8 TAMIL LESSON PLAN – JUNE 4 TH WEEK (26.06.23 TO 30.06.2023)

8 ஆம் வகுப்பு – தமிழ்

பாடதிட்டக்  குறிப்பேடு

(26.06.23 TO 30.06.2023) – ஜூன் நான்காம் வாரம்

கவிதைப் பேழை

தமிழ் மொழி மரபு – தொல்காப்பியர்

பாடத்தின் தன்மை :

  • தமிழ் நாட்டின் மரபினை மட்டும் , இக்கவிதைப்பேழைப் பகுதி விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

  • ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு, பகுதியைப் படித்து மாணவர்கள், தானே கற்றல்.

துணைக் கருவிகள்

  • தொல்காப்பியம் மூல நூல்
  • விளக்கப்படம்
  • மின்னட்டை

பாட அறிமுகம்

  • நீவிர் அறிந்த தமிழ் மரபுகள் குறித்து அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல்

  • அளபெடை மற்றும் நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள்

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்

மனவரைபடம்

தொகுத்தல்

  • உலகம் நிலம் , நீர், காற்று, தீ, வானம் ஆகிய ஐம்பூதங்களால் ஆனது. உலகப் பொருள் அந்த ஐம்பூதங்களால் ஆனது.
  • உலகப்பொருள் இருதிணை,ஐம்பால் எனப் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ் மரபு.
  • உலகப்பொருள் திணை , பால் வேறுபாடறிந்து கூறுதல் வேண்டும்.
  • தமிழ்ச் சொற்களில் மரபு மீறினால் பொருள் மாறும்.

வழங்குதல்

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி ,அனைத்தும் அடங்கிய ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல்

  • மரபுச் சொற்கள் சிலவற்றைக் கூறி பாடத்தை வலுவூட்டுதல் செய்தல்.

மதிப்பீடு

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல். வினாக்கள்:
  • பறவைகள் எங்கு பறந்து செல்கின்றன?
  • இயற்கையைப் போற்றுதல் யாருடைய மரபு?
  • பகைவரை வென்று பாடுவது எது?

குறைதீர் கற்பித்தல்

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்குப் பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே கூடுதல் பயிற்சி அளித்தல்.

எழுதுதல்

  • சொல்வதை எழுதுதல் ,
  • பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.

கற்றல் விளைவுகள்

  • தொல்காப்பியம் பாடல் வழி தமிழ்நாட்டின் மரபுகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி

  • தெரிந்து கொள்வோம் பகுதியினை (பக்கம் -6) மாணவர்களைப் படித்து வரச்சொல்லல்.

Leave a Comment