9 ஆம் வகுப்பு – தமிழ்
பாடதிட்டக் குறிப்பேடு
(27.06.22 முதல் 01.07.2022) – ஜூன் நான்காம் வாரம்
கவிதைப் பேழை
தலைப்பு :
- தமிழோவியம் , தமிழ் விடு தூது
விளைவு :
- காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு கணினித் தமிழாய் வலம் வரும் நம் மொழிப்பின் சிறப்பறிதல்
- தமிழன் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு பற்றி அறிதல் .
உணர்தல்:
- தோற்றத்தில் தொன்மையும் தொழில் நுட்பத்தை ஏற்ற புதுமையும் கொண்டு தமிழ் திகழ்வதை உணர்தல் .
முன்னறிவு :
- தமிழுக்குப் பெருமை சேர்க்கும் கலக்கியங்களின் பெயர்களைக் கூறச் செய்தல்.
விதைநெல் :
- ஈரோடு தமிழன்பன் அவர்களின் தமிழோவியம், தமிழ் விருது கவிதைகள் வழித் தமிழின் சிறப்புகளை அறிதல்,
விதைத்தல் :
தமிழோவியம்
- “காலம் பிறக்கும் முன் தோன்றிய தமிழ், எக்காலமும் நிலைப்பது தமிழ் “
- சங்க இலக்கியங்கள்
- இலக்கண நூல்கள்
- திருக்குறள் முதலான நீதி இலக்கியங்கள்
- பக்தி இலக்கியங்கள்
- காப்பியங்கள் எனத் தமிழ் இலக்கியங்கள் வளமானவை
- குறைகள் சொல்வதை விடுத்துப் புதிதாய்த் தமிழ் வார்ப்போம்”
தமிழ் விடு தூது:-
- ” இனிக்கும் அமுதாய் அதை விட மேலாய் வீடுபேறு தரும் கனியே! முத்தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே! என் வேண்டுகோளைக் கேள்! குறவஞ்சி, பள்ளு என்ற சிறப்புகள் பெறுவர் புலவர்.
- தேவர்கள் முக்குணம் பெற்றிருக்க உனக்குப் பத்துக் குணங்கள் உள்ளன. வண்ணம் பத்துதான் நீயோ நூறு வண்ணங்கள் கொண்டுள்ளாய்.
- நாச்சவை ஆறு நீ தரும் செவிச்சுமை ஒன்பது
- அழகு எட்டு பெற்றுள்ளாய்’ எனத் தமிழின் சிறப்புகளை ‘ விளக்குதல்.
கருத்துப் புனைவு

கருத்துத் தூவானம்
- தமிழின் சிறப்புகளைத் தொடுத்துரைத்தல்
விளைச்சல் :
- தமிழோவியம் கவிதையில் உங்களை ஈர்த்த அடி குறித்து எழுதுக.
- தூது அனுப்பச் சிறந்த மொழி தமிழ் என்பதை விளக்குக
சங்கிலிப் பிணைப்பு
- ‘ கணினித் தமிழ்’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதி வரச் செய்தல்,