CLASS 10 TAMIL LESSON PLAN FOR JULY 3RD WEEK (18.07.22 TO 22.07.22)
தலைப்பு :
- புயலிலே ஒரு தோணி
- தொகைநிலைத் தொடர்கள்
- விருந்து போற்றுதும்!
- காசிக் காண்டம்
விளைவு :
- இயற்கையின் அசைவு சீற்றமாய், ஊழித் தாண்டவமாக மாறுகையில் மனிதர் எதிர்கொள்ளும் சவால்களை அறிதல். கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவும் அது போன்ற படைப்புகளை உருவாக்கவும் முனைதல்.
- சொற்றொடரில் தொகைநிலைத் தொடர்கள் பற்றி அறிதல்.
- தொகைநிலைகளின் தன்மைக்கேற்பத் தொடர்களைப் புரிந்து கொண்டு பயன்படுத்துதல்.
- நம் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பை உணர்ந்து பெருமிதத்துடன் பின்பற்றுதல்
- விருந்தினரை உளமாற வரவேற்று விருந்தளிக்கும் முறை பற்றி இலக்கியங்களில் அறிதல். .
உணர்தல் :
- கதை வழியே புயலின் சீற்றத்தை உணர்தல்.
- சொற்றொடரில் உருபுகள் தொக்கி வருவதனை உணர்தல்.
- தமிழரின் விருந்து போற்றுதல்
- தமிழர் மரபில் உணவோடு உணர்வையும் குழைத்துச் செய்த சமையல் விருந்தாகியதை உணர்தல்.
- விருந்தினர் மனம் மகிழக்கூடிய முறைகளில் விருந்தோம்புவதை பற்றி உணர்தல்.
முன்னறிவு :
- நீவிர் அறிந்த இயற்கைப் பேரிடர்களைக் கூறுக.
- நீவிர் கண்ட புயல்களைப் பற்றிக் கூறுக.
- என்பன போன்ற வினாக்களை மாணவர்களிடம் கேட்டல்.
- ‘கரும்பு தின்றான்’ என்ற தொடரில் மறைந்து வரும் உருபு எது? என மாணவர்களிடம் கேட்டல்.
- விருந்தினர் யாரென மாணவர்களிடம் கேட்டல்.
- உன் வீட்டிற்கு வரும் விருந்தினரை எவ்வாறு வரவேற்பாய்?
- நீங்கள் விருந்தினராக யாருடைய வீட்டிற்காவது சென்றதுண்டா? என மாணவர்களிடம் கேட்டல்.
விதைநெல் :
- புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினமான ‘புயலிலே ஒரு தோணி’ என்பது ப.சிங்காரம் இயற்றியது ஆகும். இப்புதினத்தின் ‘கடற்கூத்து’ என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதியே பாடப்பகுதியாக அமைந்துள்ளது.
- தொகைநிலைத் தொடரிலுள்ள ஆறு வகைகளை விளக்கிக் கூறுதல்.
- ‘விருந்து போற்றுதும் பாடத்தின் வழியே பண்டைத் தமிழரின் விருந்தோம்பல் பண்பையும், அறத்தில் சிறந்த வாழ்வியலையும் எடுத்துரைத்தல்.
- அதிவீரராம பாண்டியரின் காசிக்காண்டத்தின் வழியே விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தை அறிதல்.
விதைத்தல் :
- கதைப்பகுதியைக் குரல் ஏற்ற இறக்கத்துடன் கதைக்கு ஏற்றவாறு வாசித்தல்.
- புயல், கடல் கொந்தளிப்பு, இயற்கை சீற்றம் குறித்ததான காட்சிகளைக் காணொலிகளாகக் காட்டுதல்.
- விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.
- மின்னட்டைகள் வாயிலாக விளக்குதல்.
- பொருத்தட்டைகளைப் பயன்படுத்துதல்.
- அறுவகைத் தொகைநிலைத் தொடர்களுக்கிடையேயான வேறுபாட்டினை எடுத்துரைத்தல்.
- விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.
- விருந்து போற்றுதும் பாடத்தினை ஆசிரியர் வாசித்தல், மாணவரை வாசிக்கச் செய்தல்.
- ‘விருந்து’ தொடர்பான காணொலிகளைக் காட்டுதல்.
- ‘விருந்து’ தொடர்பான இலக்கியத் தொடர்களை தனியே எடுத்துக் கூறல்.
- விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.
- காசிக்காண்டம் செய்யுளை ஏற்ற இறக்கத்துடன் படித்தல். * இசையுடன் பாடுதல்.
