7 STD TAMIL LESSON PLAN – JULY 1 ST WEEK (04.07.22 TO 08.07.2022)

7 – ஆம் வகுப்பு – தமிழ் –  பாடக்குறிப்பு – ஜுலை முதல் வாரம் (04.07.22 முதல் 8.07.22 வரை ) 

இயல் – 1 தலைப்பு

  1. பேச்சு மொழியும் எழுத்து மொழியும்
  2. சொலவடைகள் (பொம்மலாட்டம்)

பாடத்தின் தன்மை :

  • பேச்சு மொழி, எழுத்து மொழி பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால்,
  • மைசிந்தும் வகையைச் சார்ந்தது.
  • கல்வியின் அவசியம் பற்றிய பல்வேறுசெய்திகளை விளக்குவதால், மைசிந்தும் வகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

  • உரைப்பத்தியைக் குழுவாககப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.
  • சொலவடைக் கருத்துகளைக் குழுவாககப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்,

துணைக் கருவிகள் :

  • மொழி வரலாறு – நூல்
  • விளக்கப்படம்
  • மின்னட்டைகள்
  • மடிகணினி
  • காட்சிப்படம்
  • மின்னட்டைகள்
  • பொருத்தட்டை

பாட அறிமுகம் :

  • மொழி குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்,
  • பொம்மலாட்டம் என்பது குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல் :

  • உரைப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்,
  • பொம்மலாட்டம் சுருக்கத்தினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள் :

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
  • மையக்கருத்தை அறிதல்

மனவரைபடம் : பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

மனவரைபடம் : சொலவடைகள் (பொம்மலாட்டம்)

தொகுத்தல் : பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

பேச்சுமொழி :

  • பேச்சுமொழியில் சொற்கள் குறுகி ஒலிக்கும்.
  • உணர்ச்சிக் கூறுகள் அதிகம்.
  • உடல்மொழி , குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடம் உண்டு.
  • திருத்தமான மொழிநடையில் அமைகிறது

எழுத்துமொழி :

  • எழுத்துமொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும்.
  • உணர்ச்சிக் கூறுகள் குறைவு.  
  • உடல்மொழி , குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை.
  • திருத்தமான மொழிநடையில் அமைவதில்லை

தொகுத்தல் : சொலவடைகள் (பொம்மலாட்டம்)

  • குடும்பத்தில் உள்ள பையன் ஒழுங்காகப் பள்ளிக் கூடம் செல்லாமல் ஊர்சுற்றிக் கொண்டே இருப்பான். வழக்கம் போலவே பள்ளிக் கூடத்தை விட்டு ஓட்டம் பிடிக்கின்றான். விளையாட யாராவது வருவார்களா? என்று பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது எறும்பு ,தேனீ , பொதிமாடு, ஆமை, முயல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக விளையாடக் கூப்பிட்டான். அவனுக்குப் புத்தி புகட்டும் வண்ணம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவை விளையாட மறுத்து விட்டன. ஈரமான குட்டிச் சுவர் மீது அவன் அமர்ந்தான். சுவர் இடிந்து, அதிலிருந்த பூச்சி, எறும்பு, வண்டு ஆகியன “உனக்குத் தான் வேலை இல்லை, நாங்கள் சேர்த்த பொருளை எல்லாம் உடைத்து விட்டாயே!” என்றுச் சொல்லி அவனைக் கடித்தன. மனம் மாறிய பையன் தன் அம்மாவிடம்,”உலகத்தில் ஈ, எறும்பு கூட சும்மா இல்லாமல் வேலை செய்கின்றன. படிப்பது தான் என் வேலை என்பதைப் புரிந்து கொண்டேன். இனி ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்கின்றேன்.” என்றான்.

வழங்குதல் : பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்,

வழங்குதல் : சொலவடைகள் (பொம்மலாட்டம்)

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்,

வலுவூட்டல் :

  • மடிகணினி மூலம் மொழியின் கூறுகளைக் காட்டி , பாடத்தை வலுவூட்டுதல்,

மதிப்பீடு

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல். வினாக்கள் : பேச்சு மொழியும் எழுத்து மொழியும்
  • எழுத்துமொழி என்றால் என்ன?
  • பேச்சுமொழி என்றால் என்ன?
  • மொழியின் முதல் நிலை யாது?

வினாக்கள் : சொலவடைகள் (பொம்மலாட்டம்)

  • பையன் எவற்றையெல்லாம் விளையாட அழைத்தான்?
  • எறும்பு கற்றுத் தந்த பாடம் யாது?
  • குட்டிச் சுவர் தந்த பாடம் யாது?

குறைதீர் கற்பித்தல் :

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு கூடுதல் வாசித்தல் பயிற்சியினையும் பாடப்பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.

எழுதுதல் :

  • சொல்வதை எழுதுதல் ,
  • பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்,

கற்றல் விளைவுகள் :

  • பேச்சு மொழி மற்றும் எழுத்து மொழியை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
  • கல்வியின் இன்றியமையாமையை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி :

  • குறு வினா மற்றும் சிறு வினா விடைகளைப் படித்து வரச் சொல்லல்

Leave a Comment