8 – ஆம் வகுப்பு – தமிழ்- பாடக்குறிப்பு – ஜுலை இரண்டாவது வாரம் (11.07.22  முதல்  15.07.22 வரை ) 

8 – ஆம் வகுப்பு – தமிழ் –  பாடக்குறிப்பு – ஜுலை இரண்டாவது வாரம் (11.07.22  முதல்  15.07.22 வரை ) 

தலைப்பு : எழுத்துகளின் பிறப்பு

பாடத்தின் தன்மை :

  • எழுத்துகளின் ஒலிப்பிறப்பு பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மரக்கிளை வகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

  • எழுத்துகளின் பிறப்பு கருத்துகளைக் குழுவாகப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.

துணைக் கருவிகள்

  • வரைபடம்
  • மின்னட்டைகள்
  • பொருத்தட்டை

பாட அறிமுகம் :

  • அ, உ,க,ப ஆகிய எழுத்துகளை ஒலிக்கச் செய்து, அவை எதன் மூலம் ஒலிக்கின்றன? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல் :

  • ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள் :

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
  • சான்றுகள் அறிதல்

மனவரைபடம் :

தொகுத்தல் :

உயிர் எழுத்துப் பிறப்பு:

  • 12 – கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும்
  • அ.ஆ – வாய் திறக்க, பிறக்கும்
  • இ,ஈ,எ,ஏ,ஐ – நாக்கின் அடி ஓரம் மேல் வாய்ப்பல் பொருந்த, பிறக்கும்
  • உ,ஊ,ஒ,ஓ,ஔ இதழ் குவிய பிறக்கும்

மெய்யெழுத்துப் பிறப்பு:

  • வல்லினம் : மார்பு, மெல்லினம் : மூக்கு , இடையினம் : கழுத்து

சார்பெழுத்துப் பிறப்பு:

  • ஆய்தம் : வாயைத் திறக்க, மற்ற சார்பெழுத்து  தத்தம்  முதலெழுத்துகள்  தோன்றும் இடம்

வழங்குதல் :

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்,

வலுவூட்டல் :

  • மடிகணினி மூலம் இலக்கணச் சிறப்புகளைப் பாடலாகக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்,

மதிப்பீடு :

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்,

வினாக்கள்:

  • உயிர் எழுத்துகள் பிறக்கும் இடங்கள் யாவை?
  • வல்லின மெய் பிறக்கும் இடம் யாது?
  • மெல்லின மெய் பிறக்கும் இடம் யாது?

குறைதீர் கற்பித்தல் :

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்குத் தமிழ் எழுத்துப் பிறப்புகளைப் பற்றிய கருத்துகளை மீண்டும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்,

எழுதுதல்

  • சொல்வதை எழுதுதல், பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.

கற்றல் விளைவுகள் :

  • தமிழ் எழுத்துப் பிறப்புகளைப் பற்றிய கருத்துகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி :

  • தமிழ் எழுத்துப் பிறப்புகளைப் பற்றிக் கட்டுரை எழுதிவரச் சொல்லல்,

Leave a Comment