- அதிவீரராம பாண்டியர் குறித்தான காணொலியைப் பார்க்கச் செய்தல்.
- விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.
கருத்துப்புனைவு – புயலிலே ஒரு தோணி :
கருத்துப்புனைவு – தொகைநிலைத் தொடர்கள் :
கருத்துப்புனைவு – விருந்து போற்றுதும்! :
கருத்துப்புனைவு – காசிக் காண்டம் :
கருத்துத்தூவானம் – புயலிலே ஒரு தோணி :
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழர்கள் பெருவாரியாகப் புலம்பெயர்தல் கதையாசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதை ‘புயலிலே ஒரு தோணி’ என்னும் புதினம் – இயற்கையின் சீற்றம் இடி, மின்னல், மழை, வெள்ளம் – கடலில் வெறிக்கூத்து – கப்பல் தாவிக் குதித்தல் – பாய்மரம் ஒடிதல் – மாலுமிகள் சரி செய்தல் – புயலின் பின் அமைதி – கரைக்குச் செல்லல் எனப் புயல் மழையால் ஏற்படும் காட்சிகளை விவரித்தல் – புயலின் தாக்கத்தை அடுக்குத் தொடர்களும் வருணனைகளும் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்குதல்.
கருத்துத்தூவானம் – தொகைநிலைத் தொடர்கள் :
- பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ மறைந்து இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால், அதனைத் ‘தொகைநிலைத் தொடர்’ என்பர். தொகைநிலைத்தொடர் ஆறு வகைப்படும்.
- வேற்றுமைத்தொகை – ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் உருபுகள் இடம்பெற்று வருவது. உ
- வினைத்தொகை – காலம் கரந்த பெயரெச்சம்
- பண்புத்தொகை – ஆகிய, ஆன என்னும் உருபுகள் மறைந்து வருவது.
- உவமைத்தொகை – போல, போன்ற என்னும் உவம் உருபுகள் மறைந்து வருவது.
- உம்மைத்தொகை – ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது.
- அன்மொழித்தொகை – தனக்கென்று தனியே உருபு இல்லாமல் வருவது.
கருத்துத்தூவானம் – விருந்து போற்றுதும்! :
- முன்பின் அறியாத புதியவர்களுக்கு விருந்தினர் என்று பெயர். விருந்தோம்பல் குறித்த இலக்கியச் செய்திகள்.
- அறவுணர்வும் தமிழர் மரபும்.
- இன்மையிலும் விருந்தோம்புகின்றவர் தமிழர்.
- தனித்து உண்ணாதவர் தமிழர்.
- நிலத்திற்கேற்ற விருந்து படைக்கும் இயல்பினர் தமிழர்.
- இரவிலும் விருந்தோம்பும் இயல்பினர் தமிழர்.
- இன்றைய நிலையில் விருந்தோம்பல்.
- வாழை இலையில் விருந்து படைக்கும் பாங்கு.
கருத்துத்தூவானம் – காசிக் காண்டம் :
- விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக ஒன்பது கூறுகளைக் குறிப்பிடுகிறது காசிக்காண்டம்.
- விருந்தினராக வருபவரை வியந்து உரைத்தல். நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல். வீட்டிற்குள் வருக என வரவேற்றல். விருந்தினரின் எதிரில் நிற்றல்.
- அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல்.
- அவர்கள் அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல்.
- அவர் விடைபெற்றுச் செல்லும் போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல். .
- அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல்.
விளைச்சல் :
- ‘புயலிலே ஒரு தோணி’ கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
- தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
- பண்புத்தொகை – விளக்குக.
- இன்மையிலும் விருந்தோம்பும் பண்டைத் தமிழரின் பண்பினை எடுத்தியம்புக.
- விருந்து என்பதன் பொருள் விளக்கம் தருக.
- அதிவீரராம பாண்டியர் – குறிப்பு வரைக.
- விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கம் பற்றிக் காசிக்காண்டம் கூறுவதனை எழுதுக.
சங்கிலிப்பிணைப்பு :
- நீங்கள் எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து விவரித்து எழுதுக.
- பாடப்புத்தகத்தில் பக். 42 இல் உள்ள கற்பவை கற்றபின் பகுதியை எழுதிவரச் செய்தல்.
- வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை, பசித்தவருக்கு உணவிடல் – இது போன்ற செயல்கள் குறித்து உங்கள் வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து வந்து கலந்துரையாடல் செய்க.
- நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக எழுதிப் படித்துக் காட்டுக.