9 STD TAMIL LESSON PLAN FOR AUGUST 1ST WEEK (01.08.22 TO 05.08.22)
தலைப்பு :
- தண்ணீர்
- துனை வினைகள்
நோக்கம் :
- கந்தர்வன் அடுதிய தண்ணீர்’ சிறுகதையின் வழி நீரின் இன்றியமையாமையை உணர்தல்.
- மாணவர்கள் துணை வினைகள் குறித்து அறிந்து கொள்ளல்,
உணர்தல் :
- நீரைச் சேமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிதல்
- தற்காலத் தமிழில் ஆம், ஆயிற்று. காட்டு போன்ற சொற்கள் துணைவினைகளாக வழங்கப்படுகின்றன.
பாட அறிமுகம்:
- உங்கள் பகுதிகளில் தண்ணீர் செழிப்பாக வக்கிறதா ?’ என்று மாணவர்களிடம் கேட்டல்,
- பணம் இருக்கிறது – போயிருக்கிறேன் – இவற்றில் கரு எனும் சொல்லின் பொருள் குறித்து வினவுதல்.
விதைநெல் :
- கந்தர்வன் எழுதியுள்ள சிறுகதை ,
- துனைவினை – கூட்டு வினை பற்றிக் கூறித் துணை வினையின் பொருள் கொள்ளும் முறை பயன்பாடு குறித்து விளக்குதல்
விதைத்தல் : தண்ணீர்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீரின்றித் தவிக்கும் சிற்றூரின் நிலை – தொடரியின் வருகை – ஊர் மக்கள் தொடரியில் தண்ணீர் பிடிக்க ஒருதல் – இந்திரா குடம் எடுத்துச் செல்லல் – ஊரில் நிலவும் நீர்த் தட்டுப்பாடு- இந்திராவின் கனவு – இந்திரா இறங்க முடியாமல் தொடர் வண்டியில் செல்லல் -பெற்றோர் உறவினர் தேடுதல் – இந்திரா தண்ணீர் குடத்துடன் வருதல் என விவரித்தல்.
விதைத்தல் : துனை வினைகள்
- தனி விளையடிகள் கொண்ட வினைச் சொற்கள் – தனி வினை – படி, படிக்கிறேன்.
- கூட்டு வினையடிகள் கொண்ட வினைச்சொற்கள் கூட்டுவினை – தந்தியடித்தான், கண்டு பிடித்தான்
- முதல் உறுப்பாய் வந்து தன் அடிப்படைப் பொருள் தருவது முதல்வினை. முதல் வினைக்குத் ‘துணையாய் வேறு இலக்கணப் பொருள் தருவது துனை வினை
- பார்த்தேன் – முதல் வினை – பார்த்தல் எனும் அடிப்படைப்பொருள் ஓடப் பார்த்தேன் , துனை வினை, இதில் பார்த்தல் எனும் பொருள் தராமல் முயற்சி செய்தேன்’ எனும், பொருளைத் தருகிறது.
கருத்துப் புனைவு : தண்ணீர்

கருத்துப் புனைவு : துனை வினைகள்

கருத்துத்தூவானம் : தண்ணீர்
- நீரின்றித் தவிக்கும் சிற்றூரின் நிலை – தொடரியில் தண்ணீர் பிடிக்கும் அவலம் , பற்றி தொகுத்துரைத்தல் – மாணவர்கள் – கலந்தரையாடல்
கருத்துத்தூவானம் : துனை வினைகள்
- ஒரு சொல் நேரடிப் பொருள் தராமல் முதல் வினைக்குத் துணையாய் வேறு பொருளில் வருவது துனைவினை என விளக்குதல்
மதிப்பீடு :
- இந்திராவின் கனவு என்ன?
- உலகில் நீர் இல்லையெனில் என்ன ஆகும்
- பொருத்தமான துணை வினையைப் பயன்படுத்துக
- மனிதனையும் விலங்குகளையும் (வேறு) —- மொழி
- காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) —–மொழி தமிழ்
தொடர்பணி :
- தன்னிர் வாகனம் வந்த நேரம்- கருமேகங்கள் திரண்டன – அப்போது கதையை நிறைவு செய்க
- சந்தையில் நடைபெறும் உரையாடலைத் துனை வினைகள் பயன்படுத்தி. எழுதுக.