7 TAMIL LESSON PLAN – JUNE 4 TH WEEK (26.06.23 TO 30.06.2023)

7 ஆம் வகுப்பு – தமிழ்

பாடதிட்டக்  குறிப்பேடு

(26.06.23 TO 30.06.2023) – ஜூன் நான்காம் வாரம்

கவிதைப் பேழை

ஒன்றல்ல இரண்டல்ல – உடுமலை நாராயண கவி

பாடத்தின் தன்மை :

  • தமிழ் நாட்டின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

  • ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.

துணைக் கருவிகள்

  • உடுமலை நாராயண கவி கவிதைகள் – நூல்
  • விளக்கப்படம்
  • மின்னட்டை

பாட அறிமுகம்

  • உடுமலை நாராயண கவி குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல்

  • நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள்

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்

மனவரைபடம்

தொகுத்தல்

  • தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கமழும்.
  • சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.
  • முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி,
  • புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல் என வள்ளல்கள் பலர்
  • பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
  • பரிபாடல்,கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார்.

வழங்குதல்

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல்

  • மடிகணினி மூலம் பாடல் காட்சிகளைக் காட்டி , பாடத்தை வலுவூட்டுதல்.

மதிப்பீடு

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல். வினாக்கள்:
  • தேன் மணம் எங்கு கமழும்?
  • தமிழ்நாட்டில் விளைவன யாவை?
  • பகைவரை வென்று பாடுவது எது?

குறைதீர் கற்பித்தல்

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.

எழுதுதல்

  • சொல்வதை எழுதுதல் ,
  • பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.

கற்றல் விளைவுகள்

  • உடுமலை நாராயண கவி பாடல் வழி தமிழ்நாட்டின் புகழை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி

  • உடுமலை நாராயண கவி பிற கவிதைகளை அறிந்து எழுதி வரச் சொல்லுதல்.
  • குறுவிடைகளைப் படித்துவரச் சொல்லல்.

Leave a Comment