9 – ஆம் வகுப்பு – தமிழ் – பாடக்குறிப்பு – ஜுலை இரண்டாவது வாரம் (11.07.22 முதல் 15.07.22 வரை )
இயல் 2 : நீரின்றி அமையாது உலகம்
விளைவு :
- நீர்நிலைகளை பாதுகாத்தல் – கருத்தரங்கில் கருத்துகளை வெளிப்படுத்த அறிதல்
உணர்தல் :
- நீரை வீணாக்காமல் சேமிக்கும் வழிகளை அறிதல், நீர் மேலாண்மையை அறிதல்.
முன்னறிவு :
- ஆற்று நீருக்கும் மழை நீருக்கும் கடல் நீருக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
- நீர் பற்றிய திரையிசைப் பாடல்கள் இரண்டு கூறுக
விதைநெல் :
- கருத்தரங்க வடிவிலான பாடத்தின் வழி நீரின் தேவையை உணர்தல்,
விதைத்தல் :
- வான் சிறப்பு , தண்னீரின் இன்றியமையாமை – மழையின் சிறப்பு, ஏரி, ஊருணி, கண்மாய், தமிழ் மக்களும் தண்ணீரும் – குளித்தல் – குளிர்த்தல் – சனி நீராடு – இன்றைய வாழ்வில் தண்ணீர் – ஏரிகளைத் தூர்வாருதல்
- மரபார்ந்த அணுகுமுறை – நீர் மேலாண்மை பற்றி விளக்குதல். கருத்துப்புனைவு :
கருத்துத் தூவானம் :
- நீரின் தேவை, சேமிக்கும் முறை பற்றித் தொகுத்தரைத்தல் – மாணவர்கள் கலந்துரையாடல்
விளைச்சல் :
- நீர்நிலைகளின் பெயர்களை எருதுக,
- நீர் மேலாண்மைக்கான திட்டங்கள் யாவை?
சங்கிலிப் பிணைப்பு :
- மழைநீர் சேமிப்பு முறை பற்றி எழுதச் செய்தல்,
- நிலத்தடி நீர் மேலாண்மை குறித்துக் கட்டுரை எழுதச் செய்தல்