9 STD Tamil lesson plan for August 4 th  Week (22.08.22 TO 24.08.22)

தலைப்பு :

  • இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் (22.08.22 TO 24.08.22)
  • I st Mit term test –   (25.08.22 TO 26.08.22)

துணைக்கருவிகள் :

  • விளக்கப்படம்,
  • மடிக்கணினி
  • இணையதளக் காட்சிகள்

நோக்கம் :

  • இணையவழிப் பயன்பாடு வாழ்வை எளிதாக்கி நேரத்தையும் உழைப்பையும் வீணாக்காமல் தடுக்கிறது என்பதை உரைநடைப்பகுதி விளக்கி நிற்கிறது.

கற்றல் திறன்கள் :

  • புதிய சொற்களை அடிக்கோடிடுதல்
  • அகராதிகளைக் கொண்டு பொருள் அறிதல்

பாட அறிமுகம்:

  • இணையம் என்றால் என்ன?
  • இணையத்தின் பயன்கள் யாவை?
  • ஆகிய வினாக்களைக் கேட்டுப் பாட அறிமுகம் செய்தல்

மனவரைபடம் :

தொகுத்தல் :

இணையப்பயன்கள்:

  • பேருந்து முன்பதிவு, விமான முன்பதிவுஇதங்கும் வேண்டிய விடுதிகள் முன்பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. அரசுக்கு செலுத்த சொத்து வரி, தண்ணீர் வரி ஆகியன இணையவழியில் செலுத்தப்படுகின்றன.பிறப்புச் சான்றிதழ், வருமானவரிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்றவை அரசால் மக்களுக்கு இணையம் மூலம் வழங்கப்படுகின்றன.

அட்டைப் பயன்படுத்தும் இயந்திரம்:

  • கையில் பணம் இல்லாமல் கடைக்குச் சென்று பொருள் வாங்கவும் மற்ற வணிகப் பரிமாற்றங்களுக்கும் இந்தக் கருவி பயன்படுகின்றது. இந்த இயந்திரத்தில் வங்கி அட்டையின் காந்தப்பட்டை இருக்கும் பகுதியைத் தேய்க்கும் போது வாடிக்கையாளரின் விவரங்கள், இணையத்தொடர்பின் மூலம் வங்கிக் கணினிக்குச் செல்கிறது.கணினியால் அட்டை ஆராயப்பட்டுக் கடவுச்சொல் சரிபார்க்கப்பட்டு பணப்பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கின்றது.

திறன் அட்டைக் கருவி:

  • தமிழகத்தில் குடும்பஅட்டைகள் மாற்றப்பட்ள்ளன. குடும்பத்தில் திறன் உள்ளவர்களின் அட்டைகளாக ஆதார் எண்கள், அலைபேசி எண், முகவரி ஆகிய விவரங்கள் சேர்த்து திறன்அட்டைகள் வழங்கப்படுகின்றன. நியாயவிலைக் கடையில் திறன்அட்டை விற்பனைக்கருவியில் வருடப்படுகின்றன.அங்கு விற்பனை செய்யப்படும் விவரங்கள் குறிப்பாக பதிவு செய்யப்பட்டு அலைபேசிக்குக் குறுஞ்செய்தியாக வரும்.

விளக்குதல் :

  • ஒளிப்படி இயந்திரம் – தொலைநகல் இயந்திரம் – தானியங்கி பண இயந்திரம் அட்டைத் தேய்ப்பி இயந்திரம் – திறனட்டைக் கருவி ஆளறிசோதனைக் கருவி – இணைய வணிகம் ஆகியவற்றை விரிவாக விளக்குதல்.

வலுவூட்டல்:

  • விரைவுத் துலங்கல் குறியீடு மூலம் இணையவழி பயன்படும் இயந்திரங்களின் காட்சிகள் காட்டுதல்.

குறைதீர் கற்பித்தல் :

  • மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு புரியாத பகுதிகளை மீண்டும் விளக்குதல்

கற்றல் விளைவு:

  • இணையவழி பயன்படுத்தும் இயந்திரங்களின் செயல்பாடுகள் பற்றி உணர்தல்.

மதிப்பீடு :

  • மாணாக்கர் திறன் அறிய சில வினாக்கள் கேட்டல்.

உயர் சிந்தனை வினா

  • இணையத்தால் இன்றைய மனிதன் வாழ்வு சுருங்கிவிட்டது என்பதை விளக்குக.

நடுத்தர சிந்தனை வினா

  • திறனட்டைக் கருவி பற்றிக் கூறுக.

எளிய சிந்தனை வினா

  • இணையவழி பயன்படும் இயந்திரங்கள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

தொடர்பணி :

  • இணையமும் அவற்றின் பயன்களும் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதி வரச் சொல்லுதல்.

Leave a Comment