7 STD Tamil lesson plan for August 4 th  Week (22.08.22 TO 24.08.22)

தலைப்பு :

  • வழக்கு, போலி        (22.08.22 TO 24.08.22)
  • I st Mit term test   (25.08.22 TO 26.08.22)

பாடத்தின் தன்மை :

  • தமிழில் உள்ள வழக்கு, போலிகளின் வகைகள் பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மரக்கிளை வகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

  • வழக்கு, போலிகளின் வகைகளைக் குழுவாகப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.

துணைக் கருவிகள்

  • வரைபடம்
  • மின்னட்டைகள்
  • பொருத்தட்டை

பாட அறிமுகம் :

  • வழக்கு மற்றும் போலி என்றால் என்ன? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல் :

  • ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள் :

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • சான்றுகள் அறிதல்

மனவரைபடம் :

தொகுத்தல் :

  • முன்னோர்கள் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.
  • வழக்கு இரண்டு வகைப்படும் . அவை யாவன:

இயல்பு வழக்கு :

  • ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும்.
  • இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். அவையாவன :
  • இலக்கணமுடையது,
  • இலக்கணப்போலி,
  • மரூஉ.

தகுதி வழக்கு :

  • ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.
  • தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
  • இடக்கரடக்கல்,
  • மங்கலம்
  • குழூஉக்குறி

போலி :

  • ஓர் எழுத்து நிற்கவேண்டிய இடத்தில் வேறு ஒர் எழுத்து வந்து நின்று அதே பொருள் மாறாது வருவது போலி எனப்படும். போலி மூன்று வகைப்படும். அவையாவன:
  • முதற்போலி
  • இடைப்போலி
  • கடைப்போலி

வழங்குதல் :

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல் :

  • மடிகணினி மூலம் சான்றுகளைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.

மதிப்பீடு

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.

வினாக்கள்:

  • வழக்கு எத்தனை வகைப்படும்?
  • தகுதி வழக்கு என்றால் என்ன?
  • போலி என்றால் என்ன?

உயர் சிந்தனை வினா (HOT)

  • மூவகைப் போலிக்குச் சான்று கூறி, விவரிக்க. 2. தகுதி வழக்கு அமையும் விதம் கூறுக.
  • இயல்பு வழக்கு அமைந்த சொற்களைக் கூறுக.

எளிய சிந்தனை வினா (LOT)

  • வழக்கு என்றால் என்ன?
  • வழக்கு எத்தனை வகைப்படும்?
  • போலி எத்தனை வகைப்படும்?

குறைதீர் கற்பித்தல் :

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்குத் சார்பு எழுத்துகளின் வகைகளை மீண்டும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
  • எழுதுதல்
  • சொல்வதை எழுதுதல்,
  • பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.

கற்றல் விளைவுகள் :

  • வழக்கு மற்றும் போலி குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி  :

  • வழக்கு மற்றும் போலிக்குரிய சான்றுகளைப் பட்டியலாக எழுதி வரச் சொல்லுதல்.

Leave a Comment