8 – ஆம் வகுப்பு – தமிழ் – பாடக்குறிப்பு – ஜுலை முதல் வாரம் (04.07.22 முதல் 8.07.22 வரை )
இயல் – 1 தலைப்பு
- தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- சொற்பூக்கள்
பாடத்தின் தன்மை :
- தமிழ் வரிவடிவ வளர்ச்சி பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மைசிந்தும் வகையைச் சார்ந்தது.
- பழந்தமிழர்கள் பயன்படுத்திய அருந்தமிழ்ச் சொற்கள் பற்றிய பல்வேறு செய்திகளை விளக்குவதால், மைசிந்தும் வகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
- உரைப்பத்தியைக் குழுவாகப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.
- சொற்பூங்காக் கருத்துகளைக் குழுவாககப் படித்து, அறிந்து மாணவர்கள், குழுவாகக் கற்றல்.
துணைக் கருவிகள் :
- மொழி வரலாறு – நூல்
- விளக்கப்படம்
- மின்னட்டைகள்
- மடிகணினி
- காட்சிப்படம்
- மின்னட்டைகள்
- பொருத்தட்டை
பாட அறிமுகம் :
- கல்வெட்டு குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
- பூங்கா என்பது குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்,
வாசித்தல் :
- உரைப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்,
- சொற்பூங்கா சுருக்கத்தினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்,
கற்றல் திறன்கள் :
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
- மையக்கருத்தை அறிதல்
- உரக்கப் படித்தல்
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
- மையக்கருத்தை அறிதல்
மனவரைபடம் – தமிழ் வரிவடிவ வளர்ச்சி

மனவரைபடம் – சொற்பூக்கள்

தொகுத்தல் – தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- தொடக்க காலத்தில் எழுத்து ஒலி,வடிவம் குறிக்காது ஓவிய வடிவமாகவே இருந்தது.
- ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை ஒலி எழுத்து நிலை என்பர். பழைய வரி வடிவங்களைக் கோயில் செப்பேடுகள் மற்றும் கருங்கல் சுவர்களில் காணலாம்.
- வரிவடிவங்களை வட்டெழுத்து,தமிழெழுத்து என்று இரு வகையாகப் பகுக்கலாம்.
- சுவடி , கல்வெட்டு ஆகியவற்றில் , எழுத்தில் புள்ளியிட்டால் எழுத்து சிதையும் எனவே , எழுத்துகள் புள்ளியிடாது எழுதல் வழக்கமானது.
- காலம் மற்றும் அறிவியல் சாதனங்களின் வளர்ச்சியால் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
- வீரமாமுனிவர், பெரியார் ஆகியோர் எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டனர்.
தொகுத்தல் – சொற்பூக்கள்
- ஓரெழுத்தொருமொழி :
- உயிர் வரிசை :6
- ம வரிசை :6
- த,ப,ந வரிசை : ஐந்து ஐந்து(15)
- க,ச,வ வரிசை : நான்கு நான்கு(12)
- ய வரிசை:1
- நொ,து குறில் :2
- மொத்தம் : 42 எழுத்துகள்
- யா – யாது, யாவர், யாவள்,
- யாங்கு,யாண்டு, யார், யாவை
- மா – மாநாடு,மாநிலம்,
- மாஞாலம்,மாநிறம்,
- ஈ – ஒலிக்குறிப்பு , மாட்டு ஈ, தேன் ஈ, ஈக, ஈ.
- போ,வா,நீ,சூ, சே,சை,சோ – இக்காலத்தில் வழங்கும் சொற்கள்.
- ஆன் -ஆ , மான் – மா , கோன் – கோ , தேன் – தே, பேய் – பே ஆகியது.
- எட்டத்தில் போகின்றவனை ஏய் என்று அழைத்தல் , ஏய் – கூடு , பொருத்து , சேர் பொருள். ஏ – ஏவும் அம்பு,
- கடமை புரிபவன் ஏவலன், அம்பு விடும் கலை ஏகலை, அதில் வல்லவன் ஏவலன்.
வழங்குதல் – தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வழங்குதல் – சொற்பூக்கள்
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல் :
- மடிகணினி மூலம் மொழியின் கூறுகளைக் காட்டி , பாடத்தை வலுவூட்டுதல்,
மதிப்பீடு :
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்
- வினாக்கள் : தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- ஓவிய எழுத்து என்றால் என்ன?
- ஒலி எழுத்து நிலை என்பது யாது?
- வரிவடிவ வகை யாது?
வினாக்கள் : சொற்பூக்கள்
- கல்லில் தேய்மானம் போல் —— லிலும் தேய்மானம் உண்டு,
- மா என்ற ஓரெழுத்தொரு மொழிச் சொல் மாற்றம் குறித்து எழுதுக,
- ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கும் சொல் எது?
குறைதீர் கற்பித்தல் :
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு கூடுதல் வாசித்தல் பயிற்சியினையும் பாடப்பொருளினையும் மீண்டும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
எழுதுதல் :
- சொல்வதை எழுதுதல் ,
- பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்,
கற்றல் விளைவுகள் :
- தமிழில் ஏற்பட்ட வரிவடிவ வளர்ச்சி குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
- பழந்தமிழர்கள் பயன்படுத்திய அருந்தமிழ்ச் சொற்கள் பற்றிய பல்வேறு செய்திகளை அறிதல்
தொடர்பணி :
- குறு வினா மற்றும் சிறு வினா விடைகளைப் படித்து வரச் சொல்லல்.