8 ஆம் வகுப்பு – தமிழ்
பாடதிட்டக் குறிப்பேடு
(27.06.22 முதல் 01.07.2022) – ஜூன் நான்காம் வாரம்
கவிதைப் பேழை
தமிழ் மொழி மரபு – தொல்காப்பியர்
பாடத்தின் தன்மை :
- தமிழ் நாட்டின் மரபினை மட்டும் , இக்கவிதைப்பேழைப் பகுதி விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
- ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு, பகுதியைப் படித்து மாணவர்கள், தானே கற்றல்.
துணைக் கருவிகள்
- தொல்காப்பியம் மூல நூல்
- விளக்கப்படம்
- மின்னட்டை
பாட அறிமுகம்
- நீவிர் அறிந்த தமிழ் மரபுகள் குறித்து அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு , அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல்
- அளபெடை மற்றும் நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
கற்றல் திறன்கள்
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
மனவரைபடம்

தொகுத்தல்
- உலகம் நிலம் , நீர், காற்று, தீ, வானம் ஆகிய ஐம்பூதங்களால் ஆனது. உலகப் பொருள் அந்த ஐம்பூதங்களால் ஆனது.
- உலகப்பொருள் இருதிணை,ஐம்பால் எனப் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ் மரபு.
- உலகப்பொருள் திணை , பால் வேறுபாடறிந்து கூறுதல் வேண்டும்.
- தமிழ்ச் சொற்களில் மரபு மீறினால் பொருள் மாறும்.
வழங்குதல்
- மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி ,அனைத்தும் அடங்கிய ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல்
- மரபுச் சொற்கள் சிலவற்றைக் கூறி பாடத்தை வலுவூட்டுதல் செய்தல்.
மதிப்பீடு
- மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல். வினாக்கள்:
- பறவைகள் எங்கு பறந்து செல்கின்றன?
- இயற்கையைப் போற்றுதல் யாருடைய மரபு?
- பகைவரை வென்று பாடுவது எது?
குறைதீர் கற்பித்தல்
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்குப் பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே கூடுதல் பயிற்சி அளித்தல்.
எழுதுதல்
- சொல்வதை எழுதுதல் ,
- பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.
கற்றல் விளைவுகள்
- தொல்காப்பியம் பாடல் வழி தமிழ்நாட்டின் மரபுகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்பணி
- தெரிந்து கொள்வோம் பகுதியினை (பக்கம் -6) மாணவர்களைப் படித்து வரச்சொல்லல்.