8 STD TAMIL LESSON PLAN FOR AUGUST 1ST WEEK (01.08.22 TO 05.08.22)
தலைப்பு :
- வெட்டுக்கிளியும் சருகுமானும்
- வினைமுற்று
- திருக்குறள்
பாடத்தின் தன்மை :
- வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையினை விளக்குவதால், மைசிந்தும் வகையைச் சார்ந்தது.
- வினைமுற்று பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மரக்கிளை வகையைச் சார்ந்தது.
- வாழ்வியல் சார்ந்த அறநெறியினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
- வெட்டுக்கிளியும் சருகுமானும் கதைக் கருத்துகளைக் குழுவாகப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.
- வினைமுற்றுக் கருத்துகளைக் குழுவாகப்படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.
- ஆசிரியர் குறட்பாவைச் சந்த நயத்துடன் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.
துணைக் கருவிகள் :
- காட்சிப்படம்
- மின்னட்டைகள்
- பொருத்தட்டை
- மாதிரி உருவம் (வெட்டுக்கிளி, மான், சிறுத்தை)
- திருக்குறள் – நூல்
- விளக்கப்படம் – ஒலிபெருக்கி
பாட அறிமுகம் :
- காட்டு விலங்குகள் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
- வினை என்றால் என்ன ? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்,
- திருக்குறள் மற்றும் வள்ளுவர் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல் :
- வெட்டுக்கிளியும் சருகுமானும் ,வினைமுற்று, திருக்குறள் , பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
கற்றல் திறன்கள் :
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
- மையக்கருத்தை அறிதல்
- சான்றுகள் அறிதல்
மனவரைபடம் : வெட்டுக்கிளியும் சருகுமானும்

மனவரைபடம் : வினைமுற்று

மனவரைபடம் : திருக்குறள்

தொகுத்தல் : வெட்டுக்கிளியும் சருகுமானும்
- காட்டில் ஓடை யின் பக்கம் குறிஞ்சிப்புதர் அருகே கூரன் என்ற சருகுமான் வருகின்றது .அங்கிருந்த வெட்டுக்கிளி பேச்சு தொடங்கல்.இருவரும் நலம் விசாரித்துக் கொள்கின்றனர். பித்தக்கண்ணு என்ற சிறுத்தைத் துரத்துவதை வெட்டுக்கிளியிடம் மான் கூறி,மான் குறிஞ்சிப்புதர் அடியில் ஒழிந்து கொண்டு, வெட்டுக்கிளியிடம் அமைதியாக இருக்க வேண்டுகோள் வைத்தது.பித்தக்கண்ணு வந்ததும் வெட்டுக்கிளிக்கு மகிழ்ச்சி. வேண்டுகோளை மறந்து புதர் மீது காட்டிக் கொடுப்பது போல் குதித்தல். பித்தக்கண்ணு கண்டுபிடிக்க முடியாமல் செல்லல். கோபத்தில் கூரன் வெட்டுக்கிளிக்கு எச்சரிக்கை செய்தது.
தொகுத்தல் : வினைமுற்று
- செய்பவர்,கருவி,காலம்,நிலம்,செயல்,செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படை யாகக் காட்டும் தெரிநிலை வினைமுற்று. சான்று : எழுதினாள்
- செயலைச்செய்ய ஏவும் வினைமுற்று ஏவல் வினைமுற்று – சான்று:எழுது
- காலம் வெளிப்படையாகக் காட்டாது, செய்பவரை வெளிப்படையாகக் காட்டும், குறிப்பு வினைமுற்று – சான்று: பொன்னன்
- வாழ்த்துதல், வைதல், வேண்டல் ஆகிய பொருளில் இருதிணை ஐம்பால், மூவிடங்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று. சான்று: வாழ்க
தொகுத்தல் : திருக்குறள்
- நடுவுநிலை உள்ளவர் , இல்லாதவர் அவருக்குப் பின் புகழ்,பழி அறியலாம்.துலாக்கோல் போன்று சமமாக சான்றோர் செயல்படல். மனம் அடக்காதவர் பசுந்தோல் போர்த்திய புலி போல். நேரான அம்பு கொடிது, வளைந்த யாழ் இனிது, மக்கட்பண்பால் உணரல்.கள்ளலாதவர் களர் நிலம்.விலங்கு மனிதர் வேறுபாடே கற்றார், கல்லாதார் வேறுபாடு. வரும் முன் காக்காதவன் வாழ்க்கை வைக்கோல் போர் நெருப்பிடம் வைத்தது போல்.தன் குற்றம் பார்த்து பிறர் குற்றம் காக்கின் பழியில்லை . இடம் அறியாமல் செயலும் , தொடக்கமும் கூடாது. கப்பல் கரையில் ஓடா, தேர் கடலில் ஓடா, உரிய இடமே சிறப்பு.
வழங்குதல் :
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி , ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல் :
- மடிகணினி மூலம் காட்டு விலங்குகளின் வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்டி , பாடத்தை வலுவூட்டுதல்.
- மடிகணினி அல்லது தொலைக்காட்சி மூலம் பாடல் காட்சிகளைக் காட்டி , பாடத்தை வலுவூட்டுதல். திருக்குறள் கதைகள் கூறி வலுவூட்டல்.
மதிப்பீடு :
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல். வினாக்கள்:
- கூரன் என்பது யார்?
- பித்தக்கண்ணு என்பது யார்?
- கூரம் மறைந்திருந்த இடம் எது?
- வினைச்சொல் என்றால் என்ன?
- வினைமுற்று எத்தனை வகைப்படும்?
- தெரிநிலைவினைமுற்று என்றால் என்ன?
- சான்றோர்க்கு அழகாவது யாது?
- பழியின்றி வாழும் வழி எது?
- பசுந்தோல் போர்த்திய புலி போன்றவர் யார்?
குறைதீர் கற்பித்தல் :
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு கூடுதல் வாசித்தல் பயிற்சியினையும் பாடப்பொருளின் சுருக்கத்தையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
எழுதுதல் :
- சொல்வதை எழுதுதல் ,
- பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.
கற்றல் விளைவுகள் :
- உண்மையான நண்பனை ஆபத்தில் அறிந்து கொள் என்பதனை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
- வினைமுற்று வகைகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
- திருக்குறளின் பாடல் வழி அறநெறிக் கருத்துகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்பணி :
- கதைப் பகுதியைச் சுருக்கி எழுதி வரச்சொல்லல்.
- குறு வினா விடைகளை ஏட்டில் எழுதி வரச் சொல்லுதல்.
- மனப்பாடக் குறட்பாக்களை நன்கு படித்து வரச் சொல்லல்.