுதல் வாசித்தல் பயிற்சியினையும் பாடப்பொருளின் சுருக்கத்தையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்குச் சார்பு எழுத்துகளின் வகைகளை மீண்டும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
எழுதுதல் :
- சொல்வதை எழுதுதல் ,
- பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.
கற்றல் விளைவுகள் :
- முயற்சி திருவினையாக்கும், மனமிருந்தால் மார்க்கமுண்டு, காடுகள் வளர்க்க வேண்டும் என்பதனை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
- குறுக்கங்களின் வகைகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
- திருக்குறளின் பாடல் வழி அறநெறிக் கருத்துகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்பணி :
- நேர்காணல் பகுதியைச் சுருக்கி வரச்சொல்லல்.
- குறு வினா விடைகளை ஏட்டில் எழுதி வரச் சொல்லுதல்.
- மனப்பாடக் குறட்பாக்களை நன்கு படித்து வரச் சொல்லல்,