9 – ஆம் வகுப்பு – தமிழ் – பாடக்குறிப்பு – ஜுலை முதல் வாரம் (04.07.22 முதல் 8.07.22 வரை )
இயல் – 1 தலைப்பு
- வளரும் செல்வம்
- தொடர் இலக்கணம்
விளைவு :
- தமிழில் அறிவியல் மாற்றத்திற்கேற்ப சொற்களை உருவாக்குவதை அறிதல்
- தொடர் வகைகள் பற்றி அறிதல்
உணர்தல் :
- பிறமொழிகளுக்குத் தமிழ்ச் சொற்கள் இங்கிருந்து சென்றுள்ளன என்பதை அறிதல்.
- வினை வகைகள் பற்றி அறிந்து பயன்படுத்துதல்
முன்னறிவு :
- “கம்ப்யூட்டர், லேப்டாப் என்னும் சொற்களைத் தமிழல் எவ்வாறு அழைக்கிறோம்? எனக் கேட்டல் ,
- நண்பா ! கேள்” என்பது எவ்வதைத் தொடர்? எனக் கேட்டல் .
விதைநெல் :
- உரையாடல் வடிவிலான பாடம் கலைச் சொற்களை மொழிபெயர்ப்புச் செய்தோ ஒலிபெயர்ப்புச் செய்தோ உருவாக்கலாம் என விளக்குகிறது.
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயபாட்டு வினை பற்றி அறிதல்,
விதைத்தல் – வளரும் செல்வம்
- பின்ன இலக்கங்களுக்கான தமிழ்ச் சொற்கள் 1/ 80- காணி 3/80- முக்காணி 1/ 1 / 320 – முந்திரி
- கலைச் சொல்லாக்கம் – நாவாய் – நேவி
- தமிழரின் கடல் ஆளுமை சார்ந்த சொற்கள் கிரேக்க மொழியில் இடம்பெற்றுள்ளன. எறிதிரை – எறுதிரான் , கலன் – கலயுகோய், தோணி – தோணீஸ் , கவிதை சார்ந்த சொற்கள் – பாய்யியோனா – மருத்துவம், பொறியியல், கணினி ,வின்வெளி சார்ந்த சொற்கள் தமிழில் பெருக வேண்டும்”
விதைத்தல் – தொடர் இலக்கணம்
- வினையின் பயன் எழுவாயைச் சேர்வது தன் வினை ,
- வினையின் பயன் பிறிதொன்றைச் சேர்வது பிறவினை,
- பிறவினை வி.பி போன்ற விகுதிகள் கொன்டு அமையும்.
- செய்பவரை முதன்மைப் படுத்துவது செய்வினை,
- செயப்படுபொருளை முதன்மைப்படுத்துவது செயப்பாட்டு வினை
கருத்துப் புனைவு – வளரும் செல்வம்

கருத்துப் புனைவு – தொடர் இலக்கணம்

கருத்துத் தூவானம் :
- பாடக் கருத்துகளைத் தொகுத்துரைத்து மாணவர்களைக் கலந்துரையாடச் செய்தல்,
- பயன்பாட்டுத் தொடர்கள் பற்றித் தொகுத்துரைத்தல்,
விளைச்சல் :
- ‘நாவாய்’ என்பதை ஆங்கிலத்தில் ———என்பர்.
- கலைச் சொற்கள் உருவாக்கத்திற்கான தேவையை மதிப்பிடுக
- மொழி பெயர் – தன் வினை, பிறவினைத் தொடராக மாற்றுக
- பதிவு செய் – செய்வினை, செயப்பாட்டு வினைத் தொடராக மாற்றுக.
சங்கிலிப் பிணைப்பு :
- அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதச் செய்தல்
- புதிய நாளிதழ் தொடங்குவதற்கான விளம்பரம் ஒன்றை வடிவமைக்கச் செய்தல்
- பலமொழிகளிலும் உங்கள் பெயரை எழுதி மகிழுங்கள் – http://my languages.org /tamil-write, php